Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 8
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

நாய்க்குச் சொர்க்கமா?


ஸ்ரீ கிருஷ்ணரின் அவதாரம் முடிவுக்கு வந்ததை அறிந்த பாண்டவர்களும் திரௌபதியும் உலக வாழ்வை முடித்துக் கொள்ள முடிவு செய்தனர். அதன்படி உயிருடன் சுவர்க்கம் செல்ல எண்ணினர் . .அதன்படி அனைத்து செல்வங்களையும் துறந்தனர். ஆசாபாசமற்றவர்களாய் அறுவரும் புறப்பட்டனர். இமயமலையைத் தாண்டி அப்பாலுள்ள மேரு மலையை நோக்கி நடந்தனர். அறுவரும் ஒருவர் பின் ஒருவர் தொடர்ந்து நடந்தனர். அவர்களுடன் ஒரு நாயும் நடந்தது.

நடந்துகொண்டே இருக்கையில் திடீரென திரௌபதி கீழே விழுந்தாள். அதைக் கண்ட பீமன் தருமரிடம் திரௌபதி உயிர்துறக்க என்ன காரணம் என்று கேட்டான்.

ஐவரிடமும் ஒரே மாதிரி அன்பு செலுத்தாமல் அர்ச்சுனனிடம் அதிக அன்பு செலுத்தினாள் அதன் காரணமாகவே உயிரை இழக்க நேரிட்டது. என்றார் திரும்பாமலே.

இப்போது ஐவரும் வரிசையாக நடந்தனர். சற்று நேரத்தில் சகாதேவன் கீழே விழுந்தான்.

திடுக்கிட்ட பீமன் அண்ணா, என்று கூவினான்.

சற்றும் பதறாத தருமர், இவனுக்குத் தான் சாஸ்த்திரத்தில் வல்லவன் என்ற கர்வம். அதுதான் இந்த நிலைக்கு காரணம் என்றவர் திரும்பாமலே மேலே நடந்தார்.

அடுத்து சிறிது நேரத்தில் நகுலன் உயிரற்று விழுந்தான்.

வழக்கம்போல் திரும்பிப் பார்க்காத தருமர், பீமா, இவனுக்குத் தான் மிகுந்த அழகன் என்ற கர்வம். அதனால் தான்... என்று சொன்னபடியே வேகமாக நடந்தார்.

அடுத்து அர்ச்சுனன் விழுந்ததைப் பார்த்துப் பதறிக் கதறினான் பீமன்.

"பீமா, இவனுக்குத் தான்தான் வில் வித்தையில் உலகிலேயே சிறந்தவன் என்ற கர்வம்" என்றபடியே நிற்காமலும் திரும்பாமலும் நடந்தார்.



சிறிது நேரம் சென்றது. பீமனுக்கும் தலைசுற்றத் தொடங்கியது கண்கள் மங்கத் தொடங்கியது.

அண்ணனைத் தொடர்ந்து செல்ல இயலாமல் உயிரற்று வீழ்ந்தான்.

'ம்... உலகிலேயே பலசாலி தான்தான் என்ற கர்வம் உனக்கு. என்று தனக்குள் பேசியவர் திரும்பிப் பாராமலேயே நடந்தார்.

வெகு தூரம் நடந்து நடந்து மேருமலையை அடைந்தார். அவருடன் அந்த நாயும் உடன் நின்றது. அங்கு தயாராக நின்றிருந்த இந்திரன் தன் புஷ்பக விமானத்தினின்றும் இறங்கி தருமர் முன் நின்றான். 'வருக வருக தர்மராஜரே வருக.தேவர்கள் அதிபதி இந்திரன் வணங்குகிறேன். உங்களை சுவர்க்கத்திற்கு அழைத்துச் செல்லவே வந்துள்ளேன். புஷ்பக விமானத்தில் ஏறுங்கள்"என்றபடி வணங்கி நின்றான்.

"வணங்குகிறேன் தேவாதி தேவரே. தேவர்கள் தலைவரே, முதலில் இந்த நாய் ஏறட்டும்" என்றபடி அந்த நாய் ஏற உதவினார்.

பதறிய இந்திரன்,"தர்மபுத்திரரே தாங்கள் மட்டுமே சுவர்க்கம் வரலாம் நாய்க்கு அங்கு இடமில்லை"என்றார்.

தன காலை விமானத்தில் வைத்தவர் உடனே அதை எடுத்து விட்ட தருமர் இந்திரனைப் பார்த்தார்.

"இதுவரை என் கூடவே பயணித்த இந்த நாயும் உடன் வர அனுமதித்தால் நான் சுவர்க்கம் வருவேன். இல்லையேல், என்னை நம்பி இதுவரை வந்த நாயை விடுத்து நான் மட்டும் வரும் நன்றி மறந்த செயலைச் செய்ய மாட்டேன். தங்களின் சுவர்க்கத்தை விட இந்த நாயின் நம்பிக்கைக்கு மதிப்பளிப்பதே சிறந்தது என்று நினைக்கிறேன். நானும் இந்த நாயுடன் இங்கேயே இருப்பேன். தாங்கள் செல்லலாம்"



இந்தச் சொற்களைக் கேட்ட அடுத்த கணம் அந்த நாய் நின்ற இடத்தில் தருமதேவன் நின்றார். இந்திரன் புன்னகையுடன் 'தருமரே, தாங்கள் பெயருக்கேற்றபடி இருக்கிறீர்களா என்பதை சோதிக்கவே நாங்கள் இருவரும் எண்ணினோம்.தாங்கள் தருமம் தவறாதவர் என்பதை நிரூபித்துவிட்டீர்கள். மிக்க மகிழ்ச்சி. இனி விமானத்தில் ஏறலாமே"என்றபடி அவருடன் சுவர்க்கம் நோக்கிப் பறந்தார் இந்திரன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p767.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License