1. மனமே ஆன்மா. இக்கொள்கை உடையவர் அந்தக்கரண ஆன்மவாதி.
2. ஆன்மா ஒன்றே. இக்கொள்கை உடையவர் ஏகான்மவாதி.
3. இந்திரியமே (பொறி) ஆன்மா. இக்கொள்கை உடையவர் இந்திரியான்மாவாதி.
4. ஆன்மாவிற்கு உற்பத்தி உண்டு. இக்கொள்கை உடையவர் உற்பத்திவாதி.
5. சூனியமே (இன்மை) ஆன்மா. இக்கொள்கை உடையவர் சூனிய ஆன்மவாதி.
6. உயிர்வளியே ஆன்மா. இக்கொள்கை உடையவர் பிராணான்மாவாதி.
7. விஞ்ஞானமே ஆன்மா. இக்கொள்கை யோகசாரன் கொள்கை ஆகும்.
8. ஆன்மா சடப் பொருள். இக்கொள்கை வைசேடிகர் கொள்கை.
9. ஆன்மா ஆனந்தமடைவதே முத்தி. இக்கொள்கை உடையவர் ஆனந்த ஆன்மவாதி.