Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam

முத்து: 12 கமலம்: 18
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

சமையல்
அசைவச் சமையல்
Alexa Rank


ஆன்மிகம்
இந்து சமய வழிபாட்டுத் தலங்கள்

சின்னாளபட்டி அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில்

உ. தாமரைச்செல்வி


சனி, இராகு போன்ற கிரகங்களால் வரும் துன்பங்களைத் தீர்த்து, பணி உயர்வு, திருமண வாய்ப்பு, குழந்தைப்பேறு, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களை அருளுகிறார் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டி அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் கோயில் கொண்டிருக்கும் அஞ்சலிவரத ஆஞ்சநேயர்.

அனுமன் வரலாறு

அரசனான தசரதன் குழந்தைப்பேறு வேண்டிச் செய்த யாகத்தின் பிரசாதமான பாயாசத்தை ஒரு கருடன் கொத்திக் கொண்டு போனது. அந்தப் பிரசாதம் அஞ்சனையின் கையில் போய் விழுந்தது. அதைச் சாப்பிட்ட கேசரி, அஞ்சனை தம்பதியினருக்கு மார்கழி மாதம் மூல நட்சத்திர நாளில் அழகான ஆண் குழந்தை ஒன்று பிறந்தது. அவர்கள் அக்குழந்தைக்குச் சுந்தரன் என்று பெயரிட்டு வளர்த்து வந்தனர்.

அந்தக் குழந்தைக்கு ஒருநாள் பசி எடுத்தபோது, வானத்தில் தெரிந்த சூரியனைப் பழம் என நினைத்து அதைச் சாப்பிட வானிற்குச் சென்றது. வானம் நோக்கி வந்த குழந்தையை இந்திரன் தன்னிடமிருந்த ஆயுதத்தால் தடுத்து நிறுத்தினார். இதில் அந்தக் குழந்தையின் தாடை சற்று வளைந்ததால் அனுமன் என்று அழைக்கப்பட்டான். (அனுமன் என்றால் “வளைந்த தாடையை உடையவன்” என்று பொருள்)

வளர்ந்து பெரியவனான அனுமன் சீதையைத் தேடிக் காட்டுக்குள் வந்த இராமனிடம் அன்பு கொண்டான். அந்த அன்பு பக்தியாக மாறியது. அனுமன் இராமனையே இறைவனாக வழிபடத் தொடங்கினான். இறைவன் மேலான பக்தியை மூன்று வகைகளாகக் குறிப்பிடுகின்றனர். இறைவன் நம் கண்களுக்கும் புலன்களுக்கும் எட்டாத நிலையில் எங்கோ இருந்து நம்மைக் காத்து அருள்கிறார் என்கிற எண்ணத்துடன் இறைவனை நினைத்து வழிபடுவது முதல் வகை. உலகிலுள்ள அனைத்து உயிரினங்களிலும் இறைவன் இருப்பதாக நினைத்து அவைகளிடம் அன்பு செலுத்தி இறைவனை வழிபடுவது இரண்டாவது வகை. இறைவன் தன்னுள்ளேயே இருக்கிறார், தன்னைத் தூய்மைப்படுத்திக் கொண்டு, தன்னுள்ளே வாழும் இறைவனிடம் சரணாகதி அடைந்து சேவை செய்வது மூன்றாவது வகை. இதில் அனுமன் இராமனிடம் கொண்ட பக்தியும் வழிபாடும் மூன்றாவது வகையைச் சேர்ந்தது.

அனுமன் சீதையை மீட்பதற்காக முதலில் இராமனின் தூதுவனாகச் சென்றார். பின்னர் இராவணனை அழிப்பதற்கான போரில் இராமனுக்குத் துணையாகச் சென்றார். அனுமன் தனது இராம பக்தியினாலும், தன்னலமற்ற சேவையினாலும் இராமன், சீதைக்கு அடுத்த நிலையில் உயர்ந்து நின்றார்.



அனுமன் கோயில்கள்

தன்னலமற்ற சேவையினால் உயர்ந்து நின்ற அனுமனுக்கு சுசீந்திரம், நாமக்கல், நங்கநல்லூர், தெய்வச்செயல்புரம், குலசேகரன்கோட்டை, பஞ்சவடி என்று பல ஊர்களில் மிக உயரமான சிலைகள் அமைக்கப்பட்டும், பல ஊர்களில் தனிக்கோயில்கள் அமைக்கப்பட்டும் வழிபாடுகள் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றன. இப்படி அமைக்கப்பட்ட கோயில்களில் திண்டுக்கல் மாவட்டம், சின்னாளபட்டிக்கு அருகிலுள்ள மேட்டுப்பட்டியில் அமைந்துள்ள அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலும் ஒன்றாக இருக்கிறது.


தல வரலாறு

பக்தர் ஒருவரின் கனவில் தோன்றிய அனுமன் இந்த இடத்தில் தான் தியான கோலத்தில் இருப்பதாகவும், இங்கு தனக்குக் கோயில் ஒன்று அமைக்கும்படியும் கூறினார். இதைத் தொடர்ந்து அந்த பக்தரின் முயற்சியினால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயில் கட்டப்பட்டிருக்கிறது. இக்கோயிலின் மூலவரான ஆஞ்சநேயர் "வணங்கிய நிலை”யில் 16 அடி உயரத்தில் மார்பில் சிவலிங்கம் வடிக்கப்பட்டு, கால்களில் காலணி அணிந்து, இடுப்பில் கத்தி செருகியபடி கதாயுதத்துடன் போர்க்கோலத்தில் இருப்பது போன்று வடிவமைக்கப்பட்டிருக்கிறது.

