இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

மாமனோட மனசு!

முகில் தினகரன்


எது நடக்கக் கூடாது என்று ஆனந்த் நினைத்திருந்தானோ… அது நடந்தே விட்டது. 'போச்சு… என் வாழ்க்கையே போச்சு… இப்படியெல்லாம் ஏடாகூடமா ஏதாச்சும் நடந்துடும்னுதான்… மூணு வருஷமா இந்தக் கிராமத்துப் பக்கமே வராம இருந்தேன்… இந்த அம்மாதான்…'பாட்டி ரொம்ப சீரியஸா இருக்குடா…உன் பேரைத்தான் ஈனஸ்வரத்துல கூட முனகிக்கிட்டிருக்கு… அநேகமா அந்த உசுரு உன்னைப் பார்க்கறதுக்காகத்தான் காத்திட்டிருக்குன்னு நினைக்கறேன்… அதனால உடனே புறப்பட்டு வந்து… உன் பாட்டியோட முகத்தைக் கடைசியா பார்த்துக்கடா…” என்று போனில் அழாக்குறையாகக் கெஞ்சி, என்னைய வரவழைச்சு… இப்படியொரு இக்கட்டுல மாட்டி விட்டுடுச்சு”

விஷயம் வேறொன்றுமில்லை,

அம்மாவின் கெஞ்சலுக்கு மதிப்புக் குடுத்து சென்னையில் ரயிலேறிய ஆனந்த் மறுநாள் காலை தன் கிராமத்தை அடைந்த போது, பாட்டி கடைசி மூச்சில் காத்துக் கொண்டிருந்தாள். இவனைக் கண்டதும் கை நீட்டி அழைத்தாள். அருகில் வந்தவனின் கையைப் பற்றி, தலை மாட்டில் உட்கார்ந்து கொண்டிருந்த தன் மகன் வயிற்றுப் பேத்தியான அருக்காணியின் கையுடன் இணைத்து விட்டுத் தலை தொங்கிப் போனாள்.

அந்த நொடியில் மொத்தக் கூட்டமும் 'ஹோ” வென்று கத்தி அழுதது.

ஆனந்தின் மனம் அதைக் காட்டிலும் பெரிய குரலில் ஓங்கியழுதது. 'அய்யய்யோ…இந்தப் பட்டிக்காட்டுச் சனியன் பெரிய மாமன் வீரய்யாவின் மூத்த பொண்ணாச்சே… அவனொரு மொரட்டு முட்டாளாச்சே…' என்னைப் பெத்தவளோட கடைசி ஆசையை நிறைவேத்தாமல் விட மாட்டேன்னு மார்தட்டி ஆடுவானே… அவனுக்கு சப்போர்ட்டா ஏகப்பட்ட சொந்தக்காரங்க நிற்பாங்களே... இந்தப் பிரச்சினை பெரிசாகும் போது வெட்டுக் குத்து கூட நடக்க வாய்ப்பிருக்கே…”

சவமாய்க் கிடக்கும் பாட்டியின் முகத்தைக் கடுங் கோபத்தோடு பார்த்தான் ஆனந்த், அந்த முகத்தில் ஒரு சிரிப்பு பாதியில் உறைந்து போய்க் கிடந்தது. 'செய்யறதையும் செஞ்சிட்டு…சிரிச்சுக்கிட்டே செத்துக் கிடக்கறதைப் பாரு”



பார்வையை மெல்ல அந்த அருக்காணியின் பக்கம் திருப்பினான். அது அசிங்கமாய் வெட்கப்பட்டு…அலங்கோலமாய் நெளிந்து… அவலட்சணமாய்ச் சிரித்தது.

'அய்யோ… காப்பாத்துங்க” என்று உள்ளுக்குள் கூக்குரலிட்டபடி, வெளியே ஓடி வந்தான்.

”என்ன செய்யறது….எப்படி இந்தக் கிராமத்தானுக கிட்டயிருந்து தப்பிக்கறது?” தீவிர யோசனையுடன் அங்கிருந்த பெஞ்சில் அமர்ந்தான்.

