சாம்பிராணியைப் போட்டு வாழ்வில் அனைத்து வளமும் பெறலாம்.
* சாம்பிராணியில் தூபம் போட்டால் கண் திருஷ்டி, பொறாமை ஆகியவை நீங்கி முன்னேற்றம் கிடைக்கும்.
* சாம்பிராணியில் அகில் போட்டுத் தூபமிட குழந்தைப்பேறு உண்டாகும்.
* சாம்பிராணியில் மருதாணி விதைகளைப் போட்டுத் தூபமிட சூனிய கோளாறுகள் விலகும்.
* சாம்பிராணியில் தூதுவளையைப் போட்டுத் தூபமிட வீட்டில் தெய்வம் நிலைக்கும்.
* சாம்பிராணியில் சந்தனத்தைப் போட்டு தூபம் போட லட்சுமி கடாட்சம் கிடைக்கும்.
* சாம்பிராணியில் அருகம்புல் பொடியைப் போட்டுத் தூபமிட சகல தோஷங்களும் நிவாரணம் ஆகும்.
* சாம்பிராணியில் வெட்டிவேரைப் போட்டுத் தூபமிட காரியசித்தி உண்டாகும்.
* சாம்பிராணியில் வேப்பிலையைப் போட்டுத் தூபமிட சகல நோய்களில் இருந்தும் நிவாரணம் கிடைக்கும்.
* சாம்பிராணியில் வெண்கடுகைப் போட்டுத் தூபமிட பகைமை விலகும்.
* சாம்பிராணியில் வெண்குங்கிலியப் பொடியைப் போட்டுத் தூபமிட துஷ்ட சக்திகள் விலகும்.
* சாம்பிராணியில் ஜவ்வாதி போட்டுத் தூபமிட திடீர் அதிர்ஷ்டம் உருவாகும்.
* சாம்பிராணியில் வேப்பம்பட்டையைப் போட்டுத் தூபமிட ஏவல் பில்லி சூன்யம் ஆகியவை விலகும்.
* சாம்பிராணியில் நாய் கடுகைப் போட்டுத் தூபமிடத் துரோகிகள் நம்மை விட்டு விலக ஆரம்பிப்பார்கள்.
* சாம்பிராணியில் காய்ந்த துளசியைப் போட்டுத் தூபமிட்டால் காரியத்தடை மற்றும் திருமணத்தடை ஆகியவை விலகும்.
* சாம்பிராணியில் கரிசலாங்கண்ணிப் பொடியைப் போட்டுத் தூபமிட மகான்களின் ஆசிகள் கிடைக்கும்.
* சாம்பிராணியில் நன்னாரி வேரின் பொடியைப் போட்டுத் தூபமிட ஐஸ்வர்யம் கிடைக்கும்.
* சாம்பிராணியில் மருதாணி இலைப் பொடியைப் போட்டுத் தூபமிட மகாலட்சுமி வாசம் நிலைக்கும்.
மேற்கண்ட பொருட்கள் அனைத்தும் நாட்டு மருந்துக் கடைகளில் கிடைக்கிறது. அதனை வாங்கிப் பயன்படுத்தித் தீராத செல்வ வளம் கிடைக்கப் பெறுங்கள்.