Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினாறாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

சமையல்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
ஆன்மிகத் தொடர்கள்

அய்யா வைகுண்டர்

நெல்லை விவேகநந்தா


8. முத்துக்குட்டி வைகுண்டரான கதை.

தேவேந்திரன் மணிமுடி மீது ஆசைப்பட்டு தான் பேசிய பேச்சை சிவபெருமானும், திருமாலும், ஏன்... அந்த தேவேந்திரனும் கேட்டு விட்டான் என்பதை அறிந்த சம்பூர்ணதேவன் அதிர்ந்தே போய் விட்டான். பரதேவதையும் அதே நிலைக்குத்தான் ஆளானாள். இருவரும் குற்றத்தை உணர்ந்து தலைகுனிந்து நின்றனர்.

அப்போது திருமாலே திருவாய் மலர்ந்தார்.

“சம்பூர்ணதேவா! கடுமையாகத் தவம் இருந்தும் கடைசியில் இப்படி பேராசைப்பட்டு விட்டாயே... இந்தப் பேராசையினால் உங்கள் இருவரது தவமும் வீண் போய்விட்டது. ஆனாலும், நீங்கள் இருவரும் பூலோகத்தில் பிறக்கப் போகிறீர்கள். அதே நேரம் சில நிபந்தனைகள் உங்களுக்கு இருக்கும்...” என்றவர், அடுத்ததாக பரதேவதை பக்கம் தனது பார்வையை திருப்பினார்.

“பரதேவதை... சம்பூர்ணதேவனுடன் நீ இணைந்ததன் மூலம், உன் எமலோக கணவனுக்கும், அவன் மூலம் பிறந்த இரு குழந்தைகளுக்கும் துரோகம் செய்து விட்டாய். அதற்கான தண்டனை உனக்கு நிச்சயம் உண்டு. நீ பூலோகத்தில் பிறக்கும் போது உனக்காகவே உன் எமலோக கணவன் காத்திருப்பான். அவனை மணம் புரிந்து, அவனுக்கு எல்லா பணிவிடைகளையும் செய்வாய். அப்படி இருந்தும், அவன் உன்னை கொடுமைப்படுத்துவான். குடும்ப வாழ்க்கையில் மகிழ்ச்சியை தொலைக்கும் நீ, ஒருகட்டத்தில் கணவனையே இழந்து விடுவாய். குழந்தைகளுடன் தனிமரமாக நிற்பாய்... அப்போது பூலோகத்தில் கலியின் கோரத் தாண்டவம் அதிகமாக இருக்கும். மக்கள் தவியாய் தவிப்பார்கள். அந்த கலியில் இருந்து மக்களைக் காப்பதற்காகவே சம்பூர்ணதேவன் அங்கே பிறப்பான். இருவரும் சந்தித்துக் கொள்வீர்கள். நீ பெற்ற குழந்தைகளை விடுத்து சம்பூர்ணதேவனோடு இணைவாய். ஊரே உன்னை தூற்றும். ஆனாலும், கடைசியில் நீ தெய்வத்தாய் என்று போற்றப்படுவாய்...” என்று திருமால் சொல்லி முடித்த போது, சம்பூர்ணதேவன் சோகத்தில் இருந்து மீளாமலேயே இருந்தான்.

தொடர்ந்து, அவன் பக்கம் திரும்பினார் திருமால்.



“நீ இந்திரன் மணிமுடி மீது பேராசை கொண்டது மிகப்பெரிய பாவச் செயல். அதற்காக நீ மானிடப் பிறவி எடுத்துத்தான் ஆகவேண்டும். 22 வயது வரை சாதாரண மனிதனாக பூலோகத்தில் வாழும் நீ, இன்னொருவனின் மனைவியாக இருக்கும் இதே பரதேவதையை மோகிப்பாய்... மணப்பாய். அதன்பிறகு, தீராத நோய் பாதிப்புக்கு ஆளாகி மரணத்திற்காக போராடுவாய். அப்போது நான் உனக்குள் இறங்கி, உன்னை மீட்டு தர்மத்தை நிலைநாட்டுவேன். உன்னை மனிதர்கள், கடவுள் நிலைக்கு போற்றும் அளவுக்கான தகுதியையும் கொடுப்பேன்...” என்று, திருமால் சொன்ன பிறகுதான் நிம்மதி பெருமூச்சு விட்டான் சம்பூர்ணதேவன்.

அதன்படி, சாமித்தோப்பில் பொன்னுமாடன் நாடார் மற்றும் வெயிலாள் அம்மையாருக்கு மகனாக, முத்துக்குட்டியாக பிறந்தார் சம்பூர்ணதேவன். பரதேவதையும் அதே பகுதியில் பிறப்பெடுத்தாள்.

இந்த முன்ஜென்ம உண்மைக் கதையை, வைகுண்டராக மாறிய முத்துக்குட்டி செந்தூர் கடற்கரையில் தனது பெற்றோரிடமும், உறவினர்களிடமும் சொன்ன போது, அதை அவர்களால் நம்ப முடியவில்லை. நம்பாமலும் இருக்க முடியவில்லை. கடல் அலைகளால் இழுத்துச் செல்லப்பட்டு 3 நாட்களாக காணாமல் போனவன், மீண்டும் உயிரோடு... கடல் நடுவே நடந்து வெளியே வந்தால்... நிச்சயம் அந்த முன்ஜென்மக் கதை உண்மைதான் என்று நம்பினர். அதை முழுமனதோடு ஏற்றுக் கொண்டனர்.

