Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கபாலி கடன் வராமலிருக்கு!

முகில் தினகரன்


சர்வீசுக்கு வந்திருந்த யமஹாவை வேலை முடித்து சோதனை ஓட்டம் ஓட்டிப் பார்த்து விட்டு உதட்டைப் பிதுக்கினான் தண்டபாணி.

“என்ன முதலாளி யோசிக்கறீங்க?…ஏதாவது வேலை பாக்கியிருக்கா இதுல?” தயக்கமாய்க் கேட்டான் கடைப்பையன்.

“ம்ம்ம்...ஏதோ வித்தியாசமாத் தெரியுதே?”.. “சொர..சொர” தாடியைத் தேய்த்தபடியே யோசித்தவன் “அது சரி... ஆயில் மாத்தினியா,” கேட்டான்.

“இல்லையே முதலாளி”

“அதான்… போடா... போயி ஆயில் மாத்துற வேலையப் பாருடா” சொல்லிவிட்டுத் திரும்பிய தண்டபாணி கடைக்குள் நுழையும் சுந்தரம் சித்தப்பாவைப் பார்த்து “வாங்க சித்தப்பா... என்ன திடீர்ன்னு இந்தப் பக்கம்?” சிரித்த முகமாய்க் கேட்டான்.

“இந்தப் பக்கமா ஒரு வேலையா வந்தேன்... வர்ற வழில டீக்கடைக்குப் போயி உங்கப்பாவைப் பார்த்தேன்… அப்படியே உன்னையும் ஒரு பார்வை பார்த்துட்டுப் போலாம்னு வந்தேன்… சௌக்கியம்தானே?”

“சௌக்கியத்துக்கு என்ன சித்தப்பா கொறைச்சல்..?” சொல்லியவாறே ஒரு நாற்காலியை எடுத்துப் போட்டு அவரை உட்காரச் சொன்னவன் பையனை டீக்கு அனுப்பி விட்டு. சித்தப்பாவின் எதிரே அமர்ந்து “சொல்லுங்க சித்தப்பா வேறென்ன விசேஷம்?” சம்பிரதாயமாய்ப் பேச்சைத் துவங்கினான். அவனுக்குத் தெரியும் சித்தப்பா காரியமில்லாமல் வரமாட்டாரென்று.

“தண்டபாணி..நான் ஒண்ணு கேக்கறேன் தப்பா நெனைக்கக் கூடாது” பீடிகையுடன் சொன்னார்.

“எது வேணா கேளுங்க சித்தப்பா” ‘கல..கல’வென்று சிரித்தான் தண்டபாணி.

“ஏம்பா... நீதான் நல்லா சம்பாரிக்கறியே... அப்புறம் எதுக்கப்பா உங்கப்பன் அந்த டீக்கடைய விடாம நடத்திட்டிருக்கான். இழுத்து மூடிட்டு அக்கடான்னு போயி வயசான காலத்துல ஓய்வு எடுக்கப்படாதா?”



மெலிதாய் முறுவலித்த தண்டபாணி, “அதையேதான் சித்தப்பா நானும் சொன்னேன்... “காச்..மூச்”சுன்னு கத்தறார்… “கடைசி வரைக்கும் உழைச்சுத்தான் சாப்பிடுவேன்... சொந்தக்கால்லதான் நிப்பேன்.” அது... இதுன்னு கட்டபொம்மனாட்டம் வீரவசனம் பேசறாரு... நானும் பாத்தேன்.. சரி அவருக்கு எது சந்தோஷமோ அப்படியே இருக்கட்டும்னு விட்டுட்டேன்”

“அதுக்காக இப்படியா காசு நஷ்டப்படறது?”

“காசு நஷ்டமா?... என்ன சொல்றீங்க சித்தப்பா?”

“பின்னே… கடன் குடுக்கறதும் வாங்குறதும் வியாபாரத்துல இருக்கறதுதான்… அதுக்காக இப்படியா?”

“புரியற மாதிரிதான் சொல்லுங்களேன் சித்தப்பா”

“கணக்குப் புத்தகம் ஒண்ணு வெச்சிருந்தாரு உங்கப்பா! ... சும்மா அப்படியே பொரட்டிப் பார்த்தேன்... மொத்தப் பயலுகளுமே கடனுக்குத்தான் சாப்பிடுவானுக போலிருக்கு... ஏகப்பட்ட கடன் கணக்கு... ஆனா பரவாயில்லை... எல்லாம் சின்னச் சின்ன தொகைகள்தான்... அதுவும் ரெண்டொரு மாசத்துக்குள்ளார வசூலாகியிருக்கு”

“அப்புறமென்ன…அதான் வசூலாயிடுச்சல்ல?”

“அதாரு அது?… பேரு கூட என்னமோ… போட்டிருந்தாரே…ம்ம்ம்…”யோசித்தார்... பிறகு சட்டென்று.. “ஆங்…கபாலி... கபாலி” அவன் கணக்குல கிட்டத்தட்ட ஐயாயிரம ருபாய் வராமலே கெடக்கு... அதுவும் ஒன்றரை வருஷமா…”



“அப்படியா... ஏன் வசூல் பண்ணாம விட்டுட்டாரு? ஒரு வேளை அவன் கடைப்பக்கமே வர்றதில்லையோ என்னமோ?”

