முருகப்பெருமானின் பன்னிரண்டு கரங்களில் ஒவ்வொரு கரமும் ஒரு பணி என்று பன்னிரண்டு விதமானப் பணிகளைச் செய்கிறது. அவை;
* முதலாம் கை – தேவர், முனிவர்களைப் பாதுகாக்கிறது
* இரண்டாம் கை – முதல் கை செய்யும் பணிக்கு ஒத்துழைக்கிறது
* மூன்றாம் கை – உலகத்தைத் தன் கைக்குள் அடக்குகிறது
* நான்காம் கை – தேவையற்ற ஆசைகளைக் களைகிறது
* ஐந்தாம் கை – நிறைந்த அருளைத் தருகிறது
* ஆறாம் கை – வேல் கொண்டு பக்தர்களைப் பாதுகாக்கிறது
* ஏழாம் கை – சரவணபவ என்னும் சொல்லுக்குரிய பொருளை முனிவர்கள் போன்ற தவப்புதல்வர்களுக்கு மட்டுமே வெளிப்படுத்தும் வகையில் மார்பில் உள்ளது
* எட்டாம் கை – மார்பில் இருந்து தொங்கும் மாலையைத் தாங்குகிறது
* ஒன்பதாம் கை – யாகப்பலனை ஏற்கிறது
* பத்தாம் கை – இதுவும் யாகப்பலனை ஏற்கிறது
* பதினொன்றாம் கை – மழை தருகிறது
* பன்னிரண்டாம் கை – வள்ளி, தெய்வானைக்கு மாலை சூட்டுகிறது