அப்போதுதான் அவரது உறவினர் ஒருவருக்கு சந்தேகம் ஏற்பட்டது.

“கடல் அலை இழுத்துச் சென்றது ஏன்? அதன்பிறகு என்ன நடந்தது?” என்று கேட்டார் அவர்.

அதற்கும் வைகுண்டரிடம் இருந்து சட்டென்று பதில் வந்தது.

“மகா விஷ்ணுவாகிய திருமாலின் ஆணைப்படி இரு அரூப (உருவமற்ற) முனிவர்கள் என்னைத் தங்களது தோள்களில் தாங்கிச் சுமந்து சென்றனர். அந்த காட்சி, நான் கடலில் தீர்த்தமாட எழுந்து செல்வதாக உங்களுக்கு தெரிந்தது. திடீரென்று காணாமல் போன போது கடல் அலைதான் இழுத்துச் சென்று விட்டது என்று கருதிவிட்டீர்கள். ஆனால், அப்படி நடக்கவில்லை. நான் சென்றது, மகாவிஷ்ணு வாசம் செய்யும் வைகுண்டத்திற்கு... அங்கே எனது சரீரத்தை மகர அரங்கில் இருந்த ஒரு பெட்டகத்திற்குள் வைத்து குழந்தையாக்கினர். பின்னர், மும்மூர்த்திகளும் அதனுள் உறைந்து, ஒரே மூர்த்தியாக, ஓர் இளைஞனாக மாற்றினர். அந்த இளைஞனான என்னிடம், கலியுகம் பற்றிக் கூறி, அதை அழிப்பதற்கான வழியையும் தெரிவித்து, பரபிரம்மம் பற்றிய ஞானத்தையும் அருளினார் திருமால்.

மேலும், என்னைத் தனது மகன் என்று கூறிய திருமால், என்னை எப்போதும் பின் தொடர்வதாகவும் கூறினார். “வைகுண்டம் வந்த நீ, இனி வைகுண்டன் என்றே அழைக்கப்படுவாய். அய்யா என்றும் உன்னை இந்த உலகமே வழிபடும். பூலோகம் சென்று, கலியை வென்று வா...” என்று வழியனுப்பி வைத்தார். இப்போது, நான் உங்கள் மகன் மட்டுமின்றி, இந்த உலகில் உள்ள ஒவ்வொரு தாய்க்குமே மகன்தான்...” என்று, தனது பெற்றோரிடம் வைகுண்டர் சொல்லச் சொல்ல... அவர்கள் நடப்பது கனவா? அல்லது நனவா? என்று திகைத்துப் போயினர்.

எப்போது தர்மத்திற்கு சோதனை ஏற்படுகிறதோ, அப்போதெல்லாம் இந்தப் பூமியில் அவதரிப்பேன் என்றார் கிருஷ்ண பரமாத்மா. அந்தக் கிருஷ்ண பரமாத்மா, திருமால், மகாவிஷ்ணுதான் இப்போது அய்யா வைகுண்டராக அவதரித்து இருக்கிறார் என்பதை அறிந்த பொதுமக்கள் உற்சாகம் ஆனார்கள். அய்யா வைகுண்டரின் போதனைகளுக்காக ஏங்கினர். அவர்களிடம், கரைபுரண்டு ஓடும் புது வெள்ளம் போல், சுதந்திர விடியலுக்காகப் போராடும் போராளி போல் பேசத் தொடங்கினார். குறிப்பாக, ஆன்மிக வழிபாடு எப்படி இருக்க வேண்டும் என்பது பற்றிப் பேசினார். அவர் கூறிய அனைத்தும் புதுமையாக இருந்தன.



கடவுள் என்ற பெயரில் பணத்தை அள்ளிக் கொடுக்காதீர்கள். அதுபோல், வாங்கவும் செய்யாதீர்கள்.

பூஜை என்கிற பெயரில் பணத்தை தண்ணீராகச் செலவு செய்யாதீர்கள்.

பூஜை என்று சொல்லி உயிர்ப்பலி கொடுக்க வேண்டாம்.

அன்பின் வடிவானவரே கடவுள். அவள், உங்கள் ஒவ்வொருவருக்குள்ளும் இருக்கிறார்.

எல்லோரும் நியாயம் தவறாமல் நேர்மையாக வாழுங்கள். யாருக்கும் அஞ்சாதீர்கள்.

- இப்படி, புதுமையாக மக்கள் மத்தியில் முழங்கினார், அய்யா வைகுண்டர். அவரது உரை அடங்கிக் கிடந்த மக்களுக்கு புதுத்தெம்பைத் தந்தது. அவர்களுக்குள் புதிய எண்ணம் ஓடியது. தங்களின் அடிமை வாழ்வு மறைந்து மனிதனாக வாழப் போகிறோம் என்கிற புதிய நம்பிக்கை பிறந்தது. தொடர்ந்து, அவர் பெற்றோர் மற்றும் உறவினர்களுடன் நடக்கத் தொடங்கினார். சாமித்தோப்பு நோக்கிச் சென்ற அவரைக் கண்ணுக்கு எட்டிய தூரம்வரை கை கூப்பி வணங்கியபடி நின்றிருந்தனர் அங்கிருந்த மக்கள்.


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/serial/p1h.html


  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License