Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


4. முத்துக்குட்டியின் முடிவு

இன்றைய சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் - வெயிலாள் தம்பதியருக்கு மகனாக பிறந்த முத்துக்குட்டியின் இளமைகால வாழ்க்கை அவ்வளவு இனிமையானதாக அமையவில்லை. தாழ்த்தப்பட்ட ஜாதி பட்டியலில் இடம் பெற்றிருந்த நாடார் சமூகத்தில் பிறந்ததே அதற்கு காரணம். முத்துக்குட்டி கல்வி கற்கும் வயதை அடைந்தார். தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களின் குழந்தைகள் கல்வி கற்கக்கூடாது என்ற எழுதப்படாத சட்டம் இருந்ததால் முத்துக்குட்டியால் பள்ளிக்கூடத்திற்குச் சென்று கல்வி கற்க முடியவில்லை.

அப்போது, ஆதிக்க ஜாதியினருக்கு மட்டுமே கல்விக்கூடங்கள் செயல்பட்டன. பல இடங்களில் கோவில்களே கல்விக்கூடங்களாக மாறி கல்வி கற்றுக் கொடுக்கப்பட்டது. இங்கும் உயர் ஜாதியினரின் குழந்தைகள் மட்டும்தான் கல்வி கற்க முடியும். தாழ்த்தப்பட்டோர் பட்டியலில் இருந்த 18 ஜாதியினர் கோவில் பக்கமே எட்டிப் பார்க்கக் கூடாது.

இப்படிப்பட்ட சூழ்நிலையில் முத்துக்குட்டிக்கு எங்கே கல்வி கிடைக்கும்? ஆனாலும், சாமித்தோப்பு பகுதியில் வாழ்ந்த தாழ்த்தப்பட்டவர்களின் மரியாதைக்குரியவராக பொன்னுமாடன் இருந்ததால், அந்த ஊரில் பெரியவர் ஒருவர் நடத்திய பகுதி நேர திண்ணைப் பள்ளிக்கூடத்தில் முத்துக்குட்டியை சேர்த்து விட்டார். பெரியவரிடம் கல்வி பயின்ற முத்துக்குட்டி பல்வேறு நல்ல பழக்கவழக்கங்களை கற்றுக் கொண்டார்.

தந்தையைப் போலவே இரக்க குணமும் இவரிடம் நிரம்பியிருந்தது. அதேநேரம், தாழ்த்தப்பட்டவர்கள் அனுதினமும் நசுக்கப்படுவதை கண்டு உணர்ச்சி வசப்படுபவராகவும் இருந்தார். ஆதிக்க ஜாதியினர், தாழ்த்தப்பட்டவர்களை கொடுமைப்படுத்துவதை நேரில் கண்டு மனம் வருந்திய அவர், ஆதிக்க ஜாதியினரின் கொட்டத்தை அடக்குவதற்கு வீரம் தேவை என்பதை உணர்ந்தார். அதையொட்டி, களறி உள்ளிட்ட சண்டைப் பயிற்சிகளில் ஈடுபட்டு சிறந்த தேர்ச்சி பெற்றார். நாட்கள் வேகமாக நகர்ந்தன. முத்துக்குட்டி வேகமாக வளர்ந்து இளைஞர் ஆனார்.

தந்தை பொன்னுமாடன் தீவிர பெருமாள் பக்தர் என்பதால், அந்த தாக்கம் முத்துக்குட்டியிடமும் ஒட்டிக் கொண்டது. சிறு வயது முதலே திருமால் மீது மிகுந்த ஈடுபாடு கொண்டார். ஆனால், அன்றைய சூழ்நிலையில் தாழ்த்தப்பட்டவர்கள் கோவில்களுக்குள் வரக்கூடாது என்ற ஆதிக்க ஜாதியினரின் தடை இருந்ததால், வீட்டிலேயே திருமால் பீடத்தை அமைத்து வணங்க ஆரம்பித்தார்.



அன்றைய திருவிதாங்கூர் சமஸ்தான ஆட்சியில் திருமால் போன்ற தெய்வங்கள் கூட ஆதிக்க ஜாதியினரின் தெய்வங்களாகவே இருந்தனர். தாழ்த்தப்பட்டவர்கள் அவர்களை வணங்க தகுதி அற்றவர்கள் என்றே அறிவிக்கப்பட்டனர். அதனால், தாழ்த்தப்பட்டோர் திருமால் போன்ற ஆதிக்க ஜாதியினர் வழிபட்ட தெய்வ விக்கிரகங்களை கண்ணால் பார்க்கக்கூட முடியாத நிலையே தொடர்ந்தது. அப்படிப்பட்ட சூழ்நிலையில், திருமாலுக்கு வீட்டிலேயே பீடம் அமைத்து வழிபட்ட முத்துக்குட்டியை சமூக புரட்சியாளர் என்று தாராளமாகச் சொல்லலாம்.

முத்துக்குட்டி இளமையிலேயே புரட்சி எண்ணம் கொண்டு வளர்வதைக் கண்ட அவரது பெற்றோர் ஒருவகையில் கவலைப்பட்டாலும், மற்றொரு வகையில்... தாழ்த்தப்பட்டவர்களின் அடிமை விலங்குகளை உடைத்தெறிய இப்படியொருவன் நமது சமுதாயத்திற்கு தேவைதான் என்று எண்ணி பெருமிதப்பட்டுக் கொண்டனர். மேலும், முத்துக்குட்டியின் புரட்சி எண்ணங்கள், அவர் சார்ந்த சமுதாயத்தினருக்கும், பிற தாழ்த்தப்பட்ட வகுப்பைச் சேர்ந்தவர்களுக்கும் உற்சாகம் கொடுப்பதாக அமைந்தது.

