1. மிகவும் மதிக்கப்பட வேண்டியவர்கள் - தாய், தந்தை
2. மிக மிக நல்ல நாள் - இன்று
3. மிகப் பெரிய வெகுமதி - மன்னிப்பு
4. மிகவும் வேண்டியது - பணிவு
5. மிகவும் வேண்டாதது - வெறுப்பு
6. மிகப் பெரிய தேவை - நம்பிக்கை
7. மிகக் கொடிய நோய் - பேராசை
8. மிகவும் சுலபமானது - குற்றம் காணல்
9. கீழ்த்தரமான விடயம் - பொறாமை
10. நம்பக் கூடாதது - வதந்தி
11. ஆபத்தை விளைவிப்பது - அதிகப் பேச்சு
12. செய்யக் கூடாதது - நம்பிக்கைத் துரோகம்
13. செய்யக் கூடியது - உதவி
14. விலக்க வேண்டியது - சோம்பேறித்தனம்
15. உயர்வுக்கு வழி - உழைப்பு
16. நழுவ விடக் கூடாதது - வாய்ப்பு
17. பிரியக் கூடாதது - நட்பு
18. மறக்கக் கூடாதது - நன்றி
இவைகளை மனிதர்கள் பின்பற்றி நடந்தால், தற்போது இருப்பதை விடச் சிறப்பாக வாழலாம்.