பஞ்சயக்ஞ ஹோம பலன்கள்
ஆர். எஸ். பாலகுமார்
ஹோமம் மற்றும் யாகங்கள் செய்வதால் தேவர்களும் இறைவனும் மகிழ்ச்சியடைந்து நமக்கு அருள்புரிவார்கள். இதனால் வாழ்க்கையில் ஏற்பட்டு வந்த தடைகள் விலகி நற்பலன்களை அடையமுடியும். கணபதி ஹோமம், மகாசண்டி ஹோமம், நவக்கிரக ஹோமம், மகாசுதர்சன ஹோமம், ருத்ர ஹோமம் எனும் ஐந்து ஹோமங்கள் செய்வதைப் பஞ்சயக்ஞ ஹோமம் என்கின்றனர். இந்தப் பஞ்சயக்ஞ ஹோமம் செய்பவர் துன்பங்கள் விலகி அனைத்து செல்வங்களும் கிடைக்கப் பெறுவர். ஒவ்வொரு யாகத்திற்கும் என்ன பலன்கள் கிடைக்கும்?
கணபதி ஹோமம் - தடைகள் விலகி சகல செல்வங்களும் கிடைக்கும்.
மகாசண்டி ஹோமம் - பயம், தரித்திரம், எதிரிகள் தொல்லை நீங்கும்.
நவக்கிரக ஹோமம் - கிரக தோசங்களை நீக்கும்.
மகாசுதர்சன ஹோமம் - ஏவல், பில்லி சூனியம், எதிரிகளை அழிக்கும், வெற்றி கிட்டும்.
ருத்ர ஹோமம் - ஆயுள் விரித்தியடையும். ஹோமங்கள் செய்து நலமுடன் வாழ்வோம்....
*****

இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.