இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பத்தொன்பதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

இங்கிலீசில் பேசப் போறேன்!

முகில் தினகரன்


அப்பா அந்தத் தகவலைச் சொன்னதும் 'ஜிவ்”வென்று சந்தோஷம் ரத்த நாளங்களில் பரவ ஆகாயத்தில் சிறகடித்தாள் நந்தினி. ஒரு நாள்… இரண்டு நாள் கனவல்ல… கிட்டத்தட்ட நான்கு வருடங்களாக மனசுக்குள் பொத்தி வைத்திருந்த அந்த ஆசைக்கனவு கூடிய விரைவில் நனவாகப் போகின்றது. நினைப்பே இனித்தது.

'த பாரு நந்தினி… உன்னோட விளையாட்டுத்தனத்தையெல்லாம் மூட்டை கட்டி வெச்சுட்டு… இனிமே பெரிய பொண்ணா… அடக்க ஒடுக்கமா... லட்சணமா… நடந்துக்க… மாப்பிள்ளை ரகு உனக்கு சொந்த அத்தை மகனாயிருந்தாலும் நெறையப் படிச்சவரு… அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியர் உத்தியோகம் பார்க்கிறவரு… ரொம்ப கௌரவமானவரா இருப்பாரு… அதுக்குத் தகுந்த மாதிரி நீயும் இருக்கணும்… ஞாபகத்துல வெச்சுக்க…”



'சரிப்பா…”

'இருபத்தஞ்சாம் தேதி இந்தியா வர்றதா கடிதம் போட்டிருக்காரு… ஒரு மாசம் விடுமுறையாம்… வந்ததும் 'சட்டு..புட்டு'ன்னு கல்யாணத்தை முடிச்சுட்டு அவரு மட்டும் கிளம்பிடுவாராம்… அப்புறம் மூணு மாசம் கழிச்சு … ஏற்பாடுகளையெல்லாம் பண்ணிட்டு உன்னைய அழைச்சுக்குவாராம்… ம்ம்ம்… இன்னிக்குத் தேதி என்ன… பத்து… அய்யோ… இன்னும் பதினஞ்சு நாள்தான் இருக்கு..” ஒருவித பரபரப்பிற்குள்ளானார் வெள்ளிங்கிரி. உள்ளுர் மேல்நிலைப் பள்ளியில் தமிழாசிரியராக இருந்து ஓய்வு பெற்றவர் இளம் வயதிலேயே மனைவியை இழந்தும் தன்னுடைய ஒரே மகள் நந்தினிக்காக வேண்டி மறுமணம் செய்து கொள்ளாமல் தானே அவளுக்குத் தாயாகவும்… தந்தையாகவும் இருந்து வாழ்க்கையை ஓட்டியவர். தன்னிடம் படித்த தன் அக்கா மகன் ரகு இன்று அமெரிக்காவில் கல்லூரிப் பேராசிரியராக இருப்பது அவருக்குப் பெருமையாக இருந்தது. அதைவிட தன் மகன் அமெரிக்காவில் பேராசிரியராக இருந்த போதிலும்… அவனுக்கு நான்… நீ... என்று பெரிய பெரிய சம்மந்தமெல்லாம் போட்டி போட்டுக் கொண்டு வந்த போதிலும் சொந்தம் விட்டுப் போய்விடக் கூடாது என்பதற்காகத் தன் தம்பி மகள் நந்தினியை அவனுக்குக் கட்டி வைப்பதில் உறுதியாக இருக்கும் தன் அக்காளை நினைக்கும் போது மிக மிகப் பெருமையாகவும்… பெருமிதமாகவும் இருந்தது.

அப்பா சென்றதும் தன் அறைக்குள் புகுந்து படுக்கையில் மல்லாந்தவள் மேலே சுழலும் மின்விசிறியைப் பார்த்தபடியே யோசனையில் ஆழ்ந்தாள்.



