Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!

                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam

Content
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கால தாமதம் ஏன்?

முகில் தினகரன்


மாலை மணி 6.30.

போர்ட்டிகோவில் அமர்ந்து பள்ளிப் பாடங்களைப் படித்துக் கொண்டிருந்த கைலாஷ், கேட் திறக்கப் படும் ஓசை கேட்டுத் திரும்பினான். அவன் தாய் தாரணி அலுவலகம் முடிந்து சலிப்புடன் உள்ளே வந்து கொண்டிருந்தாள். அவளின் முக இறுக்கம் உள் மன கோபத்தை ஊருக்கே பறை சாற்றியது. அதைப் புரிந்து கொள்ளும் பக்குவமில்லாத கைலாஷ், “ஏம்மா…இத்தனை நேரம்?” என்று யதார்த்தமாய்க் கேட்க,

“வாயை மூடிக்கிட்டுப் படிடா… என்னமோ நான் வேணுமின்னே லேட்டா வர்ற மாதிரியல்ல கேக்கறான் கேள்வி!”

சட்டென்று அமைதியான கைலாஷ், “இல்லம்மா… வயிறு ரொம்பப் பசிக்குது… அதான்… கேட்டேன்!” தணிவான குரலில் சொன்னான்.

“பசிக்குதுன்னா… அதா… அந்தப் பூந்தொட்டில இருக்கற மண்ணை அள்ளித் தின்னு!”

முகம் வாடிப் போன கைலாஷ், மேற்கொண்டு பேச விருப்பமில்லாமல் புத்தகத்தில் பார்வையைப் பரப்பினான்.

அடுத்த பத்தாவது நிமிடம் தன் மோட்டார் பைக்கில் வந்திறங்கிய அவன் தந்தை சந்திரன், “என்னடா பயலே…! ரொம்ப அமைதியாய் படிச்சிட்டிருக்கே...! என்னாச்சு?” கேட்க,



அவன் வீட்டினுள் கையைக் காட்டினான்.

“ஓ…! அம்மா திட்டிட்டாளா?” என்றவாறே ஷூக்களைக் கழற்றியபடி வீட்டிற்குள் சென்றான்.

உடைகளைக் கூட மாற்றாமல் அப்படியே படுக்கையில் விழுந்து கிடந்த தாரணியிடம்,

“என்ன தாரணி… உடம்பு சரியில்லையா?” கேட்டான்.

“உடம்புக்கென்ன கேடு...? அதெல்லாம் நல்லாத்தான் இருக்கு!”

“அப்புறம் ஏன் இப்படி மூட் அவுட்டாகியிருக்கே...? வழக்கம் போல் மேனேஜர் வசை பாடினானா?”

அவள் மேலும், கீழுமாய்த் தலையாட்டினாள்.

“ப்ச்… விடுடா! ஆபீஸ்ன்னா அப்படி இப்படி இருக்கத்தான் செய்யும்… மேனேஜர்ங்கறவன் தன்னோட பவரை அப்பப்ப ரீசார்ஜ் பண்ணிக்கறதுக்காக கீழ வேலை செய்யறவங்களைத் திட்டத்தான் செய்வாங்க...! லீவ் இட்!”

“இல்லைங்க… என்னோட வேலைல ஏதாவது தப்பிருந்து திட்டினாக்கூட அதை நான் ஏத்துக்குவேன்… அதுல எந்த இடத்திலும் எந்தத் தப்புமே கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு திறமையா வேலை செஞ்சும்… தெனமும் காலைல நேரத்துல லேட்டா ஆபீஸூக்குப் போற ஒரே காரணத்திற்காகத் திட்டு வாங்கறதை நினைச்சாத்தாங்க ரொம்ப வேதனையாயிருக்கு...! ம்ம்ம்… உண்மையைச் சொல்லணும்னா ரொம்பக் கேவலமாயிருக்கு! என்னைத் திட்டித் திட்டி அந்த மேனேஜருக்கே சலிச்சுப் போச்சாம்… இன்னிக்குச் சொல்றார்!”



“ப்பூ… இவ்வளவுதானா உன் பிரச்சினை...? இதுக்கா இத்தனை ஃபீல் பண்றே...? இனிமேல் கரெக்டாப் போயிடு… பிரச்சினை ஸால்வ்டு”

“முடியலைங்க...! நானும் ரொம்ப முயற்சி பண்ணிப் பார்த்துட்டேன்… எப்படியும் அஞ்சு நிமிஷம்… பத்து நிமிஷம் லேட்டாயிடுது!”

“போடா…நீ பார்த்து நினைச்சா நிச்சயம் போக முடியும்!”

“அய்யோ… அதான் முடியலைங்கறேனே!”

“ம்ம்ம்… அப்பத் திட்டு வாங்கு! என்னை ஆளை விடு”

அவளது புலம்பல் தாங்க முடியாமல் அவசர அவசரமாய்ச் சென்று பாத்ரூமினுள் புகுந்து கொண்டான் சந்திரன்.

மறுநாள் காலை, வழக்கம் போல் கண் விழித்த தாரணி டீப்பாய் மீதிருந்த டைம் பீஸைப் பார்த்தாள். மணி 6.15.

