Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

முதலாளியோட செலக்சன்

முகில் தினகரன்


அந்த பிரம்மாண்ட ஜவுளிக்கடையின் முதலாளி ராமமூர்த்தி, தன் ஏ.ஸி.அறையில் அமர்ந்து வரப் போகும் தீபாவளி விற்பனைக்கான புதுச் சரக்குகள் குறித்த விலைப் பட்டியலை ஆராய்ந்து கொண்டிருந்த போது அறையின் கதவு லேசாகத் தட்டப்பட, நிமிர்ந்து பார்த்தார். மேனேஜர் பாலு நின்றிருந்தார்.

'ம்….உள்ளார வாங்க பாலு”

உள்ளே வந்த மேனேஜர் 'சார்…நாம குடுத்திருந்த 'ஆட்கள் தேவை” விளம்பரத்தைப் பார்த்திட்டு நிறைய பேர் வந்து காத்திட்டிருக்காங்க சார்…”

'ம்ம்ம்…எத்தனை பேர் வந்திருக்காங்க?'

'இருபத்தி நாலு பேர் சார்”

'நமக்குத் தேவை?”

'பனிரெண்டு பேர் போதும் சார்”

'ஓ.கே…நீங்களே இண்டர்வியூ பண்ணி… பன்னிரெண்டு பேரைச் செலக்ட் பண்ணிடுங்க”

'சரி சார்” சொல்லிவிட்டு மேனேஜர் திரும்பி நடக்க,

'ம்…பாலு…செலக்சன் முடிஞ்சதும்…செலக்சன் ஆகாதவங்களைத் திருப்பி அனுப்பிட வேண்டாம்…அவங்களையும் இருக்கச் சொல்லுங்க…நான் அவங்களையும் பார்க்கணும்”

'அப்படியே செஞ்சிடறேன் சார்”



ஒரு மணி நேரத்திற்குப் பிறகு, மேனேஜர் பாலுவிடமிருந்து இண்டர்வியூ மற்றும் செலக்சன் முடிந்து விட்ட செய்தி இண்டர்காம் வழியே வர, 'வெய்ட் பண்ணச் சொல்லுங்க…பத்தே நிமிஷத்துல வந்திடறேன்”

சரியாகப் பதினோராவது நிமிடம் கான்ஃபரன்ஸ் ஹாலுக்கு வந்த ராமமூர்த்தி, முதலில் தேர்வான பன்னிரெண்டு பேரையும் தனித்தனியே அழைத்துப் பேசினார்.

அடுத்து தேர்வாகாத பன்னிரெண்டு பேரையும் அழைத்துப் பேசினார்.

எல்லாம் முடிந்ததும் மேனேஜர் பாலுவை அழைத்து, 'பாலு….செலக்சன் ஆன பன்னிரெண்டு பேரையும் திருப்பி அனுப்பிச்சிட்டு ….செலக்சன் ஆகாத பன்னிரெண்டு பேருக்கும் உடனே அப்பாயிண்ட்மென்ட் ஆர்டர் குடுத்து புதன் கிழமை வரச் சொல்லிடுங்க”

குழப்பத்திலாழ்ந்த மேனேஜர், 'சார்…நீங்க சொல்றது….”

'புரியலை…அதானே?”

அந்த பாலு மேலும் கீழுமாய்த் தலையாட்டி விட்டு, 'வந்து என்னோட செலக்சன்ல ஏதாவது தவறு….?”

'சேச்சே…அப்படியெல்லாம் எதுவுமில்லை…மொதல்ல நான் சொன்னபடி செஞ்சிட்டு என்னோட ரூமுக்கு வாங்க…நான் விளக்கமாச் சொல்றேன்” சொல்லிவிட்டு தன் அறையை நோக்கிச் சென்றவரை விசித்திரமாகப் பார்த்தபடி நின்றார் மேனேஜர் பாலு.

மாலை நாலு மணி வாக்கில் எல்லா வேலைகளையும் முடித்துவிட்டு, முதலாளியின் அறைக்குச் சென்ற மேனேஜர் பாலு முகம் வாடியிருந்தது. அந்த வாட்டத்திற்கான காரணத்தை யூகித்து விட்ட ராமமூர்த்தி, 'உட்காருங்க பாலு” என்றார்.

தயக்கமாய் அமர்ந்த மேனேஜர் பாலுவிடம், தன் இருக்கைக்குப் பின்னாலிருந்த அந்தப் பெரிய போட்டோவைக் காட்டி, 'இந்தப் போட்டோவுல இருக்கறது யாருன்னு உங்களுக்குத் தெரியுமா பாலு”



ஒரு சிறிய நிதானிப்பிற்குப் பின், 'சார்…உங்க அப்பாவோ…தாத்தாவோ…”

மெலிதாய் முறுவலித்த ராமமூர்த்தி 'ம்ஹூம்….ரெண்டு பேருமே இல்லை…இவர்தான்; என்னோட முதல் முதலாளி”

மேனேஜர் பாலு விழிக்க,

'என்னோட பதினெட்டாவது வயசுல… நானும் ஒரு ஜவுளிக்கடைக்கு சேல்ஸ்மேன் வேலைக்கு இண்டர்வியூக்குப் போயிருந்தேன்…என்னைப் போலவே இன்னொருத்தனும் அந்த இண்டர்வியூக்கு வந்திருந்தான்!…கடை நிர்வாகத்தைப் பார்த்திட்டிருந்த முதலாளியோட மகன்தான் எங்களை இண்டர்வியூ பண்ணினார்…பண்ணிட்டு என்னை 'வேண்டாம்”னுட்டு அந்த இன்னொருத்தனைச் செலக்ட் பண்ணி வெச்சிட்டாரு….' சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தார் ராமமூர்த்தி.