'அமெரிக்காவுல இருந்து வர்றவரு… அதிலும் ஒரு காலேஜ் புரபஸர் வேற… இங்கிலீஸ் சும்மா வெளுத்துக் கட்டுவாரு… என்னோட இங்கிலீஸோ பட்லர் ரகம்... இதை வெச்சுக்கிட்டு அவருகிட்ட எப்படிப் பேசுவேன்… பேசினா சிரிச்சுடுவாரே... என்னையப் பத்திக் கேவலமா நெனைச்சுடுவாரே… ம்ஹூம்… கூடாது… மொத வேலையா என்னோட இங்கிலீஸை சரி பண்ணணும்… என்ன பண்ணலாம்?….” மூளையைக் கசக்கினாள்.

'ஆங்… கரெக்ட்… உடனே ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸ்ல சேர்ந்துடணும்... அதே மாதிரி… இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புக்ஸ் நெறைய வாங்கிப் படிக்கணும்… அதான் இன்னும் பதினஞ்சு நாள் இருக்குல்ல… அதுக்குள்ளார டெவலப் பண்ண முடியாதா என்ன?..”

மறுநாளே ஆயிரக் கணக்கில் பணத்தைக் கட்டி ஒரு ஸ்போக்கன் இங்கிலீஸ் கிளாஸில் சேர்ந்து விட்டுத் திரும்பியவளை கடுப்புடன் பார்த்தார் வெள்ளிங்கிரி. 'ஏம்மா… நீ என்ன ஒரு வெளிநாட்டுக்காரனையா திருமணம் பண்ணிக்கப் போறே… நம்ம ரகுவைத்தானே கட்டிக்கப் போறே?… அவனுக்குத் தமிழ் தெரியாதா என்ன?”

'அப்பா… நீங்க கொஞ்சம் சும்மாயிருங்கப்பா… தமிழ்… தமிழ் …ன்னு எப்பப் பார்த்தாலும் தமிழையேக் கட்டி அழுதுட்டு… ச்சை!… வரப் போறது… ஓட்டை டவுசரோட… மூக்கொழுக்கிட்டுத் திரிஞ்ச உங்க பழைய மாணவன் ரகு அல்ல!… அமெரிக்காவுல… காலேஜ் புரபஸரா இருக்கற… அல்ட்ரா மாடர்ன் ரகு…! தமிழையெல்லாம் சுத்தமா மறந்துட்டு… நுனி நாக்கு ஆங்கிலத்துல சும்மா தஸ்ஸூ... புஸ்ஸூன்னு வெள்ளைக்காரனாட்டம் பொளந்து கட்டப் போற ரகு... ”



'சரி… என்னமோ பண்ணு போம்மா” அதற்கு மேலும் அவளிடம் வாதிட விரும்பாமல் அங்கிருந்து நகர்ந்தவரை உரக்க அழைத்து நிறுத்தினாள்.

'என்னம்மா... அதான் உன் விருப்பத்துக்கு விட்டுட்டேன் அல்ல… அப்பறமென்ன?”

'எனக்கு உடனடியா ஒரு ஆயிரம் ருபாய் வேணும்…”

'எதுக்கு மறுபடியும்?”

'இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புக் வாங்கணும்… ரெண்டு மூணு வால்யூம் இருக்காம்… மொதல்ல ஒரு வால்யூம் வாங்கிக்கறேன்… அப்புறம் ரெண்டு நாள் கழிச்சு அடுத்த வால்யூம் வாங்கிக்கறேன்”

வெள்ளிங்கிரி அவளை விநோதமாகப் பார்க்க,

'அப்பா… இன்னும் பதினாலு நாள்தான் இருக்கு… அதுக்குள்ளார நான் என் இங்கிலீஸை டெவலப் பண்ணியாகணும்”



அவள் செயல்பாடுகளில் துளியும் விருப்பமில்லாத போதிலும் அவள் ஆசையைக் கெடுக்க மனமில்லாத வெள்ளிங்கிரி அமைதியாய்ப் பணத்தை எடுத்து அவள் கைகளில் திணித்தார்.