நைமிசாரண்யத்தில் கண்டெடுக்கப்பட்ட மிகப்பெரிய சாளக்கிராமத்தினால் செய்யப்பட்ட இச்சிலையின் வலது கண் சூரியன், இடது கண் சந்திரன், இவரது கேசம் ஒளிவட்டம் போன்றும் வடிவமைக்கப்பட்டிருக்கிறது. சிவனைப் போன்று ஜடாமுடியுடன் தோன்றும் இவரை வணங்கினால் கல்வி, செல்வம் ஆகியவற்றுடன் ஆயுட்காலமும் அதிகரிக்கும். இவரது வால் காலை நோக்கிக் கீழாக அமைந்திருக்கிறது. அனுமனின் இந்த வால் காலை நோக்கிக் கீழான நிலையைக் கண்டு வழிபடுபவர்களுக்குப் பணி உயர்வு, திருமண வாய்ப்பு, குழந்தைப்பேறு, வழக்குகளில் வெற்றி போன்ற பல்வேறு நற்பயன்களும் கிட்டும் என்கின்றனர். மேலும், இவரை வழிபட்டால் சனி, இராகு போன்ற கிரகங்களினால் வரும் துன்பங்கள் அனைத்தும் நீங்கி நற்பலன்களை அடைய முடியும் என்கின்றனர்.

இக்கோயிலின் விமானத்தில் சுந்தர காண்டத்தின் 64 காட்சிகள் சிற்பங்களாக அமைக்கப்பட்டிருக்கின்றன. இக்கோயிலில் இருக்கும் ஆஞ்சநேயர் போர்க்கோலத்தில் இருப்பதால் கோயிலின் மகாமண்டபத்தில் அவரது துணைவர்களான நளன், நீளன், அங்கதன், குமுதன், சுக்ரீவன், ஜாம்பவந்தன், ஜிதன், ஜுவிதன் என எட்டு பேர்களின் உருவச்சிலைகளும் இடம் பெற்றிருக்கின்றன. கோயில் வளாகத்தில் இராமர், சீதை, இலட்சுமணர் சிலைகளும், கோயிலின் சுற்றுப்பகுதியில் இலட்சுமி, சரஸ்வதி சிலைகளும் அமைக்கப்பட்டிருக்கின்றன.

இராமாயண காலத்தில் அனுமன் சஞ்சீவி மலையை எடுத்துச் செல்லும் போது, இங்கு அவருடைய கால் பதிந்ததாகவும், சஞ்சீவி மலையிலிருந்து விழுந்த சிறுபகுதியே கோயிலின் எதிரில் உள்ள சிறுமலை என்றும் கூறுகின்றனர்.



சிறப்பு வழிபாடுகள்

இக்கோயிலில் ஆஞ்சநேயர் பிறந்த நட்சத்திரமான மூலம் நட்சத்திர நாட்களிலும், சனிக்கிழமைகளிலும் ஆஞசநேயருக்குச் சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப் பெறுகின்றன. தை மாதம் முதல் நாளில் 5008 கரும்புகளைக் கொண்டு சிறப்பு அலங்காரம், சித்திரை மாதம் முதல் நாளில் பத்தாயிரம் கனிகளைக் கொண்டு அலங்காரம், ஆடி அமாவாசை அன்று தங்கக்காப்பு அலங்காரம், புரட்டாசி மாதம் வரும் சனிக்கிழமைகளில் முதலாவது சனியன்று ராஜ அலங்காரம், இரண்டாவது சனியன்று செந்தூர அலங்காரம், மூன்றாவது சனியன்று பச்சை அலங்காரம், நான்காவது சனியன்று சஞ்சீவி மலையைத் தூக்கி வரும் அலங்காரம், ஐந்தாவது சனியன்று பத்மாசனத்தில் தியான அலங்காரம் என்று பல்வேறு சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடத்தப்பெற்று வருகின்றன.

இக்கோயிலில் ஒவ்வொரு ஆண்டும் ஜூலை மாதத்தில் ஆண்டு வழிபாடு நடத்தப் பெறுகிறது. இதைத் தொடர்ந்து வரும் மூலம் நட்சத்திர நாளில் 508 லிட்டர் பாலாபிஷேகம், 108 கலசாபிஷேகம், 7 வருணாபிஷேகம் ஆகியவை நடைபெறுகின்றன. அடுத்த நாள் மகாபாரத காலத்தில் பீமனுடன் வாதம் புரிந்த வயோதிக ஆஞ்சநேயர் அலங்காரம், அதையடுத்து கருடர், வராகர், நரசிம்மர், ஹயக்கிரீவர் மற்றும் ஆஞ்சநேயரின் வடிவம் கொண்ட பஞ்சமுக ஆஞ்சநேயர் என்று சிறப்பு அலங்காரங்கள் செய்யப்பட்டு வழிபாடுகள் நடைபெறுகின்றன.

அமைவிடம்

திண்டுக்கல்லிலிருந்து மதுரை செல்லும் சாலையில் 17 கிலோமீட்டர் தொலைவிலிருக்கும் சின்னாளபட்டி சென்று அங்கிருந்து ஒரு கிலோமீட்டர் தொலைவிலுள்ள மேட்டுப்பட்டி சென்றால் அஞ்சலிவரத ஆஞ்சநேயர் கோயிலைச் சென்றடையலாம்.

(தினத்தந்தி - ஆன்மிகம் இதழில் வெளியான கட்டுரை)

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/spiritual/worshipplace/hindu/p36.html


ISSN 2454 - 1990
Change Language/மொழி மாற்றம் செய்திட

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...

சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)


மாத பலன்கள்



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License