துள்ளியெழுந்து சுவர்க்கடிகாரத்தைப் பார்த்தாள். அதுவும் 6.15 என்றது.

“போச்சு… போச்சு… இன்னிக்கும் லேட்தான்!”

சமையலறைக்குள் புகுந்து பரபரப்புடன் இயங்கி, டிபன் தயாரித்து, கணவனுக்கும், கைலாஷூக்கும் டைனிங் டேபிள் மீது எடுத்து வைத்து விட்டு, பாத்ரூமை நோக்கி ஓடினாள்.

பதினைந்தே நிமிடத்தில் வெளியே வந்து அவர்களிருவருக்கும் மதிய உணவை டிபன் பாக்ஸில் அடைத்துத் தந்து விட்டு, தனக்கும் ஒரு டிபன் பாக்ஸில் போட்டுக் கொண்டு, உள் அறைக்குள் சென்றாள்.

அவள் டிரஸ்ஸிங் முடித்து, அறையை விட்டு வெளியே வரும் போது,

“ஓ.கே! ம்மா… நாங்க கௌம்பறோம்!” கைலாஷைத் தன் பைக்கில் ஏற்றிக் கொண்டு கிளம்பினான் சந்திரன்.

தொடர்ந்து தானும் பேருக்கு கொஞ்சம் அள்ளி வாயில் போட்டுக் கொண்டு, மணியைப் பார்த்தாள்.

8.20.



அவசர அவசரமாய்ச் செருப்பை மாட்டிக் கொண்டு, கதவையும் கேட்டையும் பூட்டிச் சாவியை பேக்கில் போட்டுக் கொண்டு பஸ் ஸ்டாப்பை நோக்கி கால்களைச் செலுத்தினாள்.

வழக்கம் போல் பஸ் நிறை மாத கர்ப்பிணியாய் வந்து நிற்க, கூட்டத்தில் முண்டியடித்துக் கொண்டு ஏறி, காலை நேர வியர்வைக் கசகசப்பில் சிறிது நேரம் நொந்து விட்டு, தன் அலுவலக ஸ்டாப்பில் இறங்கினாள்.

மணிக்கட்டு தன்னிச்சையாய் மேலே வர, கண்கள் வாட்சைப் பார்த்தன.

8.55

“போச்சு… இன்னும் அஞ்சு நிமிஷம்தான் இருக்கு…” வேக நடையில் சாலையை “பட்..பட்”டென்று மிதித்தாள்.

அலுவலகக் கட்டிடத்தை அடைந்து, லிப்டைப் பார்த்து, மின் தடையைச் சபித்து விட்டு, மாடிப் படிகளில் தாவித் தாவி ஓடிக் கொண்டே வாட்சைப் பார்த்தாள்.

9.05



“ம்ஹூம்… என்னை நேரத்துக்கு வர வைக்க அந்த ஆண்டவனால் கூட முடியாது!” தளர்ந்து போய், நிதான நடையில், மேனேஜர் டேபிளை நெருங்கினாள்.

வுழக்கம் போல் இல்லாமல் மேனேஜர் புன்னகையுடன் வரவேற்க,

“என்ன… என்னாச்சு இவருக்கு...! அஞ்சு நிமிஷத்துக்கு மேல லேட்டாயிடுச்சு… மனுசன் சிரிக்கறார்!”

“வெரி குட் தாரணி… கீப் இட் அப்!” என்று அவர் சொல்ல, திரும்பி அலுவலகக் கடிகாரத்தைப் பார்த்தாள்.

8.55

“என்னது… ஆபீஸ் கடிகாரம் ஸ்லோவாகிட்டுதா?” யோசனையுடன் சென்று இருக்கையில் அமர்ந்தாள்.

மாலை.

வீடு திரும்பியவளிடம் கைலாஷ் கேட்டான். “மம்மி… நீ இன்னிக்கு லேட் இல்லைதானே?”

“ஆமாம்டா ராஜா…! என்ன அதிசயம்ன்னே தெரியலை… அஞ்சு நிமிஷம் முன்னாடியே போயிட்டேன்!”

“மம்மி… அது… வந்து… நான்தான்… நான்தான்..”

“நீதான்?”

“நான்தான் ராத்திரி உங்களுக்குத் தெரியாம டைம் பீஸிலேயும்… வால் க்ளாக்கிலேயும்… உன்னோட கைக் கடிகாரத்திலேயும்… பதினஞ்சு நிமிஷம் அதிகப்படுத்தி வெச்சிருந்தேன்!”

கூர்ந்து அவன் முகத்தைப் பார்த்த தாரணிக்கு மனசே கனத்துப் போனது. “ச்சே...! அம்மா திட்டு வாங்கறதைத் தாங்கிக்க முடியாத இந்தச் சின்ன மனசு எப்படியொரு ஐடியா பண்ணியிருக்கு… இவனைப் போய் நான், “பூந்தொட்டில இருக்கற மண்ணை அள்ளித் தின்னு”ன்னு திட்டிட்டேனே!”

இழுத்து அவனை இறுக அணைத்துக் கொண்டவள், மனதிற்குள் சொல்லிக் கொண்டாள். “கவலைப்படாத ராஜா… இனிமே அம்மா லேட்டாவே போக மாட்டேண்டா!”

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p173.html


  2020
  2019
  2018
  2017
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License