பிருதிவி, அப்பு, தேயு, வாயு, ஆகாசம், சூரியன், சந்திரன், ஆன்மா ஆகிய இவற்றை அதிட்டித்து நிற்கும் சக்திகள் சிவபெருமானின் வடிவங்களாகும். எனவே இவற்றை எண் மூர்த்தங்கள் என்பர்.
விக்கிரக வணக்கம் பிருதிவி ரூபமாகும். தீர்த்த வணக்கம் கங்கை போன்ற புண்ணிய நதி அப்பு. யாகத்தில் வழிபடும் அக்கினி அக்கினி ரூபம். சிவபூஜையில் செய்யப்படும் சூரிய சந்திர வழிபாடு சூரிய சந்திர ரூபமாகும். குரு, அந்தணர், சிவனடியார் போன்றவர்களை வழிபடுவது ஆன்ம ரூபமாகும். பஞ்சபூதத் தலங்களில் செய்யும் பஞ்சபூத லிங்க வணக்கம் பஞ்சபூத ரூபமாகும்.
இவ்வாறு சிவபெருமானின் எண் மூர்த்த வணக்கம் விளங்குகிறது.