சைவ சமயத்தினர்கள் பல்வேறு விரதங்களைக் கடைப்பிடிக்கின்றன. அவற்றுள் சிறப்புக்குரியதாகச் சில விரதங்கள் இருக்கின்றன.
சிவபெருமானுக்கான விரதங்களில் சோமவார விரதம், திருவாதிரை விரதம், உமாமகேசுவர விரதம், சிவராத்திரி விரதம், கேதார விரதம், கல்யாணசுந்தர விரதம், சூல விரதம், இடப விரதம், பிரதோஷ விரதம் என்று ஒன்பது விரதங்கள் சிறப்புக்குரியதாக இருக்கின்றன.
தேவிக்கான விரதங்களில் வெள்ளிக் கிழமை விரதம், ஐப்பசி உத்தர விரதம், நவராத்திரி விரதம் என்று மூன்று சிறப்புக்குரியது.
விநாயகருக்கான விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், விநாயக சதுர்த்தி விரதம், விநாயக சஷ்டி விரதம், சங்கடஹர சதுர்த்தி விரதம் என்று நான்கு சிறப்புக்குரியது.
சுப்பிரமணியருக்கான விரதங்களில் வெள்ளிக்கிழமை விரதம், கார்த்திகை விரதம், கந்த சஷ்டி விரதம், சஷ்டி விரதம் என்று நான்கு சிறப்புக்குரியது.
பைரவருக்கான விரதங்களில் செவ்வாய்க்கிழமை விரதம், சித்திரைப் பரணி விரதம், ஐப்பசிப் பரணி விரதம் என்று மூன்று சிறப்புக்குரியது.
வீரபத்திரருக்கான விரதங்களில் செவ்வாய்க் கிழமை விரதம் ஒன்று மட்டும் சிறப்புக்குரியதாகும்.