ஒரு புறம் சவத்தை எடுப்பதற்கும், சடங்குகள் செய்வதற்குமான ஏற்பாடுகள் நடநடது கொண்டேயிருக்க, மறுபுறம் உள்ளூர்க் கிழவிகளும்… உறவுக்காரப் பெண்மணிகளுமாய்ச் சேர்ந்து ஒப்பாரியில் உச்சம் தொட்டுக் கொண்டிருந்தனர்.



'அள்ளிக் கொடுத்திடவா … ஆத்தா ஆலாய்ப் பறந்து வந்தேன்…
வாரிக் கொடுத்திடவா… ஆத்தா வண்டாய்ப் பறந்து வந்தேன்…
கத்தரிக்காய் விற்ற இடத்தில்… ஆத்தா கடலூரான் சொன்னானே…
வெண்டைக்காய் விற்ற இடத்தில்… ஆத்தா வேலூரான் சொன்னானே…
பூசணிக்காய் விற்ற இடத்தில்… ஆத்தா புத்தூரான் சொன்னானே…
அருவிப்புலத்தில்… ஆத்தா ஆளோசை கேட்டு வந்தேன்…
குருவிப்புலத்தில்… ஆத்தா குரலோசை கேட்டு வந்தேன்…”

அந்த ஒப்பாரி கோரஸில் அம்மாவின் குரலும் கேட்க. பற்களை ‘நற…நற‘ வென்று கடித்தான் ஆனந்த். 'ஹும்…எல்லாம் இந்த அம்மாவால் வந்தது”

சுற்றும் முற்றும் பார்த்தான். எல்லோரும் அவரவர் வேலையில் மும்முரமாய் ஈடுபட்டிருந்தனர். 'யாரும் கவனிக்காத நேரம் பார்த்து நைஸா ஓடிடுவோமா?” யோசித்தான்.

அப்போது,

சற்றுத் தொலைவில் நின்று யாருடனோ பேசிக் கொண்டிருந்த பெரிய மாமன் வீரய்யா ஆனந்தைப் பாரத்துப் புன்னகைக்க,

'அடக் கடவுளே… இந்த ஆளு இங்க நின்னுட்டிருக்கானே… எப்படி ஓடுறது?”



அந்த வீரய்யா தன்னுடன் பேசிக் கொண்டிருந்தவனிடம் ஆனந்தைக் காட்டி எதுவோ சொல்ல, அந்த மனிதனும் இவனைப் பார்த்துப் புன்னகைத்தான்.

'என்ன சொல்லியிருப்பான்?... 'அதுதான் என் மாப்பிள்ளை… என்னைப் பெத்தவ போற போக்குல சொல்லிட்டுப் போயிருக்கா!”ன்னு பெருமையாச் சொல்லியிருப்பான்… எல்லாம் விதி… சென்னைல ஒரு பெரிய ஐ.டி. கம்பெனில சீனியர் சாப்ட்வேர் என்ஜினீயரா வொர்க் பண்ற எனக்கு அந்தப் பட்டிக்காட்டு அருக்காணி மனைவியா?... ஓ… காட்… ப்ளீஸ்… ஸேவ் மீ”

அந்த வீரய்யாவின் மனைவி… ராமாயணத் தாடகையின் ஜெராக்ஸ் காபி போலிருந்தவள் ஆனந்தின் அருகில் வந்து, ' தம்பீ…காப்பித் தண்ணி கீது குடிக்கறியா சாமீ?” என்று தணிவான குரலில் கேட்க,

இட, வலமாய்த் தலையாட்டினான்.

'அப்ப…சருவத்து?'

'என்ன?” நெற்றியைச் சுருக்கிக் கொண்டு கேட்டான் ஆனந்த்.

'சர்பத்து…சர்பத்;'

'ப்ச்…எதுவம் வேணாம்” என்றான் இறுகிய முகத்துடன்.

'சரி... சாமி” அவள் நகர, மௌனமாய்த் தலையிலடித்துக் கொண்டான் ஆனந்த். 'இவள் என் மாமியாரா?...கொடுமை…கொடுமை”

மாலை ஆறு மணி வாக்கில் பாட்டியின் சவ அடக்கம் முடிந்த பின் ஓரளவிற்கு கூட்டம் குறைந்திருந்தது. 'அம்மாவைப் பார்த்து ஒரு டாட்டா சொல்லிவிட்டு அப்படியே எஸ்கேப் ஆகி விட வேண்டியதுதான்” என்று காத்திருந்த ஆனந்தின் எண்ணத்தைக் குலைப்பது போல் அவனருகில் வந்து நின்ற அந்த வீரய்யா, 'தம்பி…கொஞ்சம் அப்படி வர்றியா… உன் கூடப் பேசணும்” என்றார்.

