Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 8
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்

உ. தாமரைச்செல்வி


கர்நாடக மாநிலம் மைசூரில் உள்ள சாமுண்டி மலையில் இருக்கும் சாமுண்டேஸ்வரி அம்மன்தான் இந்த சவுடேஸ்வரி அம்மன் என்கிறார்கள். கர்நாடகாவில் இந்த அம்மனை தங்கள் குல தெய்வமாக வணங்கி வந்த தேவாங்கர் சமுதாயத்தினர் சில நூற்றாண்டுகளுக்கு முன்பு இங்கிருந்து தொழில் நிமித்தமாக தமிழ்நாடு, ஆந்திரா, கேரளா போன்ற பிற மாநிலங்களுக்கு இடம் பெயர்ந்தனர். நெசவுத் தொழில் செய்து வந்த இவர்கள் தாங்கள் சென்று குடியேறிய ஊர்களிலெல்லாம் தங்களது தெய்வமாக ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் திருக்கோவிலை அமைத்திருக்கிறார்கள். தமிழ்நாட்டில் கன்னட மொழி பேசும் இந்த தேவாங்கர் சமுதாயத்தினர் தேவாங்க செட்டியார் என்றும் அழைக்கப்படுகின்றனர். இவர்கள் கோயம்புத்தூர், தேனி, திண்டுக்கல், சேலம், ஈரோடு, மதுரை மற்றும் விருதுநகர் மாவட்டங்களில் உள்ள பல ஊர்களில் குறிப்பிட்ட அளவில் வசித்து வருகின்றனர். இவர்கள் இந்து சமயத்தின் சைவம், வைணவம் என்கிற இரு பிரிவுகளில் தங்கள் தெய்வ வழிபாட்டு முறைகளைக் கடைப்பிடித்து வந்தாலும் அனைவருக்கும் பொதுவாக இந்த ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில் அமைத்து வழிபட்டு வருகின்றனர். இந்த சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் ஊர்களில் எல்லாம் சவுடேஸ்வரி அம்மனுக்குக் கோவில்கள் அமைக்கப்பட்டு இருக்கிறது.

தல வரலாறு

தேவமுனி என்பவர் துணி நெய்வதற்காக தேவலோகத்திலிருந்து பூலோகத்திற்கு வந்தார். அங்கு அவர் தாமரைத் தண்டுகளிலிருந்தும், மலர்களின் இதழ்களிலிருந்தும் துணிகள் நெய்வதற்கான நூலிழைகளைப் பிரித்து வைத்திருந்தார். இதையறிந்த அசுரர்கள் அவருடைய இடத்திற்கு வந்து அவருக்குத் தெரியாமல் அந்த நூலிழைகளை எடுத்துச் சென்று விட்டனர்.

தன்னுடைய நூலிழைகள் காணாமல் போய்விட்டதால் தேவமுனி வருத்தமடைந்தார். தன்னுடைய நூலிழைகளை எப்படியாவது கண்டுபிடித்துத் தரும்படி இறைவனை வேண்டினார். அப்போது அவர் முன் தோன்றிய சவுடேஸ்வரி அம்மன் அவருடைய தாமரை நூல்களை அதைத் திருடிச் சென்ற அசுரர்களிடமிருந்து தான் மீட்டுத் தருவதாகக் கூறினார்.

அதன்படி சவுடேஸ்வரி அம்மன் தாமரை நூல்களைத் திருடிச் சென்ற அசுரர்களைக் கண்டு அழித்து அவர்களிடமிருந்து தேவமுனியின் தாமரை நூல்களை மீட்டு வந்து தந்தார். இதனால் மகிழ்ச்சியடைந்த தேவமுனி சவுடேஸ்வரி அம்மனிடம் அந்த ஊரிலேயே அம்மனுக்கு ஆலயம் ஒன்று அமைக்கப் போவதாகவும் அந்த ஆலயத்தில் குடிகொண்டு அந்த ஊரிலிருப்பவர்களுக்கு அருள் புரிய வேண்டும் என்றும் கேட்டுக் கொண்டார். சவுடேஸ்வரி அம்மனும் அதற்கு சம்மதித்துச் சென்றார்.

தேவமுனியும் அந்த ஊரில் இருக்கும் அம்மனுடைய பக்தர்கள் உதவியுடன் அழகான கோவில் ஒன்றைக் கட்டினார். அந்தக் கோவிலில் வந்து தங்கி அந்த ஊர் மக்களுக்கு அருள் புரிய வேண்டி சில பக்தர்களுடன் அந்த அம்மனை அழைக்கச் சென்றனர். அப்போது அந்த சவுடேஸ்வரி அம்மன் அவர்களிடம் அந்தக் கோவிலில் தான் வந்து குடியமர்ந்து கொள்ள ஒரு நிபந்தனையை விதித்தார்.



பக்தர்கள் அனைவரும் முன்னால் நடந்து செல்ல வேண்டும். அம்மன் அவர்களுக்குப் பின்னால் நடந்து வருவார். ஆனால் முன்னால் நடந்து செல்பவர்கள் பின்னால் திரும்பிப் பார்க்கக் கூடாது. அப்படி பின்னால் திரும்பிப் பார்த்தால் அம்மன் அந்த இடத்திலேயே தங்கி விடப் போவதாகவும் தெரிவித்தார்.

