சைவ சமயத்தில் உயிர்களின் தோற்றம் நான்கு, பிறப்பு ஏழு வகை மற்றும் உருவ வேற்றுமை 84 இலட்சம் என்றும் வகைப்படுத்தப்படுகிறது. அவை;
நான்கு வகை தோற்றம்
1. அண்டஜம் - முட்டையில் தோன்றுவன (பறவை, ஊர்வன, நீர்வாழ்வன)
2. ஸ்வேதஜம் - வியர்வையில் தோன்றுவன (கிருமி, பேன் முதலியன)
3. உத்பிஜ்ஜம் - வித்து, வேர், கிழங்குகளிலிருந்து தோன்றுவன (தாவரங்கள்)
4. சராயுஜம் - கருப்பையில் தோன்றுவன (மனிதர், விலங்குகள்)
ஏழு வகை பிறப்புகள் மற்றும் உருவ வேற்றுமை
1. தேவர் - பதினொன்று இலட்சம் உருவ வேற்றுமை
2. மனிதர் - ஒன்பது இலட்சம் உருவ வேற்றுமை
3. விலங்குகள் - பத்து இலட்சம் உருவ வேற்றுமை
4. தாவரம் - பத்தொன்பது இலட்சம் உருவ வேற்றுமை
5. பறவை - பத்து இலட்சம் உருவ வேற்றுமை
6. ஊர்வன - பதினைந்து இலட்சம் உருவ வேற்றுமை
7. நீர் வாழ்வன - பத்து இலட்சம் உருவ வேற்றுமை