காதலைப் பற்றி...
காதலின் எதிர்ப்பதம் வெறுப்பு அல்ல அறியாமை.
- பிரயன் வாங்
ஒருவனுக்குக் காதல் என்பது நிராகரிக்கப்பட்டுவிட்டால் பணம் அந்த இடத்தைப் பிடித்துக்கொள்கிறது.
- டி.ஹெச். லாரன்ஸ்
காதல் : ஒருவித தற்காலிக மனநோய். திருமணம் செய்தால் குணமாகிவிடும்.
- ஆம்புரோஸ் பியர்ஸ்
காதல் மணல் கடிகாரம் போல. நெஞ்சு நிரம்ப நிரம்ப மூளை காலியாகிறது.
- ஜூல் ரெனா
காதலைப் பற்றி நன்றாகத் தெரிந்தவர்கள் காதலிக்க மாட்டார்கள்.
- டக்ளஸ் யேட்ஸ்
காதல் காலத்தை மறக்கச் செய்யும். காலம் காதலை மறக்கச் செய்யும்.
- யாரோ
கடவுள் மனிதனுக்கு நெருப்பைக் கொடுத்தான் மனிதன் தீயணைப்புக் கருவிகளைக் கண்டுபிடித்தான். கடவுள் மனிதனுக்குக் காதலைக் கொடுத்தான் மனிதன் திருமணத்தைக் கண்டுபிடித்தான்.
- யாரோ
விவேகம் மிக்கவர்களுக்கு அதிபதி காதல்: அதை மீறுபவர்கள் அறிவில்லாதவர்கள்.
- வில்லியம் தாக்கரே
இன்பத்தின் இனியதும் துன்பத்தின் கொடியதும் காதலே.
- பெய்லி
காதலிக்காமலே இருப்பதை விட, காதலித்து தோல்வி காண்பதே மேல்.
- டென்னிசன்
சூரியன் மறையலாம்; ஆனால், நிலையான காதல் மறைவதில்லை.
- ஊட்
உண்மை காதல் அனைத்துக்கும் பரஸ்பர மதிப்பே அடிப்படை.
- ஜார்ஜ்
காதலே, காதலின் வெகுமதி.
- ஜான் டிரைடன்
காதல் - தன்னைத் தானே அளிப்பது; விலை கொடுத்து அதை வாங்குவதில்லை.
- லாங்பெல்லோ
காதல் பேச முற்பட்டு விட்டால், ஊமை கூட புரிந்து கொள்வான்.
- ஸ்லிப்ட்
உண்மையான காதல், எண்ணத்திலே மலர்ந்து உள்ளத்திலே இடத்தை தேடிக்கொள்ளும்.
- கர்னிலியஸ் நீல்
உலகை வலம் வரவும், சுற்றி வரவும் செய்வது காதல்.
- மார்லோ
ஆணின் காதல், வாழ்க்கையில் ஓர் அங்கம்; பெண்ணின் காதலோ அவளது முழு வாழ்வும்.
- பைரன்
காதல் ஒரு கண்ணாடி குவளை; இறுக்கமாக பிடித்தால், உடைந்து விடும்; மெதுவாக பிடித்தால், கை நழுவி உடைந்து விடும்.
- ஜெரோம்
உண்மையான காதல் ஒரு தணியாத வேட்கை, இனிமையான தொடர்கதை, அணையா தீ.
- ஆபின்டன்
காதல் என்பது கருகிவிடும் சாதாரண மலர் அல்ல. அதன் விதைகள் சொர்க்கத்தில் இருந்து வருவது; எப்பொழுதுமே வாடாத மலர் அது.
- லோவில்
யுகமெல்லாமே உழைத்து சாதிக்க இயலாத்தை நொடிப்பொழுதில் அளிக்கிறது காதல்.
- கதே
அசடனையும் அறிவுக் கூர்மை உள்ளவனாய் மாற்றி விடும் காதல்.
- சார்லஸ் டிப்டின்
தெய்வத்தின் தலைசிறந்த அன்பளிப்பே காதல்.
- கேபிள்
போர் வாளின்றி தன் ராஜ்ஜியத்தை ஆள்வது காதல்.
- ஹெர்பர்ட்
காதலையும் இருமலையும் மறைக்க முடியாது.
- ஜார்ஜ் ஹெர்பர்ட்
சாதாரணப் பெண்களுக்குத்தான் காதலைப் பற்றித் தெரியும். அழகான பெண்களுக்குத் தங்கள் அழகைப் பற்றிய சிந்தனைதான் இருக்கும்.
- காத்தரின் ஹெப்பர்ன்
காதலிக்கும்போது புத்திசாலிக்கும் முட்டாளுக்கும் இடையில் வித்தியாசம் கண்டுபிடிக்கமுடியாது.
- யாரோ
கட்டுப்படுத்த முடியாத ஆசையின் மீது கட்டுப்படுத்த முடியாத ஆசை வைப்பதே காதல்.
– மார்க் ட்வைன்
ஒரு ஆண் தான் ஒரு பெண்ணின் முதல் காதலனாக இருக்க விரும்புகிறான் பெண்ணோ ஒரு ஆணின் கடைசிக் காதலாக இருக்க விரும்புகிறாள்.
– ஆஸ்கர் ஓயில்டு
நான் உன்னைக் காதலிப்பேன். மரணமற்ற காதலாகும் அது. சூரியன் குளிர்ந்துபோகும் வரை நட்சத்திரங்கள் முதுமையடையும் வரை நான் உன்னைக் காதலிப்பேன்.
– ஷேக்ஸ்பியர்
தொகுப்பு: உ. தாமரைச்செல்வி.
*****
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.
|