பிரம்மம் என்ற சொல்லிலிருந்து வடமொழியில் பயன்படுத்தப்படும் சொற்றொடர்கள் சில தமிழிலும் அப்படியே நூல்களில் வழக்கில் உள்ளன. அவைகளில் முக்கியமானவை:
1. பிரம்மஞ்ஞானி - பிரம்மத்தை நேர்முகமாகவே அறிந்தவர். இவர் பிரம்மமாகவே ஆகிறார் என்பது உபநிடத வாக்கியம்.
2. பிரம்மஞ்ஞானம் - பிரம்மத்தைப் பற்றிய நேர்முக அறிவு.
3. பிரம்ம-நிர்வாணம் - பிரம்மமாகவே ஆகிவிடல்.
4. பிரம்மச்சாரி - பிரம்மமாகிற வேதங்களைக் கற்பதொன்றே குறியாயிருப்பவன்.
5. பிரம்மார்ப்பண்ம் - பிரம்மத்திற்கு அர்ப்பணம்.
6. பிரம்மானுபவம் - பிரம்மத்தை நேர்முகமாகக் கண்ட அனுபவம்.
7. பிரம்மபாவம் - பிரம்மமாகவே பார்க்கும் நிலை.
8. பிரம்மோபதேசம் - பிரம்மமாகிற வேதத்தின் உயிர் மூச்சாகிய காயத்ரீ மந்திரத்தை முறையாக உபதேசித்தல்.
9. பிரம்ம சூத்திரம் -: பிரம்மத்தைப் பற்றிய பொருளனைத்தும் 555 சூத்திரங்களில் உள்ளடக்கிய பிரமாண நூல்.