இந்த நிபந்தனைக்கு தேவமுனியும் மற்றவர்களும் சம்மதித்தனர். அவர்கள் முன்னால் நடக்கத் துவங்கினர். அம்மனும் அவர்களைப் பின் தொடர்ந்து வந்து கொண்டிருந்தார். அம்மனின் காலில் கட்டியிருந்த கால் சலங்கையின் ஒலியைக் கேட்டபடி அவர்கள் முன்னால் நடந்து சென்று கொண்டிருந்தனர். வழியில் நீரோடை ஒன்று குறுக்கிட்டது. அனைவரும் முன்னால் சென்றனர். ஆனால் சலங்கை ஒலி நின்று போனது. தங்களுக்குப் பின்னால் வந்து கொண்டிருந்த அம்மன் வரவில்லையே என்று அவர்கள் திரும்பிப் பார்த்தனர். இதையடுத்து அம்மன் அந்த இடத்திலேயே தங்கி விட்டார்.

இதனால் வருத்தமடைந்த பக்தர்கள் தங்கள் தவறுக்காக வருந்தி தங்கள் உடலைக் கத்தியால் கீறிக் கொண்டனர். அவர்கள் உடலில் இரத்தம் சொட்டச் சொட்டத் தங்களை மன்னித்து தங்களது கோவிலுக்கு வந்து அமர்ந்து அருள் வழங்கவும் வேண்டிக் கொண்டனர். அவர்களது தீவிர வேண்டுதலில் மனமிரங்கிய அம்மன் அவர்கள் வேண்டுகோளை ஏற்று அவர்கள் கோவிலுக்கு வந்து குடியமர்ந்தார் என்று தேவாங்கர் குலத்தைச் சேர்ந்த பெரியவர்கள் இந்த அம்மனின் முதல் தலம் அமைந்த வரலாற்றைத் தெரிவிக்கின்றனர்.

வழிபாடுகளும் சிறப்புகளும்

இந்த சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் தேவாங்கர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் ஒரு சில ஊர்களில் வருடந்தோறும் திருவிழா நடத்தப்படுகிறது. இந்தத் திருவிழாவின் போது ஏழு நாட்கள் வரை விரதமிருக்கும் பக்தர்கள் குழு அந்தக் கோவிலில் பூசாரிகளாக இருப்பவர்கள் சொல்லும் இடத்திற்குச் சென்று தீர்த்தம் எடுத்து வரச் செல்கிறார்கள். அவ்விடத்தில் இந்த பக்தர்கள் குழு சூரிய உதயத்திற்கு முன்பாக தீர்த்தம் எடுத்துக் கொண்டு தங்கள் கோவிலிருக்கும் எல்கைக்குள் சூரிய அஸ்தமனத்திற்கு முன்பாக வர வேண்டும் என்பதைக் கடைப்பிடிக்கிறார்கள். இப்படி கொண்டு வரப்பட்ட தீர்த்தம் கோவிலுக்குள் கொண்டு செல்வதற்கு முன்பாக ஊரின் எல்லைப் பகுதியிலிருந்து இவர்கள் ஊர்வலமாகச் செல்கின்றனர். இந்த அம்மன் அழைப்பு ஊர்வலத்தில் முன்பாகச் செல்லும் சில பக்தர்கள் தல வரலாற்றில் சொல்லியபடி தங்கள் உடலில் மார்புப் பகுதியில் கத்தியைக் கொண்டு கீறிக் கொள்கிறார்கள். இப்படி கத்தியால் உடலைக் கீறிக் கொள்ளும் பக்தர்கள் "சவுடம்மா வேசுக்கோ... தீசுக்கோ..." (சவுடம்மா வாங்கிக்கொள்... ஏற்றுக்கொள்...) என்று கன்னட மொழியில் பக்தியுடன் ரத்தம் வழிவதையும் பொருட்படுத்தாமல் முன்னே செல்கின்றனர். இதற்கு கத்தி போடுதல் என்று சொல்கிறார்கள். கத்தியால் கீறப்பட்ட காயங்களை குணப்படுத்த 11 வகை மூலிகைகளினால் ஆன திருமஞ்சனப்பொடி பயன்படுத்தப்படுகிறது. இந்தப்பொடி எப்படிப்பட்ட காயத்தையும் இரண்டு நாட்களில் சரியாக்கி விடும் என்கின்றனர். (ஒரு சில ஊர்களில் கத்திபோடும் போது காயம் வரக்கூடாது என்றும் சொல்கிறார்கள்.) இப்படி கொண்டு செல்லப்படும் தீர்த்தம் கோவிலில் அம்மன் சிலை முன்பு வைக்கப்பட்டு மறுநாள் அபிசேகம் மற்றும் இதர பூஜைகள் செய்யப்படுகின்றன.



