பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன. அவைகளில் முக்கியமானவை:
பிரம்மஞ்ஞானி - பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர். இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத வாக்கியம்.
பிரம்மஞ்ஞானம் - பிரம்மத்தைப் பற்றிய நேர்முக அறிவு.
பிரம்ம நிர்வாணம் - பிரம்மமாகவே ஆகிவிடல்.
பிரம்மச்சாரி - பிரம்மமாகிற வேதங்களை கற்பதொன்றேக் குறியாயிருப்பவன்.
பிரம்மார்ப்பணம் - பிரம்மத்திற்கு அர்ப்பணம்.
பிரம்மானுபவம் - பிரம்மத்தை நேர்முகமாகக் கண்ட அனுபவம்.
பிரம்மபாவம் - பிரம்மமாகவேப் பார்க்கும் நிலை.
பிரம்மோபதேசம் - பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.
பிரம்ம சூத்திரம் - பிரம்மத்தைப் பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.