இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!                     ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினெட்டாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...         முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...
Content
உள்ளடக்கம்



பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கருப்பாயிருக்கிறவர்களுக்கு இடமில்லை...?

முகில் தினகரன்


மாலை அலுவலகத்திலிருந்து திரும்பி அறைக்குள் வந்த நிமிடத்திலிருந்தே கவனித்துக் கொண்டுதான் இருக்கின்றேன். என் அறை நண்பர்களிடம் புதிதாய் ஏற்பட்டிருந்த அந்த மாற்றத்தை... வழக்கமாய் நான் உள்ளே நுழைந்ததுமே 'என்ன டிப்ஸ் திவாகர்… இன்னிக்கு வசூல் எக்கச்சக்கம் போலிருக்கு…” என்று கிண்டலடிப்பவர்கள் இன்று நான் உள்ளே வந்ததுமே முகத்தைத் திருப்பிக் கொண்டனர்.

'சரி… அவர்களுக்குள் ஏதோ பிரச்சனை போலிருக்கு... அதான்..‘உர்‘ரென்று இருக்கிறார்கள்” என நினைத்தபடி நான் என் வேலைகளில் மூழ்கினேன். ஆனால் தொடர்ந்து அவர்கள் அதே போக்கினை நீண்ட நேரம் கடைப்பிடிக்க நானே வலியப் போய் பேசினேன்.

'என்னப்பா… என்னாச்சு உங்களுக்கெல்லாம்...? வழக்கமான கலகலப்பெல்லாம் காணாமப் போயி… இஞ்சி தின்ன ‘அது‘ மாதிரி இருக்கீங்களே” நான் அப்படிக் கேட்டதும் அவர்கள் மூவரும் ஒருவர் முகத்தை ஒருவர் பார்த்துக் கொண்டனர்.

'அட… பேச்சுக்கூட வரமாட்டேங்குது… ஊமை ஆயிட்டீங்களா எல்லாரும்?” சீண்டினேன்.

மூவரில் சற்று சீனியரான கனகசபாபதி பேசினார். 'திவாகர்… எவ்வளவு சீக்கிரம் வேற ரூம் பார்க்க முடியுமோ… அவ்வளவு சீக்கிரம் பார்த்துட்டு…இந்த ரூமைக் காலி பண்ணிடு...! உனக்கும் எங்களுக்கும் ஒத்து வராது!”



அந்த மாதிரியான ஒரு நேரடித் தாக்குதலை சிறிதும் எதிர்பார்த்திராத நான் அதிர்ந்து போனேன். பேசவே நா எழவில்லை.

'கனகு… அப்படியெல்லாம் சொன்னா இவன் 'வேற ரூம் கெடைக்கலை” ன்னு சொல்லிட்டே ரொம்ப நாளைக்கு இங்கே டேரா அடிச்சிடுவான்… அதனால 'வேற ரூம் கெடைச்சாலும் சரி… கெடைக்கா விட்டாலும் சரி… மூணு நாள்தான் டைம்… அதுக்குள்ளார வெளியேறிடணும்!”ன்னு கண்டிப்பா சொல்லிடு” இது ஆல்பர்ட்.

'இப்ப இருந்தே உன்னோட பொருட்களையெல்லாம்… தனியாப் பிரிச்சு பேக் பண்ண ஆரம்பிச்சிடு...! அப்புறம் பேக்கிங்க்கு டைம் வேணும்ணு இருந்திடாதே!” இது தினேஷ்.

அவர்களின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாதவனாய் 'ஏன்...? ஏன்...? இப்படி திடீர்னு என்னைக் கழட்டி விடத் தீர்மானிச்சீங்க...? சொல்லுங்க… என் மேல என்ன தப்பு?”

மீண்டும் கனகசபாபதியே பேசினார் 'த பாரு திவாகர்… நாங்க முணு பேருமே… பட்டதாரிக… நல்ல கௌரவமான உத்தியோகத்துல இருக்கறவங்க...! நான் பேங்க்ல ஒர்க் பண்றேன்… இந்த ஆல்ர்ட்… எக்ஸ்போர்ட் கம்பெனில கம்ப்யூட்டர் ஆபரேட்டரா இருக்கான்… அந்த தினேஷ்… பெரிய ஜூவல்லரில கேஷியர்…! நீ...? வெறும் எட்டாம் கிளாஸ்… அதுவும் ஃபெயில்...! உத்தியோகமோ ஹோட்டல்ல சர்வர்!”

