பிள்ளைத்தமிழ் என்பது தமிழ் மொழியிலுள்ள 96 வகையான சிற்றிலக்கியங்களில் ஒன்று. இந்தப் பிள்ளைத்தமிழ் பத்து பருவங்களைக் கொண்டது. அவை;
1. காப்பு
2. செங்கீரை
3. தாலாட்டு
4. சப்பானி
5. முத்தம்
6. வருகை
7. அம்புலி
8. சிற்றில் சிதைத்தல்
9. சிறுபறை முழக்கல்
10. சிறுதேர் உருட்டல்
என்பதாகும்.
முருகன் மேல் பாடப்பெற்ற பிள்ளைத்தமிழ் நூல்கள் இவை;
1. திருமலை முருகன் பிள்ளைத்தமிழ் - கவிராஜார் பண்டாரத்தையா
2. தணிகைப் பிள்ளைத்தமிழ் - கந்தப்ப தேசிகர்
3. மயிலம் முருகன் பிள்ளைத்தமிழ் - வைத்தியநாத தேசிகர்
4. பழநிப் பிள்ளைத்தமிழ் - விசையகிரிவேலச் சின்னோவையன்
5. சேயூர் முருகன் பிள்ளைத்தமிழ் - அந்தகக் கவிராயர்
6. போரூர் முருகன் பிள்ளைத்தமிழ் - சிதம்பர சுவாமிகள்
7. கிரிவிரிஞ்சை முருகன் பிள்ளைத்தமிழ் - மார்க்க சகாய தேவர்
8. திருச்செந்தூர் முருகன் பிள்ளைத்தமிழ் - பகழிக்கூத்தர்
9. க்ஷேத்திரக் கோவைப் பிள்ளைத்தமிழ் - காஞ்சிபுரம் சிதம்பர முனிவர்
10. முத்துக்குமாரசுவாமி பிள்ளைத்தமிழ் - குமரகுருபர சுவாமிகள்