Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 6
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


Parable
குட்டிக்கதை

பாவம்... நெருப்பைப் போன்றது!


குருசேத்திர யுத்தம் முடிந்தது. கௌரவர்கள் பூண்டோடு அழிந்தனர். பகவான் கிருஷ்ணரின் உதவியால் பாண்டவர்கள் வெற்றி பெற்றனர். அவரது வழி காட்டுதலுடனும் கருத்தொருமித்த சகோதரர்களின் ஒற்றுமையாலும் அஸ்தினாபுரத்தின் சக்ரவர்த்தியாக முடிசூட்டப்பட்டார் தருமபுத்திரர்.

இதையடுத்து பகவான் கிருஷ்ணரின் தலைமையில், சகோதரர்கள் புடைசூழ, தனது பெரிய தகப்பனாரான திருதராஷ்டிரரிடம் ஆசி பெற வந்தார் தருமர்.

துர்க்குணம் கொண்ட துரியோதனன் முதலான கௌரவர்களுக்குத் தந்தையாக இருந்தாலும், திருதராஷ்டிரர் இயல்பிலேயே நற்குணம் மிக்கவர். தன் சகோதரனான பாண்டுவின் மைந்தர்களிடம் அன்பும் பாசமும் கொண்டவர். பாண்டவர்களுக்காகத் தன் மகன்களிடம் அவர் பலமுறை பரிந்து பேசியும் பலன் இல்லை. விளைவு… யுத்தம்! அதில், மகன்கள் அனைவரையும் பறி கொடுத்த துக்கத்தில் ஆழ்ந்திருந்தார் திருதராஷ்டிரர்.

இந்த நிலையில்தான் அவரைச் சந்திக்க வந்தனர் பாண்டவர்கள். தம்மை வணங்கி நிற்கும் கிருஷ்ணரையும் பாண்டவர்களையும் கண்ட திருதராஷ்டிரர் துக்கம் தாளாமல் கதறி அழுதார்.

பகவான் கிருஷ்ணரும் தருமரும் நீதி நெறிகளை எடுத்துச் சொல்லி அவரைத் தேற்றினர். சற்று ஆறுதல் பெற்ற திருதராஷ்டிரர், “கிருஷ்ணா! நீயே பரம புருஷன். இந்த உலகில் நடக்கும் அனைத்து செயல்களுக்கும் நீயே காரணமானவன். உனையன்றி ஓர் அணுவும் அசைவதில்லை. துரோணர், பீஷ்மர் முதலான பெரியோர்களது ஆலோசனைப்படி நல்லாட்சி செய்ததால், என் தேசத்து மக்கள் மகிழ்ச்சியுடன் வாழ்ந்தனர். சிறந்த அரசன் என்று பெயர் பெற்ற எனக்கு, இவ்வளவு பெரிய துன்பம் எதனால் ஏற்பட்டது?” என்று துக்கத்துடன் கேட்டார்.

உடனே, “சக்ரவர்த்தியே, வேறு விஷயங்களைப் பேசி, துக்கத்தைக் கொஞ்சம் மறக்கலாமே!” என்ற கிருஷ்ண பரமாத்மா தன் பேச்சைத் தொடர்ந்தார்:

“பாண்டுவின் மைந்தரான தரும புத்திரர் அரச பொறுப்பு ஏற்றுள்ள இந்தத் தருணத்தில், அரச நீதி குறித்து எங்களுக்கு ஒரு சந்தேகம். அதை, தாங்கள்தான் களைய வேண்டும்!” என்றார் கிருஷ்ணர்.

“அப்படி என்ன சந்தேகம் பரந்தாமா?” திருதராஷ்டிரர் கேட்டார்.


“ஒரு கதை சொல்கிறேன். அதிலேயே எங்களது சந்தேகமும் அடங்கி இருக்கிறது” என்ற கிருஷ்ணர், கதையை விவரித்தார்:

“அந்த அரசன், மிக நல்லவன். நீதி-நெறி பிறழாமல் ஆட்சி புரிந்து வந்தான். சைவ நெறிப்படி வாழ்ந்தவன். ஆனால், அரண்மனையில் உணவு தயாரிக்கும் சமையற்காரனோ அசைவப் பிரியன்! அசைவம் தயாரிப்பதில் கைதேர்ந்தவன். அவன் சமைக்கும் உணவைச் சாப்பிட்டுப் பார்க்கும் ஒருவருக்கு அது சைவமா, அசைவமா? என்று கண்டறிய முடியாது. இந்த ஆசாமிக்கு ஒரு விபரீதமான, கொடூரமான ஆசை வந்து விட்டது. அதாவது, அசைவ உணவை சைவம் போல் தயாரித்துக் கொடுத்து அரசனைச் சாப்பிட வைக்க வேண்டும் என்பதுதான் அந்த ஆசை.

அரசன், தனது அரண்மனையில் சாதுவான மிருகங்களையும் பல அதிசயப் பறவைகளையும் வளர்த்து வந்தான். அவற்றில் ஓர் அன்னப் பறவையும் உண்டு. அது, தினமும் முட்டையிட்டுக் குஞ்சுகள் பொறித்து வந்தது. ஒரு நாள், இந்த அன்னப் பறவையின் குஞ்சு ஒன்றைப் பிடித்து வந்த சமையற்காரன், அசைவ உணவு என்று அறிய முடியாதபடி பக்குவமாகச் சமைத்து மன்னனுக்குப் பரிமாறினான்.

