விஷ்ணுவின் எட்டாவது தோற்றமான கிருஷ்ணருக்கு இதிகாசம் மற்றும் புராணங்களில் 108 பெயர்கள் குறிப்பிடப்பட்டிருக்கின்றன. 108 பெயர்களும் அதற்கான பொருளும் கீழேத் தரப்பட்டிருக்கின்றன.
1. அச்சாலன் - தற்போதும் உள்ளவர்
2. அச்சுதன் - நழுவாதவர்
3. அட்சரன் - என்றும் நிலையானவன்
4. அபாரஜித் - வெல்லப்பட முடியாதவன்
5. அமிர்தன் - மரணம் அற்றவன்
6. அவ்வியக்தன் - படிகம் போன்று தூய்மையானவன்
7. அற்புதன் - வியக்கத்தக்கவன்
8. அனந்தன் - அளவிட முடியாதவன்
9. அனந்தஜித் - என்றும் வெற்றியாளன்
10. அனயன் - தலைமை அற்றவர்
11. அனிருத்தன் - தடுத்து நிறுத்த முடியாதவன்
12. அஜெயன் - பிறப்பையும், இறப்பையும் வென்றவன்
13. அஜென்மா - பிறப்பில்லாதவன்
14. ஆதிதேவன் - உண்மையான இறைவன்
15. ஆதித்தியன் - அதிதியின் மகன்
16. ஆனந்தசாகரன் - பெருங்கடலைப் போன்று பேரின்பமானவன்
17. இரண்யகர்பன் - அனைத்தையும் படைப்பவர்
18. இலக்குமிகாந்தன் - இலக்குமியின் கணவர்
19. உபேந்திரன் - இந்திரனின் நண்பர்
20. கமலநயனன் - தாமரை வடிவக் கண்களை கொண்டவர்.
21. கமலநாதன் - இலக்குமியின் நாதர்
22. கம்சந்தகன் - கம்சனை கொன்றவர்
23. காஞ்சலோசனன் - தாமரைக் கண்ணன்
24. கிருட்டிணன் - அனைவரையும் கவர்பவன்
25. கேசவன் - நீண்ட, கரிய, சுருள் கொண்ட முடியைக் கொண்டவர்
26. கோபாலப்பிரியன் - ஆவினங்களை நேசிப்பவர்
27. கோபாலன் - ஆவினங்களுடன் விளையாடுபவன்
28. கோவிந்தன் - ஆவினங்கள், நிலம் மற்றும் முழு இயற்கையையும் அமைதிப்படுத்துபவர்.
29. சகஸ்ராட்சகன் - ஆயிரம் கண்களைக் கொண்டவன்
30. சதுர்புஜன் - நான்கு கைகள் கொண்டவன்
31. சத்தியவசனன் - சத்தியம் மட்டும் பேசுபவர்
32. சத்தியவிரதன் - உண்மையையே இலக்காகக் கொண்டவர்
33. சர்வபாலகன் - அனைத்தையும் காப்பவர்
34. சர்வஜனன் - அனைத்தும் அறிந்தவர்
35. சர்வேஸ்வரன் - அனைத்திற்கும் தலைவர்
36. சனாதனன் - தொன்று தொட்டு விளங்குபவர்
37. சஹஸ்ரஜித்தன் - ஆயிரம் பேர்களை அழித்தவன்
38. சாட்சி - அனைத்து செயல்களுக்கும் சாட்சியாக விளங்குபவன்
39. சாதனன் - அனைத்தறிவுக்கும் கருவியானவன்
40. சியாமசுந்தரன் - கார்மேக அழகன்
41. சியாம் - கருநிறத்தவன்
42. சிரேஸ்டன் - மிகவும் புகழ்பெற்றவன்
43. சுதர்சனன் - சுதர்சனம் எனும் சக்கரத்தைக் ஆயுதமாகக் கொண்டவன்
44. சுமேதா - நுட்பமான அறிவினன்
45. சுரேஷ்வரன் - அனைத்து தெய்வங்களுக்கும் தலைவர்
46. சுவர்க்கபதி - சொர்க்கத்தின் தலைவர்
47. ஞானேஸ்வரன் - அறிவுக் கடவுள்
48. தயாநிதி - இரக்கமுள்ள அருளாளன்
49. தயாளன் - இரக்கத்தின் களஞ்சியம்
50. தர்மாதியட்சர் - தரும தேவன்
51. தானவேந்திரன் - செல்வங்களை அருள்பவன்
52. திரவின் - எதிரிகள் அற்றவன்
53. திரிவிக்கிரமன் - மூவுலகையும் அளந்தவன்