'ஹைய்யா… அப்பான்னா அப்பாதான்…” செல்லமாய் தந்தையின் கன்னத்தில் முத்தமிட்டு விட்டு ஓடினாள் நந்தினி.

'ஹூம்… இன்னும் குழந்தையாவே இருக்காளே…” முணுமுணுத்தார்.

அடுத்து வந்த நாட்களிலெல்லாம் இருபத்தி நாலு மணி நேரமும் புத்தகமும் கையமாகவே திரிந்தாள் நந்தினி. இரவெல்லாம் நீண்ட நேரம் கண் விழித்துப் படித்தாள். தனக்குத் தானே பேசிப் பேசி பிராக்டீஸ் செய்தாள்.

கல்லூரிப் பரிட்சையின் போது கூட இவ்வளவு சிரமப்பட்டிருக்க மாட்டாளென்று தோன்றியது வெள்ளிங்கிரிக்கு. அவளது நடவடிக்கைகளைக் கண்டிக்கவும் முடியாமல் கண்டு கொள்ளாமல் இருக்கவும் முடியாமல் தர்ம சங்கடத்தில் உழன்றார்.

இருபத்தைந்தாம் தேதி.

காலை நான்கு மணிக்கே எழுந்து பரபரப்பானாள் நந்தினி.

'அம்மா… மாப்பிள்ளை சென்னை வந்திறங்கி… அங்கிருந்து கிளம்பி நம்ம ஊருக்கு வந்து… அவங்க வீட்டுக்குப் போயிட்டு அதுக்கப்புறம்தாம்மா இங்க வருவாரு… கணக்குப் பாத்தா எப்படியும் சாயந்திரமே ஆயிடும்மா… நீ என்னடான்னா காலையிலிருந்தே பறக்கறியே” சொல்லிவிட்டு வாய் விட்டுச் சிரித்தார்.

நாணத்தால் முகம் சிவந்தவள் 'ஹாய்…டாட்…யூ ஆர் வெரி நாட்டி” என்றாள்.

அவளின் அந்த ஆங்கிலத்தனம் எரிச்சலாயிருந்தது தமிழாசிரியர் வெள்ளிங்கிரிக்கு. முகம் சுளித்தார்.

'டாட்… அவரைப் பார்த்ததும் 'ஹாய்…ரகு” ன்னு சொல்லட்டுமா... இல்லை…'ஹாய் டார்லிங்” ன்னு சொல்லட்டுமா?”

'சசீய்… கட்டிக்கப் போறவரை பேர் சொல்லியா கூப்பிடறது?”

'ஹோ... டாட்… திஸ் ஈஸ் அமெரிக்கன் ஸ்டைல்!… அங்கெல்லாம் ஹஸ்பெண்டை பேர் சொல்லித்தான் கூப்பிடுவாங்களாம்…”

தலையிலடித்துக் கொண்டார் வெள்ளிங்கிரி.

மாலை ஆறு மணி வாக்கில் டாக்ஸியில் வந்திறங்கிய ரகு நிதானமாய் வீட்டிற்குள் நுழைந்து 'மாமா… நந்தினி…” என்றழைக்க,

உள் அறையிலிருந்து நந்தினியும், பின்புறத்திலிருந்து வெள்ளிங்கிரியும் ஒரே நேரத்தில் வந்து நின்றனர்.

தன் மாமாவைக் கண்டதும் நேரே சென்று குனிந்து அவர் காலைத் தொட்டு வணங்கி நிமிர்ந்தவன் இரு கைகளையும் கூப்பியபடி 'வணக்கம் மாமா… நல்லா இருக்கீங்களா?” வெகு பவ்யமாகக் கேட்டான்.

அவர் தலையாட்டியதும் நந்தினி பக்கம் திரும்பி 'வணக்கம் நந்தினி... எப்படி இருக்கே?” என்று கேட்க,

'ஹாய் ரகுவா?… ஹாய் டார்லிங்கா?…”என்ற குழப்பத்திலிருந்த நந்தினி திணறிப் போய்…தடுமாறி….

