Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                Font Problem         இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN  2454-1990
muthukamalam

முத்து: 10 கமலம்: 06
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank

Parable
குட்டிக்கதை

ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறீங்க...?


மகனுக்குத் தந்தைமேல் கோபம். அவருக்குக் காது கொஞ்சம் மந்தமாகிவிட்டது.

எதைச் சொன்னாலும் ‘என்னது?, என்னது?’ என்று மீண்டும் மீண்டும் கேட்கிறார். விளக்கிச் சொன்னாலும் சட்டென்று அவருக்குப் புரிவதில்லை.

எரிச்சலின் உச்சத்திலிருந்தான் மகன்.

‘‘என்னப்பா சொன்ன?’’ என்று மீண்டும் தந்தை கேட்க, மகன் கோபத்தில் கத்தினான்.

‘‘என்ன இது? எத்தனை தடவைதான் திரும்பத் திரும்பச் சொல்றது. ஒரு தடவை சொன்னா புரியாதா? புரியலைனா விட்டுற வேண்டியதுதானே. ஏன் உயிரை வாங்குறீங்க?’’ என்றபடி மீண்டும் கத்தினான்.



தந்தை அவனை அமைதியாகப் பார்த்தார். பிறகு மெதுவாய்ச் சிரித்தார்.

‘‘இவ்வளவு கோபமா சொல்றேன். நீங்க எதுக்குச் சிரிக்கிறீங்க?’’

தந்தை பதில் பேசவில்லை. தன் அறைக்குச் சென்றார். அங்கிருந்து ஒரு நோட்டுப் புத்தகத்தைக் கொண்டு வந்தார். அவரது பழைய டைரி. அதில் ஒரு பக்கத்தை மகனை வாசிக்கச் சொன்னார்.

‘‘அருண் மடியில் அமர்ந்து மரத்திலிருந்த காக்காவைக் காட்டி ‘அது என்ன?’ என்று கேட்டான். ‘காக்கா’ என்றேன். மீண்டும் மீண்டும் ‘அது என்ன?’ என்று கேட்டான். நானும் சொன்னேன். ஆனால், அவன் விடவில்லை. அந்த காகம் பறந்து செல்லும் வரை பல தடவை கேட்டுக் கொண்டே இருந்தான். நானும் சொல்லிக் கொண்டிருந்தேன். மகன் குரலைக் கேட்க கேட்க எனக்கு ஆனந்தமாயிருந்தது.’’

இதைப் படித்ததும் மகன் உணர்ச்சிபூர்வமாகத் தந்தையைப் பார்த்தான்.

‘‘அப்போ உனக்கு நான்கு வயது’’ என்றார் தந்தை.

மகனின் கண்களிலிருந்து கண்ணீர் வழியத் தொடங்கியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p206.html


Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



மொழிபெயர்ப்புக்கான சாகித்திய அகாதமி் விருது பெற்ற எழுத்தாளர் சா. தேவதாஸ் அவர்களிடமிருந்து தமிழ்நாடு முற்போக்கு கலை இலக்கிய மேடை அமைப்பின் படைப்பாக்க மேன்மை விருதினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (27-06-2015)










தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License