“இல்லைப்பா… இப்பவும் வந்து சாப்பிட்டுக்கிட்டுத்தான் இருக்கான்... இவரும் கணக்கு எழுதி வெச்சுக்கிட்டேயிருக்கார்… நானும் கூடக் கேட்டேன்.. “ஏன் அவன்கிட்டக் கேட்கறதேயில்லையா?” ன்னு… கேப்பாராம்… அவனும் “தந்துட்டாப் போச்சு” ன்னு சொல்லுவானாம் ஆனா தரவே மாட்டானாம்… எனக்கென்னமோ அது வரும்னு நம்பிக்கையில்லை…”

“அட…இவருதான் ஆகட்டும் ஒரு அதட்டு அதட்ட வேண்டியதுதானே?” சற்றுக் கோபமாகவே சொன்னான் தண்டபாணி.

“ம்ம்ம்… அதையும சொன்னேனே… அதுக்கு உங்கப்பன் ஒரு வியாக்கியானம் சொல்றாரு…. “வசூல் பண்றது ஒரு கலையாம்… அதை பக்குவமாக் கையாளனுமாம் அதாவது நைசாப் பேச வேண்டிய எடத்துல நைசாப் பேசி…. பரிதாபமா நடிக்க வேண்டிய எடத்துல பரிதாபமா நடிச்சு… தோழமை கொண்டாட வேண்டிய எடத்துல தோழமை கொண்டாடித்தான் பணத்தை எப்பவுமே வசூல் பண்ணணுமாம்… தடாலடியா அதட்டினா தரணும்ணு நெனைக்கறவன் கூடத் தரக்கூடாதுன்னு முடிவு பண்ணிடுவானாம்…”

“இதென்னங்க இது புதுசாயிருக்கு இவரு பேசறது... தொழில் பண்ற எடத்துல இவரு சொல்ற மாதிரி இருந்தா சீக்கிரமே தலைல துண்டைப் போட்டுக்கிட்டு போக வேண்டியதுதான்… இப்பெல்லாம் கடன் வாங்கறவன் எவனுமே திருப்பிக் குடுக்கனும்ங்கற எண்ணத்துல வாங்கறதில்லை…” தண்டபாணிக்குத் தந்தையை நினைக்க பரிதாபமாகயிருந்தது.

“ஏப்பா தண்டபாணி... அந்த கபாலி என்ன பெரிய ரவுடியா?... எதுக்குக் கேக்கறேன்னா… அவனை அதட்டிக் கேட்க பயந்துட்டு உங்கப்பன் இந்த வியாக்கியானமெல்லாம் பேசறானோன்னு எனக்குப் படுது…”

சில நிமிடங்கள் அமைதி காத்த தண்டபாணி, “அப்பா அந்த மாதிரியெல்லாம் பயப்படற ஆளில்லையே சித்தப்பா”

“அப்படின்னா... அந்தக் கபாலி... உங்கப்பன்கிட்ட நல்லா இளக்காரம் கண்டுக்கிட்டான்னு நெனைக்கறேன்… வருஷக் கணக்காகியும் மனுஷன் காசு கேக்கறதில்லை… ஆனா கடன் மட்டும் தொடர்ந்து குடுத்துக்கிட்டே இருந்தா எவன்தான் காசு குடுப்பான்?... அந்தக் காசு வராதுப்பா... பாவம் உங்கப்பன்”



கண்களை மூடிக்கொண்டு மேவாயைத் தடவி யோசித்த தண்டபாணி, “சரி சித்தப்பா... நானே நேர்ல போயி அந்தக் கபாலிய ரகசியமா ஒரு அதட்டு அதட்டிட்டு வந்துடறேன்... இந்த விஷயத்தை நீங்க அப்பாகிட்ட சொல்லிட வேண்டாம்” என்றான்.

சித்தப்பா கிளம்பியதும் ஆயில் மாற்றப்பட்ட அந்த யமஹாவை எடுத்துக் கொண்டு புறப்பட்டான் தண்டபாணி.

பதினைந்து நாட்களுக்குப் பிறகு, அண்ணனைப் பார்க்க அவரது டீக்கடைக்கு வந்திருந்தார் தண்டபாணியின் சித்தப்பா சுந்தரம்.

“ஏம்ப்பா சுந்தரம் அன்னிக்கு என்னமோ “அதட்டினாத்தான் காசு வசூலாகும்... உங்கள மாதிரியிருந்தா எல்லாப் பயலுகளும் தலைல மொளகா அரைச்சிடுவானுக”ன்னு சொன்னெ… பாத்தியா ஒன்றரை வருஷமா வசூலாகாமக் கெடந்த ஐயாயிரம் ருபாயை அந்தக் கபாலி தானாகவேக் கொண்டாந்து குடுத்துட்டுப் போயிட்டான்... நானென்ன அவனை அதட்டினேனா? இல்ல மெரட்டினேனா? வாயத் தொறந்து ஒரு தடவை கூடக் கேட்டதில்லை தெரியுமா?..”

சுந்தரம் சித்தப்பா மௌனம் சாதிக்க,

“இப்பவாது நான் சொல்றதை ஒத்துக்கறியா?... வியாபாரத்துல வசூல் பண்றது ஒரு கலைப்பா… அது இள வட்டங்களுக்குப் புரியாது… என்னைய மாதிரி வயசானவங்களுக்குத்தான் அது புரியம்”

மனசுக்குள் சிரித்துக் கொண்டார் சுந்தரம் சித்தப்பா. “ஹூம்…தண்டபாணி போனதையும்... கபாலியை மிரட்டியதையும்... அதனால்தான் பணம் வசூலானதையும்… இவரிடம் சொன்னால் பாவம். இவரோட சந்தோஷம் பூராவும் வடிஞ்சு போய்டும்… இருக்கட்டும்… இந்த சந்தோஷம் இப்படியே இருந்துட்டுப் போகட்டும்… அதை நாம ஏன் கெடுக்கணும்?”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p131.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License