அண்ணல் நபி (ஸல்) அவர்கள் ஒரு முறை மஸ்ஜிதுன் நபவியில் தோழர்களின் மத்தியில் உபதேசம் செய்து கொண்டிருந்த போது கந்தலுடையுடன் ஓர் ஏழை அங்கு வந்து கூட்டத்தினருடன் சேர்ந்து உட்காராமல் மாறாகக் கூச்சப்பட்டவராக நின்று கொண்டிருந்தார்.
இதனைக் கண்ட பெருமானார் (ஸல்) அவர்கள் அம்மனிதரை நோக்கி, “நண்பரே! நீங்கள் ஏன்? சபையில் உட்காராமல் தனித்து நிற்கிறீர்கள்?” என வினவினார்கள். அதற்கு அம்மனிதர் அல்லாவின் தூதரே! நானோ பரம ஏழை என்னுடைய உடையோ அதைவிட மோசம் தங்களின் மேலான சபையில் அமர்வதற்கு அருகதையற்றவன்” என்று கூறினார்.
அப்போது பெருமானார்(ஸல்) அவர்கள் எழுந்து வந்து அந்த ஏழையை அணைத்தவராக, “அன்பரே! அல்லாவின் முன்னிலையில் எல்லாரும் சமமே. நானும் ஒரு ஏழைதான். உலர்ந்த ரொட்டியும் பேரீச்சம் பழத்தையும் உண்டு வாழ்ந்த ஓர் ஏழைத்தாயின் வயிற்றில் பிறந்தவன் நான்” என்று கூறி அந்த ஏழையைத் தன் பக்கத்திலே அமர வைத்தார்கள்.
அண்ணல் நபியிடம் ஏழை, பணக்காரன் என்று எந்த வேறுபாடுகளுமில்லை.