இது போல் ஒரு சில ஊர்களில் சவுடேஸ்வரி அம்மன் கோவில்களில் மூன்று வருடங்களுக்கு ஒருமுறை பெரிய கும்பிடு என்றும், பன்னிரண்டு வருடங்களுக்கு ஒரு முறை மகா கும்பிடு என்றும் விழாக்கள் நடத்தப்படுகின்றன. இந்த விழாக்களின் போது அம்மன் அழைப்பிற்கு "சக்தி நிறுத்துதல்" எனும் முறை கடைப்பிடிக்கப்படுகிறது. இம்முறைக்காக ஒவ்வொரு கோவிலிலும் இதற்கென தனி கத்தி ஒன்று வைக்கப்பட்டுள்ளது. இதற்கென விரதமிருந்த பக்தர்கள் இந்தக் கத்தியை மட்டும் குதிரையின் மேல் வைத்துக் கொண்டு வருகின்றனர். இந்த சக்தி நிறுத்துதலிற்கு இருபுறமும் சிறுமிகளும், வயதான பெண்களும் சேர்ந்து ஊறவைத்த அரிசி, வெல்லம் போன்றவைகளை இடித்து தண்ணீர் சேர்க்காமல் உருட்டிய மாவில் தீபமேற்றி வழிபாடு செய்யப்படுகிறது. அதன் பின்பு குறிப்பிட்ட நேரத்தில் அந்தக் கத்தியை அம்மனின் வடிவமாகக் கருதி சக்தி நிறுத்தம் செய்கின்றனர். இதற்காகத் தனியாக வைக்கப்பட்டிருக்கும் மலர்களால் அலங்கரிக்கப்பட்ட தண்ணீர் நிரப்பிய மண் கலயத்தின் விளிம்பின் நுனியில் கத்தியை நூலால் பிடித்து நிறுத்துகின்றனர். இப்படி நிறுத்தப்படும் நேரத்தில் கத்தி நிற்காத நிலையில் பக்தர்கள் தல வரலாற்றில் சொல்லியபடி தங்கள் உடலில் மார்புப் பகுதியில் கத்தியைக் கொண்டு கீறிக் கொள்கிறார்கள். இப்படி கத்தியால் உடலைக் கீறிக் கொள்ளும் பக்தர்கள் "சவுடம்மா வேசுக்கோ... தீசுக்கோ..." (சவுடம்மா வாங்கிக்கொள்... ஏற்றுக்கொள்...)என்று கன்னட மொழியில் பக்தியுடன் கத்தி போடுகிறார்கள். கத்தி நிற்கும் வரை பக்தர்கள் கத்தி போடும் நிகழ்ச்சி தொடர்ந்து நடைபெறுகிறது. இந்த சக்தி நிறுத்தல் நிகழ்வின் போது பெண்கள், குழந்தைகள் கலந்து கொள்ள அனுமதிக்கப் படுவதில்லை. இப்படி நிறுத்தப்பட்ட கத்தி இருபத்து நான்கு மணி நேரத்திற்குப் பின்பு கலயத்திலிருந்து வெளியே தாவி விழுந்து விடுமாம். இப்படி விழும் சக்தி வடிவமான கத்தி தங்கள் மடியில் விழுந்தால் நல்லது என்கிற எண்ணத்தில் அந்த சமுதாயத்தைச் சேர்ந்த முக்கியமானவர்கள் குறிப்பிட்ட நேரத்தில் அதைச் சூழ்ந்து அமர்ந்து கொள்வார்களாம். இந்த 24 மணி நேரத்தில் சவுடேஸ்வரி அம்மனுக்குச் செய்யப்படும் அனைத்து சிறப்பு வழிபாடுகளும் செய்யப்படுகின்றன.



முக்கியமான சில தலங்கள்

தேவாங்கர் சமுதாயத்தினர் அதிகமாக வசிக்கும் அனைத்து ஊர்களிலும் இந்த ஸ்ரீ ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்கள் இருக்கின்றன. இருப்பினும் கீழ்காணும் ஊர்களில் உள்ள கோவில்களில் வருடந்தோறும் சிறப்புத் திருவிழாக்கள் நடைபெறுகின்றன. 1. கோயம்புத்தூரில் பூ மார்க்கெட் பகுதியில் அமைந்துள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில். (இக்கோவிலில் ஆண்டுதோறும் நவராத்திரி விழாவின் போது 10 நாட்கள் விழா நடைபெறுகிறது. இத்திருவிழா தமிழகம் முழுவதும் பிரபலமடைந்து இருக்கிறது.) 2. கோயம்புத்தூர் மாவட்டம் பெருமாநல்லூர் அருகிலுள்ள கணக்கன்பாளையம் எனும் ஊரில் அமைந்துள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

3. திண்டுக்கல் மாவட்டம் சின்னாளபட்டியில் உள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

4. தேனி அருகிலுள்ள பழனிசெட்டிபட்டியில் உள்ள ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

5. தேனி மாவட்டம் போடிநாயக்கனூர் ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

6. விருதுநகர் மாவட்டம் அருப்புக்கோட்டை ஸ்ரீ மது ராமலிங்க சவுடேஸ்வரி அம்மன் கோவில்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p2.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License