சொல்லிவிட்டு நிறுத்திய கனகசபாபதியின் முகத்தையே கூர்ந்து பார்த்தேன்.

'அது மட்டுமில்லாம… எங்க மூணு பேரோட தோற்றத்தையும் பாரு... அப்படியே உன்னோட லடசணத்தையும் பாரு… நாங்கெல்லாம் நல்லா செவப்பா… பார்க்க டீசண்டா… இருக்கோம்...! நீ...? கன்னங்கரேல்னு பார்க்கவே அசூசையா இருக்கே… அதான் நீ எங்களோட ஒரே ரூம்ல இருக்கறது… எங்களுக்குக் கொஞ்சம் கௌரவக் குறைச்சலாய் இருக்கு!”



நெஞ்சு கனத்துப் போய் பேசினாலே அழுது விடுவோம் என்கிற நிலையில் 'ஓ.கே! ஃபிரண்ட்ஸ்… ரெண்டே நாள்ல நான் காலி பண்ணிடறேன்!” என்று கரகரத்த குரலில் சொல்லியவாறே அறையை விட்டு வெளியேறினேன்.

'ஏன்...? இவர்களின் இந்த அதிரடித் தீர்மானத்திற்கு என்ன காரணம்...?” யோசித்தேன்… யோசித்தேன்… எதுவுமே புலப்படாமல் போக ராத்திரி பதினோரு மணி வரையில் வெளியில் திரிந்து விட்டு, அதன் பிறகே அறைக்கு வந்து படுத்தேன். அப்போதும் கூட அவர்கள் என்னுடன் பேசவுமில்லை, என்னைக் கண்டு கொள்ளவுமில்லை.

இரவில்… கனவில்… அவர்கள் மூவரும் என்னைக் கல்லால் அடித்துத் துரத்துவது போல் வர திடுக்கிட்டு விழித்து மௌனமாய் அழுதேன். 'ச்சே…! எவ்வளவு கேவலமா என்னைப் பார்க்கவே அசூசையா இருக்குன்னு சொல்லிட்டாங்களே!”

மறுநாள் காலை வழக்கத்திற்கும் சற்று முன்னதாகவே கிளம்பி நான் சர்வராகப் பணியாற்றும் ஹோட்டலுக்கு வந்தேன்.

'என்ன திவா மொகமெல்லாம் வாடிக் கெடக்கு… ஒடம்பு கிடம்பு சரியில்லையா?” கல்லாவிலிருந்த முதலாளி கேட்க

இட, வலமாய்த் தலையாட்டினேன். ஆனாலும் வழக்கமான கலகலப்பும்… சுறுசுறுப்பும் என்னிடம் இல்லாதிருப்பதைக் கவனித்து விட்ட அவர், 'திவா…! வாப்பா இங்க…! சொல்லு என்ன பிரச்சினை உனக்கு?” அக்கறையுடன் கேட்டார்.

ஒரு நீண்ட பெருமூச்சிற்குப் பின் சொன்னேன்.

அமைதியாய்க் கேட்டு முடித்தவர், 'கவலைப்படாதே திவா...! நான் மதியம் பேங்க்குக்கு போவேன்… அங்க கனகசபாபதி சாரைப் பார்ப்பேன்… அவர்கிட்ட இதைப் பத்தி விசாரிக்கறேன்…”

மாலை நாலு மணி வாக்கில் பேங்க்கிலிருந்து திரும்பிய என் முதலாளி என்னை அழைத்தார். 'திவா… நீயும் நானும் நினைக்கற மாதிரி உன் அறை நண்பர்கள் மோசமானவர்களோ… கெட்டவர்களோ இல்லைப்பா...! ரொம்ப ரொம்ப நல்லவங்கப்பா!”

வேறு புறம் முகத்தைத் திருப்பி விரக்தியாய்ச் சிரித்த நான் 'அதனாலதான் ‘உன்னையப் பார்க்கவே அருவருப்பாய் இருக்கு… நீ எங்களோட ஒரே ரூம்ல இருக்கறது எங்களுக்கு கவுரவக் குறைச்சல்...!ன்னு நேருக்கு நேர் சொல்லி என்னைத் துரத்தியடிக்கறாங்களா?”



