* நீயாகவே முடிவு செய். நீயாகவே செயல்படு.
* முடிந்தால் நன்மை செய். தீமை செய்யாதே.
* சினிமா - பயன்படுத்தத் தெரிந்தவனுக்கு அற்புதமான ஆயுதம்.
* சிறு வயதில் வரவு வையுங்கள். பெரிய வயதில் செலவளியுங்கள்.
* நம் மனதளவு எவ்வளவோ அவ்வளவு தான் உலகம்.
* வாழ்வில் நகைச் சுவை வேண்டும். சிரிக்காதவன் மிருகம்.
* அருங்குறள் 1330-ம் கடலளவு. அதன் முன் உலகம் கடுகளவு.
* வாழ்ககையின் ஒவ்வொரு அணுவையும் அனுபவிக்க வேண்டும்.
* எதையும் தெரியாது என்று சொல்லாமல் தெரியுமென சொல்.
* வாழ்வில் துணிவு வேண்டும்.
* விதி என்னும் மூலத்தில் இருந்து முளைத்த கிளையே மதி.
* காற்றுள்ள போதே தூற்றிக்கணும் என்பதை கவனத்தில் வை.
* வாழ்க்கையில் முன்னேற எந்த விமர்சனத்தையும் தாங்கிக்கொள்.
* திறமை உள்ளவனுக்கு வாய்ப்பு தூரமில்லை.
* வென்றவனுக்கு மலையும் கடுகு. தோற்றவனுக்கு கடுகும் மலை.
* ஆணவமும், அழிவும் இறைட்டைக் குழந்தைகள்.
* அற்ப ஆசைகள் பெரிய வெற்றியைத் தேடித் தருவதில்லை.
* நன்மை செய்தவனுக்கு நன்றி காட்டு.
* தீமை செய்தவனை மறந்து விடு.
* எதையும் சாதிக்க நிதானம், அற்புதமான ஆயுதம்.
* சோம்பி நிற்கும் மனிதனிடம் துன்பங்கள் உற்ப்பத்தியாகின்றன.
* தாய்ப்பால் கொடுக்காத குழந்தைகளுக்கு தாய்ப்பாசம் இருக்காது.
* இலக்கியங்கள் எல்லாம் மனிதர்களுடைய அனுபவத்தில் உதித்தவையே.
* தேவைப்பட்டாலொழியக் கோபம் கொள்ளாதே.