புத்த சமயத்தில் உள்ள பெண் தெய்வங்களுள் மிக முக்கியமானவர் தாரா தேவி. 21 வகையான தாரா தேவியை மகாயானம் மற்றும் வஜ்ஜிரயான பௌத்தர்கள் வழிபடுகின்றனர்.
மகிழ்ச்சி, துக்கம், பணம், புகழ், பதவி, அமைதியை பெற்றுத் தருபவராகவும், பயங்களை போக்குபவராகவும் தாரா தேவி கருதப்படுகின்றார்.
தாரா தேவியை வழிபடுவதும், அவரது மந்திரத்தைத் துதிப்பதும், மகாயான பௌத்தர்களின் கடமையாக இருக்கின்றது.
தாரா தேவின் புகழ்பெற்ற வடிவங்கள்
* பச்சை தாரா - உயர்ந்த செயல்களின் அதிபதி
* வெள்ளை தாரா - கருணை, நீண்ட ஆயுள் மற்றும் அமைதியுடன் தொடர்புள்ளவர்
* கறுப்பு தாரா - ஆற்றலுடன் தொடர்புடையவர்
* மஞ்சள் தாரா - செல்வ செழிப்புடன் தொடர்புடையவர்
* நீல தாரா - கோபத்துடன் தொடர்புடையவர்
பச்சைத் தாரா தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பௌத்த பெண் தெய்வங்கள்
1. கதிரவானி தாரா
2. வசிய தாரா
3. அரிய தாரா
4. மகத்தரி தாரா
5. வரத தாரா
6. துர்காத்தரனி தாரா
7. தண்டத் தாரா
8. ஜங்குலி
9. பரனாஸ்பரி
வெள்ளைத் தாரா தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தெய்வங்கள்
10. அஸ்தாம் அபையா
11. மிருத்துவ வஞ்சன தாரா
12. சத்ருஜ்ஜா சித்த தாரா
13. சதபுஜ சித்த தாரா
14. விஷ்வாத்மா
15. குருகுலா
16. ஜாங்குரி
மஞ்சள் தாரா தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தெய்வங்கள்
17. வஜ்ஜிர தாரா
18. ஜங்குலி
19. பிரனாஸ்பரி
20. பிர்குட்டி
நீலத்தாரா தெய்வத்தின் குடும்பத்தைச் சேர்ந்த பெண் தெய்வங்கள்
21. ஈஜித்தா