வெளிறிப் போன முகத்துடன் அவரைத் தொடர்ந்த ஆனந்தின் நினைவில் அவனது சாப்ட்வேர் கம்பெனியும் … அதில் பணிபுரியும் சுரிதார் சுந்தரிகளும் வந்து போக… அழுகை பொங்கியது.

'அவ்வளவுதான் இனி எந்தக் கடவுளாலும் என்னைக் காப்பாத்த முடியாது…” மொத்தமாய் நம்பிக்கை இழந்து போயிருந்தான்.

ஒரு ஓட்டு வீட்டின் முன்னால் நின்று, அங்கிருந்த திண்ணையைத் தன் தோள் துண்டினால் தட்டி விட்டு, 'உட்காருங்க தம்பி” என்றார் அந்த வீரய்யா.

உட்கார்ந்தான்.

நிதானமாய் அவனருகில் அமர்ந்தவர், 'தம்பீ…என்னைப் பெத்தவ தன்னோட ஜீவன் பிரியற அந்த கடைசி நேரத்துல செஞ்சிட்டுப் போன அந்தக் காரியத்தை நினைச்சா… எனக்கு மனசுக்கு ரொம்ப ரொம்பச் சந்தோஷமா இருக்கு தம்பீ”

'இருக்காதா பின்னே?... அருக்காணிக்கு அடிச்ச யோகம் ஐ.டி. ஃபீல்டாச்சே?” உள்ளுக்குள் நினைத்துக் கொண்டான்.

'ஆனா… எங்காத்தா… அந்தக் காலத்து மனுசி தம்பி... அவளுக்கு நடப்புக்கால நடைமுறைகள் அவ்வளவாத் தெரியாது… பழைய பஞ்சாங்கம்!.. அதனாலதான் பழைய கால நினைப்புலேயே… மகள் வயித்துப் பேரனோட கையையும்… மகன் வயித்துப் பேத்தியோட கையையும்… சேர்த்து வெச்சிட்டுச் செத்துப் போயிட்டா….! ஆனா… நாம அதுக்கெல்லாம் பெரிய முக்கியத்துவம் குடுக்க வேண்டிய அவசியமில்லை தம்பி… ஏன்னா…நீங்க பெரிய பெரிய படிப்பெல்லாம் படிச்சிட்டு டவுன்ல… அதென்ன?... கம்பியோட்டறதா?...”

'கம்ப்யூட்டர்…ங்க!”

”ஆமா… ஆமா… அதேதான்!… அதுல வேலை பார்க்கறீங்க… ஆனா எம்பொண்ணு அருக்காணி இங்க… அழுக்குத் தாவணியோடவும்… ஆட்டாம் புழுக்கையோடவும்… கிடக்குற மவராசி… உங்க ரெண்டு பேரையும்… நெனப்புல கூடச் சேர்த்துப் பார்க்க முடியாது…சேர்த்துப் பார்க்கவும் கூடாது…”

ஆனந்தைச் சுற்றி பட்டாம் பூச்சிகள் மெலடி பாடி வட்டமிட்டன.

'அதனால… அந்த நிகழ்ச்சியை நீங்க மறந்திடுங்க தம்பி… நாங்களும் மறந்திடறோம்… மத்த உறவுக்காரங்களுக்கும் நானே நைச்சியமாச் சொல்லிடறேன்… என்ன நான் சொல்றது சரிதானே தம்பி?”

தன் அரிவாளோடுதான் இப்பிரச்சினையை கையாளுவார் பெரிய மாமா என்று எதிர்பார்த்திருந்த ஆனந்த். தன் அறிவாற்றலோடு அவர் கையாண்ட விதத்தில் மயங்கி அவர்காலைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தான்.

இதுவரை ஒரு கிராமத்தானாகவும்… காட்டானாகவும்… மொரட்டு முட்டாளாகவும் தெரிந்த அந்தப் பெரிய மாமன் வீரய்யா ஆனந்தின் கண்களுக்கு இப்போது ஒரு ஞானியாக… மகானாக…!

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p120.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License