'ஐ யாம் ஃபைன்” என்றாள்.

மெலிதாய் முறுவலித்த ரகு 'ஏன் நந்தினி…உனக்குத் தமிழ் தெரியாதா?” கேட்டான்.

'ம்ம்ம்… அது வந்து… தெரியுமே”

'பிறகேன் ஆங்கிலம்?”

'அது… நீங்க அமெரிக்காவுல ….”

'ஆமாம்… நான் அமெரிக்காவுலதான் இருக்கேன்… அங்க ஆங்கிலம்தான் பேசறேன்… அது தொழில் நிர்பந்தம்… அதுக்காக எல்லா இடத்திலேயும்… எல்லாரோடவும் ஆங்கிலம்தான் பேசணும்னு அவசியமில்லையே… உண்மையைச் சொல்லப் போனா நான் தொழில் நேரத்துல மட்டும்தான் ஆங்கிலத்தை உபயோகிக்கறேன்… மத்த எல்லா நேரங்களிலும்… எல்லா இடங்களிலும்... நம்ம தாய் மொழிதான்…”

'அது… மத்தவங்களுக்குப் புரியணுமே…” நந்தினி தன் மேதாவிலாசத்தைக் காட்டினாள்.



'ஆமாம்… பல அமெரிக்கர்கள் என்னிடம் வாக்குவாதமே பண்ணியிருக்காங்க….'எங்களுக்குத் தெரியாத மொழில பேசினா எங்களுக்கு எப்படிப் புரியும்”ன்னு…அதுக்கு நான் என்ன சொல்வேன் தெரியுமா?” உங்களுக்கு உண்மையிலேயே நான் பேசறது புரியணும்ன்னு ஆசையிருந்தா…தொடர்ந்து என்னோட பேசிப் பழகணும்னு பிரியமிருந்தா… என்னோட நட்பு அவசியம்ன்னு நீங்க நெனைச்சா… உடனே எங்க மொழியக் கத்துக்கங்க… நானே கத்துத் தர்றேன்…” என்பேன்”

வெள்ளிங்கிரி என்ற தமிழாசிரியரின் காதுகளில் ரகுவின் பேச்சு தேனாய்ப் பாய தன் மாணவனை வியந்து நோக்கினார்.

'அய்யா… சொன்னா நம்ப மாட்டீங்க… என்னால அங்க ஐம்பதுக்கும் மேற்பட்ட அமெரிக்கர்கள் தமிழ் கத்துக்கிட்டாங்க… என் கூடத் தமிழ்லதான் பேசறாங்க”

வெள்ளிங்கிரியின் மேனியெங்கும் புல்லரித்தது. 'ஆஹா… நான் தமிழாசிரியனா இருந்து இங்கிருக்கற நம்ம ஆளுங்களுக்குத்தான் தமிழ் கத்துக் கொடுத்தேன்… ஆனா என் மாணவன் வெளிநாடு போயி… அங்கிருக்கறவங்களுக்கே தமிழ் கத்துக் கொடுத்திட்டானே…”

உணர்ச்சி மேலிட ரகுவை நெருங்கி வந்து ஆரத் தழுவிக் கொண்டவர், 'பாத்தியாம்மா… நந்தினி… என்னோட மாணவனை…” என்றார் தழுதழுத்த குரலில்.

அவள் பதில் பேசாது விழிக்க , 'நந்தினி… நம்ப தாய் மொழியை நாமே உதாசீனப் படுத்தினா மத்தவங்க எப்படி மதிப்பாங்க?…யோசிச்சுப் பாரு… நான் பிடிவாதமா தமிழ்ல பேசியதனாலதானே… அந்த அமெரிக்கர்கள் நம்ப தமிழ் மொழியைக் கத்துக்கிட்டாங்க?”

நந்தினியின் மனம் அந்த இங்கிலீஸ் ஸ்பீக்கிங் கோர்ஸ் புத்தகங்களை நெருப்பிலிட்டுக் கொளுத்திக் கொண்டிருந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p156.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                        


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License