'எனக்கா…அழுகையே வந்து விட்டது…அப்பத்தான் உள்ளார வந்தார் பெரிய முதலாளி…அவரிடம் மகன் விவரங்களைச் சொல்ல, முழுவதையும் கேட்டு முடித்த பெரிய முதலாளி….என்னைப் பக்கத்துல அழைச்சாரு…'நீ நாளையிலிருந்து வேலைக்கு வந்துடு”ன்னாரு…அந்த இன்னொருத்தனை 'வேண்டாம்”னு சொல்லி உடனே திருப்பியனுப்பிச்சிட்டாரு”

மேனேஜர் பாலு நெற்றியைச் சுருக்கிக் கொண்டு பார்த்தார்.

'பாலு…நீங்க இப்ப எப்படி புரியாம முழிக்கறீங்களோ…அதே மாதிரிதான் நானும் முழிச்சேன்…ஒரு நாளு ரெண்டு நாளல்ல…மாசக் கணக்குல முழிச்சேன்…தலையைப் பிச்சுக்கிட்டேன்…காரணம் புரியாமத் தவிச்சேன்…மொதலாளிகிட்டக் கேட்கவும் பயம்…அப்புறம் கொஞ்சம் காலம் கழிச்சு…அவருகூட ஓரளவுக்கு நெருக்கம் ஏற்பட்ட பின்னாடி கேட்டே விட்டேன். அதுக்கு அவரு சொன்னாரு,

'அட முட்டாப்பயலே...இது கூடவா புரியலை உனக்கு?...உன்கூட வந்து இண்டர்வியூல செலக்சன் ஆனானே…அவன் உண்மையிலேயே உன்னை விட திறமைசாலி…புத்திசாலி…அறிவாளி…எந்தப் பொருளையும் எளிதாய் விற்றுவிடும் சாமார்த்தியப் பேச்சுக்காரன்… நிச்சயம் அவனுக்கு இங்கே வேலை கெடைக்காட்டியும் வேற எங்கியாச்சும் கண்டிப்பாக் கெடைச்சிடும்…ஆனா…நீ அப்படி இல்லை…பச்சை மண்ணாட்டம் இருந்தே… எந்தச் சாமார்த்தியமும் உன்கிட்டே இல்லை…நாங்க உன்னைய 'வேண்டாம்”ன்னு திருப்பி அனுப்பியிருந்தா நிச்சயம் உனக்கு வேற எங்கியும் வேலை கெடைக்காது…ஒரு கட்டத்துல நீ விரக்தியின் எல்லைக்கே போயி உனக்கு வேலை குடுக்காத எல்லா முதலாளிகளையும் திட்டிட்டு எதுனாச்சும் பண்ணிட்டிருப்பே…அதான்…உனக்கு….உன் வாழ்க்கைக்கு ஒரு கை குடுக்கலாம்னு உன்னைய வேலைக்கு வெச்சுக்கிட்டேன்….என்ன புரியுதா?”



தன் முதலாளியின் அந்தப் பேச்சிலிருந்து ஓரளவுக்கு யூகித்து விட்ட மேனேஜர் பாலு, மெல்லத் தலையை மேலும் கீழும் ஆட்ட,

'இன்னிக்கு நீங்க செலக்ட் பண்ணின பனிரெண்டு பேரும் நல்ல ஆளுங்க… எங்கியும் அவங்களுக்கு வேலை கெடைக்கும்…. தேர்வாகாத அந்தப் பன்னிரெண்டு பேருக்கும் நாம கை கொடுத்துத் தூக்கி விட்டாத்தான் ஆச்சு… அதனாலதான்… அவங்களை வேலைக்கு வரச் சொன்னேன்….இதுதான்ப்பா என்னோட முதலாளிக்கு நான் காட்டுற நன்றி..” கடைசி வார்த்தைகள் வரும் போது ராமமூர்த்தியின் குரல் தழுதழுத்தது.

ஒரு சிறிய அமைதிக்குப் பின், 'சார்…‘ பெரிய மனுஷங்க எப்பவும் பெருந்தன்மையாத்தான் சிந்திப்பாங்க‘ ங்கறது ரொம்பச் சரியான வார்த்தைங்க” சொல்லிவிட்டு எழுந்த மேனேஜர் பாலுவின் நெஞ்சில் வரும் போதிருந்த கனம் முற்றிலுமாய்க் கரைந்திருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p110.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License