“ஊருக்குத் தலைவன் உடைய வழிக்குந் தலைவன்
ஆருக்குந் தலைவன் என்று அன்னை பிதா வளர்த்தார்
ஞாயமிருப்பதனால் நாடாள்வானென்று சொல்லி
தாய் மக்களெல்லாம் தாங்கி மிக வளர்த்தார்
சொல்லுக்கும் வல்லவனாய் சூராதி சூரனிவன்
மல்லுக்கும் வல்லவனாய் உபாயத்திலும் பெரியோன்
மங்கையர்க்கு மேற்றவனாய் மாமோகக் காமீகன்
எங்கும் பேர் கேட்க வைப்பான் இவன் கீர்த்தி நலவளமை
பல்லாக்கு ஏறிடுவான் பார் முழுதும் ஆண்டிடுவான்
எல்லார்க்கும் நல்லவனாய் இவன் சமைவான் என்று சொல்லி
ஈவதற்கு தர்மன் என எளியோரை கண்பார்த்து
ஆய்வதற்கு நல்லான் என்றே மிக வளர்ந்தார்...”

- இப்படி, முத்துக்குட்டியின் இளமை வாழ்க்கை பற்றி குறிப்பிடுகிறது அகிலத்திரட்டு.

தந்தை எவ்வழியோ மகனும் அவ்வழி என்பார்கள். அதுபோல், முத்துக்குட்டியும் தந்தை மேற்கொண்ட பனை ஏறுதல் உள்ளிட்ட பனை சார்ந்த தொழிலில் ஈடுபட்டார். ஆனால், அவருக்கு அதில் ஈடுபாடு இல்லை. காரணம், இங்கேயும் ஆதிக்கம் செலுத்தினர், உயர் ஜாதியினர். அதாவது, ‘கட்டுக்குத்தகை’ என்ற பெயரில் தாழ்த்தப்பட்டவர்கள் வைத்திருக்கும் சிறு சிறு நிலங்களையும் ஆதிக்க ஜாதியினர் பிடுங்கிக் கொண்டனர். அந்த நிலத்தில் அவர்களையே விவசாயப் பணிகள் செய்ய வைத்து, விளைச்சலை எல்லாம் ஒட்டு மொத்தமாக அபகரித்துக் கொண்டனர். இருந்த சிறு நிலத்தை மட்டுமின்றி, உழைப்பையும் பறி கொடுத்து, கூலி வேலையை விடவும் கேவலமான வேலையே தாழ்த்தப்பட்டவர்களுக்கு மிஞ்சியது.

இதையெல்லாம் பார்த்து சகிக்க முடியாத முத்துக்குட்டி வெகுண்டு எழுந்தார். “எவ்வளவு காலத்திற்குத்தான் நாம் எல்லாம் ஆதிக்க ஜாதியினருக்கு அடிமையாக இருப்பது? இப்படியே போனால் நமக்கு உணர்ச்சி என்பதே இல்லாமல் போய்விடும். அப்புறம்... களத்தில் சொன்னதைச் செய்யும் காளை மாட்டிற்கும், நமக்கும் வித்தியாசம் இல்லாமல் போய்விடும்...” என்று, தனது சமுதாய இளைஞர்களிடம் பொங்கியெழுந்தார். அவரது புரட்சிக்கரமான பேச்சு நாதியற்று, உரிமைப் பற்றி பேச திறனற்று கிடந்த தாழ்த்தப்பட்ட இளைஞர்களை உசுப்பி விட்டது.



மேலும், தந்தையைப் போலவே பனைத்தொழில் செய்து வந்த முத்துக்குட்டி, மேல் ஜாதியினரால் கேலிக்கும், கிண்டலுக்கும் ஆளாக்கப்பட... அவருக்குள் புரட்சித் தீ இன்னும் வேகமாக பற்றி எரிந்தது. அதைத் தொடர்ந்து, தனது சமுதாய மக்கள் ஏன் இன்னும் குட்டக் குட்ட குனிந்து கொண்டே போகிறார்கள்? என்ற தேடலிலும் இறங்கினார்.

காலம் காலமாக தொடர்ந்து வந்த மூடநம்பிக்கைகளும், எதிர்த்து ஒரு வார்த்தை கூட பேசாமல் அடங்கிப் போகும் குணமுமே தனது சமுதாய மக்கள் இன்னும் முன்னேறாமல், ஆதிக்க ஜாதியினரின் கட்டுப்பாட்டில் இருப்பதற்கு காரணம் என்பதை உணர்ந்தார்.

இதையடுத்து, தனது சமுதாய மக்களிடம் என்னென்ன மூட பழக்கவழக்கங்கள் உள்ளன என்பது பற்றி ஆராய்ந்தார். அதில் முதலிடம் பிடித்தது, கணவனை இழந்த பெண்களின் நிலை. அவர்களை, திருமணம் உள்ளிட்ட சுபநிகழ்ச்சிகளில் பங்கேற்க விடாமல் ஒதுக்கி வைத்திருந்தனர். இவற்றை நேரில் கண்ட முத்துக்குட்டி, திருமணம் என்று ஒன்று தனக்கு நடந்தால், அது கணவனை இழந்த ஒரு பெண்ணுடன்தான் இருக்க வேண்டும் என்று உறுதியாக முடிவெடுத்தார். அப்போது முத்துக்குட்டிக்கு வயது 17 ஆகியிருந்தது.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1d.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License