விநாயகர் வழிபாட்டில், விநாயகருக்குப் படைக்கும் பொருட்களின் எண்ணிக்கை 21 என்கிற எண்ணிக்கையில் இருக்க வேண்டும் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.
ஞானேந்திரியங்கள் - 5, கர்மேந்திரியங்கள் - 5, அதன் காரியங்கள்- 10, மனம்-1, மொத்தமாக 21 என்று கணக்கிடப்படுகிறது. விநாயகர் வழிபாட்டின் போது ஞானேந்திரியங்களும் கர்மேந்திரியங்களும் ஒன்றுபடாவிட்டால், அந்த வழிபாட்டால் எந்தப் பலனுமில்லை. எனவே, இந்த 21 எனும் எண்ணிக்கையை நினைவுபடுத்தவே 21 என்னும் எண்ணிக்கையில் விநாயகருக்கான படைக்கும் பொருட்கள் பயன்படுத்தப்படுகின்றன.
விநாயகருக்கான 21 மலர்கள்
1. மாம்பூ
2. தாழம்பூ
3. முல்லை
4. கொன்றை
5. எருக்கு
6. செங்கழுநீர்
7. செவ்வரளி
8. வில்வம்
9. குருந்தை
10. பவளமல்லி
11. ஜாதிமல்லி
12. மாதுளம்
13. கண்டங்கத்திரி
14. புன்னை
15. மந்தாரை
16. மகிழம்
17. பாதிரி
18. தும்பை
19. அரளி
20. ஊமத்தை
21. சம்பங்கி.
விநாயகருக்கான 21 அபிஷேகப் பொருட்கள்
1. பழப்பஞ்சாமிர்தம்
2. ரஸப்பஞ்சாமிர்தம்
3. நெய்
4. பால்
5. தயிர்
6. தேன்
7. கருப்பஞ்சாறு
8. பழ ரகங்கள்
9. இளநீர்
10. சந்தனம்
11. திருநீறு
12. குங்குமம்
13. பன்னீர்
14. தண்ணீர்
15. எண்ணெய்
16. சீயக்காய்
17. சந்தனாதித்தைலம்
18. மாப்பொடி
19. மஞ்சள் பொடி
20. திரவியப் பொடி
21. பஞ்சகவ்யம்.
விநாயகருக்கான 21 இலைகள்
1. துளசி
2. மாவிலை
3. தங்க அரளி
4. விஷ்ணு கிரந்தி
5. மாதுளை
6. மருவு
7. நொச்சி
8. ஜாதிக்காய் இலை
9. நாரிசங்கை
10. வன்னி
11. அரசு
12. நுணா
13. எருக்கு
14. தேவதாரு
15. மாசி
16. பருஹதி எனும் கிளா இலை
17. வில்வம்
18. அருக்கு
19. ஊமத்தை
20. இலந்தை
21. நாயுருவி.
விநாயகருக்கான 21 நிவேதனப் பொருட்கள்
1. தேன்
2. தினை மாவு
3. பால்
4. பாகு
5. கற்கண்டு
6. சர்க்கரைப் பொங்கல்
7. பாயசம்
8. முக்கனிகள்
9. விளாம்பழம்
10. நாவற்பழம்
11. எள்ளுருண்டை
12. வடை
13. அதிரசம்
14. மோதகம்
15. அப்பம்
16. அவல்
17. பொரிகடலை
18. கரும்பு
19. சுண்டல்
20. சுகியன்
21. பிட்டு.
இந்த 21 விதமான பூசைப் பொருட்களையும் கொண்டு, விநாயகரை வழிபட்டால் வேண்டும் அனைத்தும் கிடைக்கும்.