அது, அசைவ உணவு என்பதை அறியாத மன்னனும் ‘அடடா… பிரமாதம்!’ என்றபடி ரசித்து, ருசித்து, இன்னும் கேட்டுச் சாப்பிட்டான். இதைக் கண்ட சமையற்காரன் மகிழ்ந்தான். அரசரையே ஏமாற்ற வைக்கும் தன் திறமையை எண்ணி வியந்தான். இதே போல் தினமும் அசைவ உணவு தயாரித்து மன்னனுக்குப் பரிமாறினான். சமையலில் அவனது கைப்பக்குவத்தைப் பாராட்டிய மன்னன், ஏராளமான பரிசு வழங்கி கௌரவித்தான்” கதையைக் கூறி முடித்த கிருஷ்ணர், ”சக்ரவர்த்தியே, எங்களது சந்தேகம் இதுதான்! மன்னனை ஏமாற்றி, புலால் உணவு சாப்பிடச் செய்த சமையற்காரன் குற்றவாளியா? அல்லது அசைவம் என்று அறியாமல் புலால் உணவு சாப்பிட்ட மன்னன் குற்றவாளியா? இருவரில் தண்டனைக்குரியவர் யார்?” என்று கேட்டார்.

திருதராஷ்டிரர் பதில் கூறினார்: “கண்ணா, சர்வ வியாபியான உனக்குத் தெரியாத நீதியா? குருசேத்திரத்தில் அர்ஜுனனுக்கு பரிபூரணமான நீதிநெறிகளை (கீதையை) உபதேசித்த நீ, என்னிடம் விளக்கம் கேட்கிறாயே… சரி, எனக்குத் தெரிந்ததைச் சொல்கிறேன்!

சமையற்காரன் செய்தது பெரிய குற்றமல்ல. வேலைக்காரர்கள், நேர்மையாகவோ அல்லது ஏமாற்றியோ தங்கள் எஜமானனை திருப்தியடையச் செய்து, பரிசுகள் பெறுவது உலக இயல்பு. ஆகவே, அவன் செய்தது சிறிய குற்றமே. ஆனால், மன்னனின் நிலை அப்படியல்ல. அவன், தன்னைச் சுற்றி நடக்கும் விஷயங்களை மிக நுட்பமாக கிரகிக்க வேண்டும். தன் பணியாளர்களது செயல்களைக் கூர்ந்து கவனிக்க வேண்டும். தவறினால், எதிரிகளது சூழ்ச்சியால் நாட்டையும், ஏன், தன் உயிரையேக் கூட இழக்க நேரிடும்.

கிருஷ்ணா! கதையில் நீ குறிப்பிட்ட மன்னன் தனது கடமையைச் சரியாகச் செய்யவில்லை. ஆக, அவன் கடமை தவறியது முதல் குற்றம். சமையற்காரன் ஒருவனிடம் ஏமாந்தது இரண்டாவது குற்றம். புலால் உண்டது மூன்றாவது குற்றம். இவற்றை அவன் அறிந்து செய்யவில்லை என்றாலும் அவனே குற்றவாளி. மேலும், பறவையின் கொலையில் மன்னனுக்கு மறைமுகத் தொடர்பு உள்ளதால், அவனே அதிகக் குற்றங்களைச் செய்தவன் ஆகிறான். எனவே, மன்னனுக்கேத் தண்டனை வழங்க வேண்டும்” என்றார் திருதராஷ்டிரர்.


இதைக் கேட்டுப் புன்னகைத்த கிருஷ்ணர், “சக்ரவர்த்தி, தங்களிடம் நான் சொன்னது கதையல்ல; உண்மைச் சம்பவம். இந்தக் கதையின் நாயகன் தாங்களே. முற்பிறவியில் செய்த தான தர்மத்தின் பலனால், இந்தப் பிறவியில் நல்ல மனைவி, நல்ல மந்திரிகள், வளமான நாடு, நிறைய சந்ததிகள் என்று சகலமும் வாய்க்கப் பெற்றீர்கள். இதேபோல், பாவத்தின் விளைவால் இப்போது, புத்திர சோகத்தில் தவிக்கிறீர்கள்.

சமையற்காரன் செய்த உயிர்க் கொலை, தாங்கள் அறியாமல் நடந்தது என்றாலும், அவன் சமைத்த புலால் உணவைச் சாப்பிட்டதால், கொலை செய்த பாவம் தங்களையும் ஒட்டிக் கொண்டது. ‘மன்னனே குற்றவாளி; அவனுக்கேத் தண்டனை’ என்ற நியாயத்தைத் தாங்களேச் சொல்ல வேண்டும்” என்று விரும்பினேன்.

பாவம்… நெருப்பைப் போன்றது! நாம் அறியாமல் தொட்டாலும் நெருப்பு நம்மைச் சுட்டு விடும். அதே போல் அறியாமல் பாவம் செய்தாலும், அதற்கான தண்டனையை அனுபவித்தே ஆக வேண்டும். நீங்களும் முற்பிறவியில் செய்த பாவத்தின் பலனாகவே, இப்போது புத்திரர்களை இழந்து தண்டனையை அனுபவிக்கிறீர்கள்” என்று முடித்தார் பகவான் கிருஷ்ணர்.

திருதராஷ்டிரர், தருமர் மற்றும் உடன் இருந்த அனைவரும் அதிர்ச்சியால் வாயடைத்துப் போயினர்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/parable/p943.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License