* சென்னிமலை சிவன்மலை சேர்ந்ததோர் பழனிமலை.
* செந்தில் நமக்கிருக்கச் சொந்தம் நமக்கெதற்கு?
* திருத்தணி முருகன் வழித்துணை வருவான்.
* வேலனுக்கு ஆனை சாட்சி.
* வேலிருக்க வினையுமில்லை; மயிலிருக்கப் பயமுமில்லை.
* செட்டிக் கப்பலுக்குச் செந்தூரான் துணை.
* கந்தன் பாதம் கனவிலும் காக்கும்.
* வேலை வணங்குவதே வேலை.
* சுக்குக்கு மிஞ்சிய வைத்தியமில்லை; சுப்பிரமணியருக்கு மிஞ்சிய தெய்வமில்லை.
* வயலூர் இருக்க அயலூர் தேவையா?
* காசுக்குக் கம்பன் கருணைக்கு அருணகிரி.
* அப்பனைப் பாடிய வாயால் - ஆண்டிச் சுப்பனைப் பாடுவேனா?
* முருகனுக்கு மிஞ்சிய தெய்வமில்லை; மிளகுக்கு மிஞ்சிய மருத்துவம் இல்லை.
* சட்டியில் இருந்தால் அகப்பையில் வரும் (சஷ்டியில் இருந்தால் அகப்பையில் வரும்)
* கந்தபுராணத்தில் இல்லாதது எந்தப் புராணத்திலும் இல்லை.
* கந்தன் களவுக்குக் கணபதி சாட்சியாம்.
* பழநி பழநின்னா பஞ்சாமிர்தம் வந்திடுமா?