Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

பாறைக்குள் பசுஞ்சோலை

முகில் தினகரன்


ராமகிருஷ்ணனால் நம்பவே முடியவில்லை. 'நம்ம அப்பாவா இப்படி ஒரே வார்த்தையில் ஓ.கே.சொன்னது?”

சமையலறைக்குள் நுழைந்து அம்மாவிடம் கேட்டான், 'ஏம்மா…அப்பாவுக்கு உடம்பு..கிடம்பு சரியில்லையா?” என்று.

'ஏன்டா இப்படிக் கேட்கறே?”

'இல்லை…சினிமாவுக்குப் போக எப்ப பர்மிசன் கேட்டாலும் ஆயிரத்தெட்டு கேள்விகள் கேட்பாரு….ஆயிரத்தெட்டு சந்கேங்களைக் கௌப்புவாரு…கடைசிலே 'வேண்டாம்”ன்னோ…இல்லை..'இன்னிக்கே போகணும்னு என்ன?…அடுத்த வாரம் போனாக் கெடக்கு போடா…அதுக்குள்ளார அந்தப் படம் ஓடிப் போயிடாது!” என்றோ…சொல்பவர் இன்னிக்குக் கேட்டதும் மறு வார்த்தை கூடப் பேசாமல் உடனே 'சரி”ன்னுட்டாரே அதான் கேட்டேன் உடம்பு கிடம்பு சரியில்லையோன்னு?”

'டேய்…அவர்தான் சரின்னுட்டாரில்ல?...அதான் சாக்குன்னு 'டக்”குன்னு கௌம்புவியா…அதை விட்டுடு…இங்க வந்து நின்னு…”

'அம்மா…நீ சொல்றதும் சரிதாம்மா…திடீர்னு மனசு மாறி வேண்டாம்னு சொன்னாலும் சொல்லிடுவார்” சிரித்தபடி சொல்லி விட்டு காத்திருக்கும் நண்பர்களைத் தேடிப் பறந்தான் அவன்.



ராமகிருஷ்ணனின் தந்தை சுதர்ஸன் உத்தியோகத்தில் ஒரு பள்ளி ஆசிரியர்தான்…ஆனால் கெடுபிடியில் ஒரு மிலிட்டரி ஆபீஸர். நேரப் பயன்பாட்டில் ஒரு நேர்த்தி, உடை உடுத்துதலில் ஒரு கண்ணியம், பேச்சு நடையில் ஒரு பக்குவம், பழக்க வழக்கங்களில் ஒரு பண்பாடு, என்று ஒரு விதக் கட்டுக்கோப்போடு தான் வாழ்வது மட்டுமல்லாது, தன் குடும்பத்தாரையும், அவ்வழியிலேயே இட்டுச் செல்ல அவருக்கு உதவுவது அவரது உருட்டலும்….மிரட்டலும்…அதட்டலும்…அதிகாரமும்தான்.

தான் ஒரு கல்லூரி மாணவனாயிருந்த போதும்…ஒரு பள்ளி மாணவனைப் போல் தந்தைக்கு அஞ்சி….அடங்கியே கிடந்த ராமகிருஷ்ணனின் அதிகபட்ச தைரியம் 'சினிமாவிற்கு” என்றே காரணம் சொல்லி தந்தையிடம் அனுமதி கேட்பதுதான்.

ஆரம்பத்தில் அனுமதி மறுத்த சுதர்ஸன், அதுவே அவன் திருட்டுத்தனமாய் படம் பார்க்கச் செல்வதற்கான காரணமாகிவிட, கீழே விழுந்தாலும் மீசையில் மண் ஒட்டவில்லை என்கிற கதையாய், 'அட..சினிமாவுக்குப் போறேன்னு என்கிட்டக் கேட்டா நான் என்ன வேண்டாம்ன்னா சொல்லப் போறேன்?...கேட்டுட்டுப் போக வேண்டியதுதானே?” என்று பிளேட்டைத் திருப்பிப் போட்டார்.

இரவு ஒன்பதரை மணியாகியும் சினிமாவிற்குச் சென்ற ராமகிருஷ்ணன் திரும்பாததால் மனைவியிடம் தன் கோபத்தைக் கொட்டினார் சுதர்ஸன், 'இதுக்குத்தான்…இதுக்குத்தான்..நான் அனுமதி குடுக்கறதேயில்லை…அட..படத்துக்குப் போனோமா…வந்தோமா..ன்னு இல்லாம பசங்களோட சேர்ந்திட்டு எங்காவது ஊர் சுற்றப் போயிருப்பான்!”

பதினோரு மணிவாக்கில் நிதானமாய் வந்து சேர்ந்தவனிடம், வந்ததும் வராததுமாய் கடுப்படித்தார் சுதர்ஸன், 'ஏண்டா…ஒன்பது மணிக்குப் படம் முடிஞ்சிருந்தாலும்…ஒரு ஒன்பதரை…ஒன்பதே முக்காலுக்கு வீட்டுக்கு வந்திருக்கனும்….இப்ப மணி என்ன?...பதினொண்ணு…இந்த ராத்திரி நேரத்துல எங்கடா போய் ஊரச் சுத்திட்டு வர்றே?”



'அது…வந்துப்பா….நம்ம..கார்த்தி…இருக்கானில்ல?...அவன்தான்….'அப்படியே… டிபன் சாப்பிட்டுட்டு போய்டுவோம்டா”ன்னு சொல்லி..ஹோட்டலுக்குக் கூட்டிட்டுப் போயிட்டான்!”