54. துவாரகாபதி - துவாரகையின் தலைவர்
55. தேவகிநந்தன் - தேவகியின் மகன்
56. தேவாதிதேவன் - தேவர்களின் தலைவர்
57. தேவேஷ்வா - அவதார புருஷன்
58. நந்தகுமாரன் - நந்தகோபரின் வளர்ப்பு மகன்
59. நந்தகோபாலன் - பசுக்கூட்டங்களின் மீது அன்பு பாராட்டுபவன்
60. நவநீதசோரன் - வெண்ணெய் திருடி உண்பவன்
61. நாராயணன் - அனைவருக்கும் புகழிடம் அளிப்பவர்
62. நிரஞ்சனன் - அப்பழுக்கற்றவன்
63. நிர்குணன் - குணங்களைக் கடந்தவன்
64. பத்மநாபன் - தொப்புள் மீது தாமரையைக் கொண்டவன்
65. பத்மஹஸ்தன் - தாமரைத் தண்டு போன்ற கைகளை கொண்டவன்
66. பரப்பிரம்மம் - முற்றான முழுமையான உண்மையானவன்
67. பரமபுருஷன் - மேலான புருஷன்
68. பரமாத்மா - அனைத்து உயிர்களிலும் ஆத்மாவாக திகழ்பவன்
69. பார்த்தசாரதி - அருச்சனனின் தேரை ஓட்டியவன்
70. பாலகிருஷ்ணன் - குழந்தை கிருஷ்ணன்
71. பாலகோபாலன் - அனைவரையும் ஈர்க்கும் குழந்தை கிருஷ்ணன்
72. பிகாரி - எங்கும் பயணம் செய்பவன்
73. பிரஜாபதி - அனைத்து சீவராசிகளையும் படைத்தவர்
74. புண்ணியவான் - தவத்தால் அடையத்தக்கவன்
75. புருசோத்தமன் - ஜீவாத்மாக்களில் மேலானவன்
76. மகேந்திரன் - இந்திரனுக்குத் தலைவர்
77. மதனன் - அன்பிற்கினியவன்
78. மதுசூதனன் - மது எனும் அரக்கனை கொன்றவர்
79. மயூரன் - மயிலிறகை மணிமகுடமாகக் கொண்டவன்
80. மனோகரன் - அழகின் அதிபதி
81. மன்மோகன் - தடுமாறத மனம் உடையவன்
82. மாதவன் - இலக்குமியின் கணவர்
83. முரளி - புல்லாங்குழலை இசைப்பவன்
84. முரளிதரன் - புல்லாங்குழலை கையில் கொண்டவன்
85. முரளிமனோகரன் - குழல் ஊதி மயக்குபவன்
86. மோகனன் - வசீகரமானவன்
87. யாதவேந்திரன் - யாதவ குல தலைவர்
88. யோகி - யோகியானவன்
89. யோகினாம்பதி - யோகிகளின் தலைவர் (யோகீஸ்வரன்)
90. ரவிலோசனன் - சூரியனைப் போன்ற கண்களை உடையவன்
91. ரிஷிகேசன் - அனைத்து உணர்வுகளுக்கும் அதிபர்
92. லோகாதியட்சன் - மூவுலகின் நாயகன்
93. வர்தமானன் - அருவமான (உருமற்ற) இறைவன்
94. வாசுதேவபுத்திரன் - வசுதேவரின் மகன்
95. விருசபர்வா - அறத்தின் நாயகன்
96. விஸ்வகர்மன் - அனைத்து பிரபஞ்சங்களையும் படைத்தவர்
97. விஸ்வதட்சினன் - திறமை மற்றும் ஆளுமை மிக்கவன்
98. விஸ்வமூர்த்தி - அனைத்து பிரபஞ்சங்களின் வடிவானவர்
99. விஸ்வரூபன் - பிரபஞ்சத்தின் வடிவாகக் காட்சியளிப்பவர்
100. விஸ்வாத்மா - பிரபஞ்சத்தின் ஆத்மா
101. விஷ்ணு - பிரபஞ்சத்தின் இறைவன்/பிரபஞ்சம்
102. வைகுந்தநாதன் - வைகுந்தத்தில் உறைபவன்
103. ஜெகதீஷ்வரன் - பிரபஞ்சத்தின் இறைவன்
104. ஜெகத்குரு - பிரபஞ்சத்திற்கு குரு
105. ஜெகன்நாதர் - பிரபஞ்சத்திற்கு தலைவர்
106. ஜெயந்தன் - அனைத்துப் பகைவர்களை வெல்பவன்
107. ஜெனார்தனன் - வரங்களை வழங்குபவர்
108. ஜோதிராதித்தியன் - சூரியனில் ஒளியாக விளங்குபவர்.