விளக்கேற்றுவதன் பலன்கள்
சுபாஷினி முருகன்
விளக்கிற்கான எண்ணெய்கள்
நெய்தீபம் - ஞானம் ஏற்படும்.
நல்லெண்ணெய் தீபம் - எம பயம் அணுகாது.
இலுப்பை எண்ணெய் தீபம் - ஆரோக்கியம்.
விளக்கெண்ணெய் தீபம் - சகல செல்வமும் கிடைக்கும்.
விளக்கின் தீப முகங்கள்
ஒரு முக தீபம் - மத்திம பலன் தரும்.
இரண்டு முக தீபம் - குடும்பம் ஒற்றுமை தரும்.
மூன்று முக தீபம் - புத்திர சுகம் தரும்.
நான்கு முக தீபம் - பசு, பூமி, சுகம் தரும்.
ஐந்து முக தீபம் - செல்வம் பெருகும்.
தீப திசைகளும் பலன்களும்
கிழக்கு நோக்கி தீபமேற்ற - துன்பங்கள் நீங்கி பீடை விலகும்.
மேற்கு நோக்கி தீபமேற்ற - கடன் தொல்லை அகலும், கிரக தோஷம் கழியும்.
தெற்கு நோக்கி தீபமேற்ற - பாவம், அபசகுனம், எமனுக்குப் பிரீதி.
வடக்கு நோக்கி தீபமேற்ற - திருமணத்தடை, சுபகாரியத்தடை, வேலை வாய்ப்புத் தடை நீங்கி செல்வம் பெருகும். சர்வ மங்களம் உண்டாகும்.
விளக்கு துலக்க ஏற்ற நாட்கள்
ஞாயிறு - கண் சம்பந்தமான நோய் தீரும்.
திங்கள் - அலை பாயும் மனம் அடங்கி அமைதியுறும்.
வியாழன் - குரு பார்க்கக் கோடி நன்மை உண்டாகும். மனக்கவலை தீரும்.
சனி - வாகன விபத்துகள் ஏற்படாமல் நம்மைக் காக்கும்.
*****
இது
முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.