'ஓ…தொரை வெளியிலேயே சாப்பிட்டுட்டும் வந்திட்டாரா?...ஏண்டா…உனக்கு மண்டைல மூளை கீளை இருக்கா?...இல்லையா?...இங்க உனக்குன்னு உங்கம்மா உப்புமா செஞ்சு வெச்சிருக்கா…அதை என்ன பண்றது?...கொண்டு போய்க் கீழே கொட்டறதா?...ஹூம்…ரவை என்ன விலை விக்குதுன்னு தெரியுமா உனக்கு?...க்கும்…அதெல்லாம் உனக்கெங்கே தெரியப் போகுது?”

சினிமாவிற்குப் போய் வந்த சந்தோஷமே வற்றிப் போய் விட, தன் அறையை நோக்கித் திரும்பியவனைப் பார்த்து உச்சஸ்தாயில் கத்தினார் சுதர்ஸன்.

'ஏண்டா…நான் இங்க பேசிட்டிருக்கேன்…நீ பாட்டுக்குப் போறியே….என்ன நினைச்சிட்டிருக்க உம்மனசுல?” என்றவர் அதே வேகத்தில் மனைவி பக்கம் திரும்பி, 'ஏய்…பங்கஜம்….எந்தக் காரணத்தைக் கொண்டும் அந்த உப்புமாவைக் கீழே கொட்டிடாதே…அப்படியே மூடி வை…அதைத்தான் இவன் காலைல சாப்பிடணும்…அப்பவும் மிச்சமிருந்தா…அதையே டிபன்லேயும் போட்டுக் குடு…காலேஜூக்கும் கொண்டு போகட்டும்…”

'அய்யய்ய…வெங்காயம் போட்டிருக்குதுங்க….கெட்டுடும்!...” அவள் மறுக்க,

'பரவாயில்லை குடுத்து விடு” இறுக்கமான முகத்துடன் சொல்லி விட்டு அவர் நகர,



சோகமான முகத்துடன் தன் அறைக்குள் சென்றான் ராமகிருஷ்ணன்.

மறுநாள், காலை ஏழு மணியிருக்கும்,

பாத்ரூம் சென்று விட்டுத் திரும்பிய ராமகிருஷ்ணன் சமையலறைக்குள் பேச்சுக் குரல் கேட்க, எட்டிப் பார்த்தான். அப்பா வழக்கம் போல் பளீரென்ற வெள்ளை வேஷ்டி சட்டையுடன் பள்ளிக்குப் புறப்படத் தயாராகியிருந்தார். அம்மா அவருக்கு டிபன் பரிமாறிக் கொண்டிருந்தாள்.

'பங்கஜம்…அந்த உப்புமாவை என்ன செஞ்செ?” கேட்டார்.

'ம்…நீங்கதானே சொன்னீங்க…'அப்படியே மூடி வை”ன்னு…வைச்சிருக்கேன்!”

'எங்கே….கொண்டு வா பார்ப்போம்!”

தன் மேல் நம்பிக்கை இல்லாமல்….எங்கே தான் அதைக் கீழே கொட்டியிருப்பேனோன்னு சந்தேகப்பட்டுத்தான் அவர் அதைக் கேட்கிறார் என்பதைப் புரிந்து கொண்டவளாய் அவசர அவசரமாய் அந்தப் பாத்திரத்தை எடுத்து வந்து அவர் முன் 'வெடுக்”கென்று வைத்தாள்.

ஆனால் சுதர்ஸனமோ நிதானமாய் அந்தப் பாத்திரத்தைத் திறந்து அந்தப் பழைய உப்புமாவைத் தன் பிளேட்டில் கொட்ட,


'என்னங்க…அவன்தான் அதைச் சாப்பிடணும்னு சொன்னீங்க…இப்ப நீங்க….?”

'பாவம்டி…பழசெல்லாம் சாப்பிட்டு அவனுக்குப் பழக்கமில்லைடி…ஒரு மாதிரி அருவருப்புப் படுவான்”

மனதிற்குள் சிரித்துக் கொண்ட பங்கஜம். 'அப்படியா?...அப்பக் காலேஜுக்கும் அதையே குடுத்தனுப்பச் சொன்னீங்களே…அது?” நக்கலாய்க் கேட்டாள்.

'சேச்சே….வேண்டாம்..வேண்டாம்….மதியமாகும் போது ஒரு மாதிரி நாற்றமெடுக்க ஆரம்பிச்சிடும்…கூட உட்கார்ந்து சாப்பிடற மத்த பசங்க இவனைக் கேவலமாப் பார்ப்பாங்க”

'அப்ப மிச்சமாயிட்டா….கீழே கொட்டிடவா?”

'ம்ஹூம்…என்னோட டிபன்பாக்ஸ்ல போட்டுடு…நானே கொண்டு போய் சாப்பிட்டுடறேன்….அங்க நான் தனியாத்தானே சாப்பிடறேன்…யாருக்குத் தெரியப் போகுது?”

மறைவில் நின்று அதைக் கேட்டுக் கொண்டிருந்த ராமகிருஷ்ணன் நெகிழ்ந்து போனான்.

'அப்பா…உங்களைப் பாறைன்னு நினைச்சேன்…அந்தப் பாறைக்குள்ளும் ஒரு பசுஞ்சோலை இருக்கும்னு இப்பத்தான் புரிஞ்சுக்கிட்டேன்”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p106.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License