Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

ஞானோதயம்

முகில் தினகரன்


'கலி முத்திப் போச்சுங்க!… ச்சே;… இப்படியெல்லாமா ஒரு அக்கிரமம் நடக்கும்?… படிச்சவங்களே இப்படி இருக்காங்களே!” மருத்துவமனையின் முன்னிருக்கையில் அமர்ந்திருந்த அந்த உடல் தடித்த மனிதர் தன் கருத்தை உடனிருப்பவரிடம் சொல்ல,

'என்னத்தைப் பண்றது… இப்பத்தான் ஜனங்க புத்தியே சின்னப் புத்தியாவல்ல போச்சு…”

அவர்களது பேச்சை அலட்சியம் செய்தபடி நடந்து தீவிர சிகிச்சைப் பிரிவிற்குள் நுழைந்தார் டாக்டர் பரமசிவம்.

வேகமாக வந்த நர்ஸிடம் 'என்னம்மா… என்ன கேசு!”

'கார் கதவு லாக் ஆகி... உள்ளார சிக்கி … மூச்சுத் திணறி…”

'பேஷண்ட் ஆணா?…பெண்ணா?”

'பெண் டாக்டர்”

'ஓ.கே!… ஓ.கே!”

அவசரமாய்க் கட்டளைகளைப் பிறப்பித்து அவசரமாய்ச் சிகிச்சைகளை ஆரம்பித்தார்.

இருபது நிமிடத் தீவிர சிகிச்சைக்குப் பிறகு அப்பெண் இலேசாய் விழிகளைத் திறந்தாள்.



'அப்பாடா…” தீவிர சிகிச்சைப் பிரிவின் கதவைத் திறந்து கொண்டு வெளியே வந்த டாக்டர் பரமசிவம் அங்கே வாய் விட்டுக் கதறிக் கொண்டிருந்த அந்த நபரை வினோதமாய்ப் பார்த்தார்.

நர்ஸ் அருகில் வந்து 'டாக்டர் … அந்த ஆளுதான் அந்தப் பொண்ணோட புருஷன்”என்றாள்.

டாக்டருக்கு அதிர்ச்சியாயிருந்தது. 'என்னது….இவனா?… இந்தாளா அந்தப் பெண்ணோட புருஷன்?… நம்பவே முடியலையே… அந்தப் பெண் நல்ல கலரா…பார்க்கப் படு டீசண்டா இருக்காங்க… இவன் 'கரு…கரு”ன்னு…குண்டா… பாத்தா அந்தப் பெண்ணோட டிரைவர் மாதிரியல்ல இருக்கான்” என மனதிற்குள் நினைத்தபடியே மெல்ல அந்த நபரின் அருகில் சென்று 'டோண்ட் வொரி… உங்க வொய்ப் கண் திறந்துட்டாங்க…” என்றார்.

'டாக்டர் … நான் பாவி டாக்டர் … கட்டின பொண்டாட்டியக் கொல்லப் பார்த்த பாவி டாக்டர்…” கத்தலாய்ச் சொன்னான்.

டாக்டர் ஏதும் புரியாமல் நர்ஸைப் பார்க்க,

அவள் 'வாங்க டாக்டர் … உங்க அறைக்குப் போய்ப் பேசுவோம்” என்று சொல்லி அவரை அங்கிருந்து நகர்த்திச் சென்றாள்.

அறைக்குச் சென்றதும் 'என்ன சிஸ்டர் … அந்த ஆளு என்னென்னமோ சொல்றான்… இது போலீஸ் கேஸ் போலல்ல இருக்கு…”

'டாக்டர் … உண்மையில் நடந்தது என்னன்னா… இந்த ஆளுக்கு தன்னை விட தன் மனைவி ரொம்ப அழகா இருக்கறது ஒரு பெரிய பிரச்சினை… எப்பப் பாரு சந்தேகம்… எங்கே அவளை வேற எவனாவது கொத்திட்டுப் போயிடுவானோன்னு ஒரு பயம்… அதனால வெளிய எங்க கூட்டிட்டுப் போனாலும்… அவளைக் காருக்குள்ளாரவே உட்கார வெச்சிட்டு… கதவை லாக் பண்ணிட்டு...இவன் மட்டும் இறங்கிப் போயிட்டு வருவானாம்… அப்படித்தான் இன்னிக்கும் கடை வீதில பொண்டாட்டிய காருக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப் போயிருக்கான்… திரும்பி வந்து திறந்தப்ப...லாக் பெயிலியராகி… திறக்க முடியாமல் போயிட்டுது…”

டாக்டரின் முகம் கொஞ்சம் கொஞ்சமாய் வெளுத்துப் பேயறைந்தது போல் ஆக….



'என்ன டாக்டர் … என்னாச்சு உங்களுக்கு… ஏன் உங்க முகம் திடீர்ன்னு என்னவோ போலிருக்கு…” தன் பேச்சை நிறுத்தி விட்டு நர்ஸ் கேட்க,

'ம்...ம்...ம்… அது… வந்து … ம்ம்ம்… ஒண்ணுமில்லை… நீங்க சொல்லுங்க சிஸ்டர்”

'ம்… அப்புறமென்ன?…கார்க் கதவைத் திறக்க மணிக் கணக்குல போராடி… ரெண்டு மணி நேரத்திற்குப் பிறகு ஒரு வழியாகத் திறந்த போது… உள்ளார அந்தப் பொண்ணு மூச்சுத் திணறி… மயக்கமாக் கெடந்திருக்கு… இங்க தூக்கிட்டு வந்திட்டாங்க…”

சில நிமிடங்கள் சிலையாய் அமர்ந்திருந்த டாக்டர் பரமசிவம் சட்டென்று எழுந்து தன் மொபைலில் எண்களை அழுத்தினார்.

எதிர் முனையில் போன் எடுக்கப் படாததால் பதட்டமானவர்,

'சிஸ்டர் … அவசரமா ஒரு சினன வேலை!… வீட்டு வரைக்கும் போயிட்டு வந்திடறேன்…”



அடுத்த பத்தாவது நிமிடம் வீட்டையடைந்து பூட்டியிருந்த வீட்டுக் கதவை அவசரமாய்த் திறந்து வேக வேகமாய் உள்ளே ஓடிய டாக்டர் பரமசிவம் எதிரில் வந்த தன் மனைவி சிவகாமியை அதே வேகத்தில் ஆரத் தழுவிக் கொண்டு தழுதழுத்தார்.

'ஏங்க...என்னாச்சு உங்களுக்கு…? உடம்புக்கெல்லாம் நல்லாத்தானே இருக்கு?” பயந்து போய்க் கேட்டாள் அவள்.

'என்னை மன்னிச்சிடு சிவகாமி… எனக்கு இன்னிக்குத்தான் புத்தி வந்திருக்கு… இனிமே… இனிமே…”

'இனிமே?”

'இனிமே சத்தியமா உன்னை ஏ.சி.ரூமுக்குள்ளார வெச்சுப் பூட்டிட்டுப போக மாட்டேன் சிவகாமி… என் மனசுல இருந்த சந்தேகப் பேய் செத்திடுச்சு சிவகாமி…” குரல் கமறியது.

தன் கணவரின் திடீர் ஞானோதயத்திற்கான காரணம் புரியாத சிவகாமி ஒருவித பிரமிப்புடன் அந்தத் தழுவலை இறுக்கிக் கொண்டாள்.

சந்தேகம் என்னும் மாயை மறைந்து சந்தோஷம் என்னும் மன்மதக் கலை அங்கு மெல்ல மெல்ல வியாபிக்கத் துவங்கியது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p123.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License