Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
About Us | Contact Us | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam

முத்து: 09 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank

Parable
குட்டிக்கதை

ஏன் திரும்பத் திரும்பக் கேட்கிறீங்க...?


ஒரு முறை ராஜகுருவை தெனாலிராமன் அவமானப் படுத்திவிட்டதாக தெனாலிராமன் மீது குற்றச்சாட்டு சுமத்தப்பட்டது.

தெனாலிராமனின் சமாதானத்தை அரசர் கேட்கத் தயாராக இல்லை.

ராஜகுருவை அவமதித்தது மன்னனையே அவமதித்ததாகும் என்று ராஜகுரு தெனாலிராமன் மீது குற்றம் சுமத்தினார்.

மன்னரும் ராஜகுருவையே தண்டனையைத் தெரிவிக்கும்படி சொன்னார்.

ராஜகுரு, "தெனாலிராமனை தலை மட்டும் மேலே தெரியும்படி மண்ணில் புதைத்து விட்டு யானையின் காலால் தலையை இடறச் செய்து கொல்ல வேண்டும்" என்று தண்டனையளித்தார்.

மன்னரும் " அப்படியே செய்யுங்கள்" என்று ஆணை பிறப்பித்தார்.

மன்னரின் ஆணையை நிறைவேற்றுவதற்காக காவலர்கள் தெனாலிராமனைக் காட்டுக்குள் இழுத்துச் சென்றனர்.

தெனாலிராமனும் வழியில் காவலர்களோடு என்னெனவோ பேச்சுக் கொடுத்துப் பார்த்தான்.

ஆனால் ராஜகுரு காவலர்களிடம், “தெனாலிராமனிடம் ஏதும் பேச வேண்டாம். அப்படி பேசினால், ஏதேனும் பேசித் தப்பிவிடுவான். அதனால் எதுவும் பேசாதீர்கள்” என்று எச்சரித்து அனுப்பியிருந்ததால் அவர்கள் எதுவும் பேசவில்லை.

ஊருக்கு எல்லையில் இருந்த காட்டில் ஒற்றையடிப்பாதை வழியே தெனாலிராமனை அழைத்துச் சென்றனர்.

மக்கள் நடமாட்டமில்லாத அமைதியாக இருந்த இடத்தில் ஒரு பெரிய பள்ளம் தோண்டி தெனாலிராமனை அந்தப் பள்ளத்தில் இறக்கி கழுத்தளவு மண்ணால் மூடி விட்டு யானையைக் கொண்டுவர அரண்மனைக்குச் சென்று விட்டார்கள்.



தெனாலிராமன் தப்பிச் செல்ல வழியறியாது திகைத்து மண்ணுக்குள் தவித்துக் கொண்டிருந்தான்.

சற்று தூரத்தில் ஒற்றையடிப் பாதை வழியாக யாரோ வருவது தெரிந்தது.

தெனாலிராமன் வந்தவரை, "அய்யா!" எனக் கூவி அழைத்தான்.

அருகில் வந்தவன் தன் முதுகில் இருந்த துணி மூட்டையைக் கீழே இறக்கி வைத்தான்.

"யாரையா உம்மை மண்ணுக்குள் புதைத்தது?" என்றான்.

இராமன் வந்தவனின் முதுகைப் பார்த்தான்.

அவன் ஒரு வண்ணான். மூட்டை சுமந்து முதுகு வளைந்து கூனனாகியிருக்கிறான் என்பதைத் தெரிந்து கொண்டான்.

சட்டென சமயோசிதமாய்ப் பேசினான் இராமன்.

"அய்யா! நானும் உம்மைப் போல கூனனாக இருந்தேன். ஒரு பெரியவர் என்னிடம் ஒரு நாள் முழுவதும் மண்ணுக்குள் புதைந்திருந்தால் கூன் நிமிர்ந்து விடும்” என்று சொன்னார்.

நான் காலை முதல் மண்ணுக்குள்ளேயே இருக்கிறேன். என்னைத் தூக்கி விடும் என் கூன் நிமிர்ந்து விட்டதா என்று பார்க்கலாம்" என்றான்.



கூனனும் இராமனை வெளியே எடுத்தான். இராமன் தன் கூன் நிமிர்ந்து விட்டதாக மகிழ்ச்சி கொள்வது போல நடித்தான்.

அதை உண்மையென நம்பிய கூனனாகிய வண்ணான் தன்னையும் மண்ணில் புதைத்து, தன் கூனல் நிமிர வழி செய்யும்படி வேண்டிக் கொண்டான்.

தெனாலிராமனும் வண்ணானைக் குழிக்குள் இறக்கி கழுத்து வரை மண்ணால் மூடிவிட்டுத் தன் வீடு நோக்கிச் சென்றான்.

யானையுடன் வந்த காவலர்கள் தாங்கள் விட்டுச் சென்ற இடத்தில் இராமனுக்குப் பதிலாக வேறொருவன் இருப்பதைப் பார்த்துத் திகைத்தனர்.

அந்த வண்ணானை அழைத்துக் கொண்டு மன்னரிடம் சென்று ராமனின் தந்திரத்தைக் கூறினர்.

ராமனின் திறமையைக் கண்டு அவனை மன்னித்து விடுதலை செய்தார் மன்னர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p207.html


Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)











தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License