சில விநாடிகள் என் முகத்தையே உற்றுப் பார்த்த என் முதலாளி 'திவா...! போன வாரம் உங்கப்பா ஊரிலிருந்து வந்திருந்தாரா?”

'ஆமாம்… பட்… அதை நான் ரூமுக்கெல்லாம் கூட்டிட்டு வரலை!”

'ஏன் கூட்டிட்டு வரலை?”

'அது… வந்து…” என்று சத்தமாய் ஆரம்பித்தவன் சட்டென்று முதலாளியின் முகத்துக்கு நேரே குனிந்து சன்னமான குரலில் 'சார்… அது படிப்பறிவே சுத்தமா இல்லாத… ஒண்ணா நம்பர் பட்டிக்காட்டு ஆளு சார்…! நாகரீகம்ன்னா என்னன்னு கூடத் தெரியாது… மேல் சட்டை போடாம… கன்னங்கரேல் பாடிய ஊருக்குக் காட்டிக்கிட்டு… சேவிங் பண்ணாத கருத்த மூஞ்சில வெள்ளைத் தாடியோட திரியும்...! அது மட்டுமில்லை வெத்தலைக் காவி மிளிரும் முன் பல்லைக் காட்டிக்கிட்டு… செருப்பில்லாத கால்ல வாத்து நடை போட்டுக்கிட்டு அது வர்றதைப் பார்த்தா எனக்கே குமட்டும் சார்…! அதைக் காட்டி ‘இதுதான் எங்கப்பா!‘ன்னு நாலு பேரு கிட்டச் சொன்னா… அதுக்கப்புறம் அவங்க என்னையே ஒதுக்கிடுவாங்க!”



'அப்படியா?” முதலாளி ஒரு நக்கல் சிரிப்புடன் கேட்க

'ஆமாம் சார்…! அதனால அது என்னைப் பார்க்க வர்றேன்னு சொன்னா ”வர வேண்டாம்…வரக் கூடாது”ன்னு சொல்லிடுவேன்...! சில சமயங்கள்ல என்னைப் பார்க்கணும் போல இருக்குன்னுட்டு என் பேச்சை மீறிக் கௌம்பி வந்துடும்… அந்தச் சமயங்கள்ல எங்காவது வெளிய வெச்சுப் பேசிட்டு அப்படியே திருப்பி ஊருக்கு அனுப்பிச்சிடுவேன்!”

'ஏன் திவா?”

'பின்னே...? அதை அப்பான்னு சொல்லி என்னோட இமேஜைக் கெடுத்துக்கச் சொல்லறீங்களா?”

'நீ உங்கப்பா கிட்ட நடந்துக்கற இந்த முறைதான் உன் நண்பர்களுக்கு உன் மேல கோபத்தை ஏற்படுத்தியிருக்கு...! போன வாரம் வந்திருந்த உங்கப்பாவை, நீ பஸ் ஸ்டாண்டோடவே திருப்பி அனுப்பிச்சிட்டியாமே...? அதை கனகசபாபதி சார் பார்த்திருக்கார்…! உங்கப்பாவை விட்டுட்டு நீ போனதும் அவர் உங்கப்பாகிட்டப் பேசியிருக்கார்…!”

'அப்படியா...? என்கிட்டச் சொல்லவேயில்லையே!”

'கனகசபாபதி சார்கிட்ட உங்கப்பா தன்னோட வேதனைகளைக் கொட்டி அழுதாராம்...! அந்தத் தந்தையோட மனசு எத்தனை வேதனைப் பட்டிருக்கும்...! அதை நீயும் உணரணும்… என்பதற்காகத்தான் அப்படியெல்லாம் உன்கிட்டப் பேசியிருக்காங்க… நடந்திருக்காங்க!”

'அப்படின்னு கனகசபாபதி சாரே சொன்னாரா?” கேட்டேன்.

'சும்மாவல்ல கண் கலங்கி… சொன்னார்”

நான் மனம் லேசாகி நின்றேன்.

'தப்பு, திவா! நீ செய்தது...! உன்னை ஏத்துக்கிட்ட உன் நண்பர்கள் உங்கப்பாவை ஏத்துக்கவா மாட்டாங்க...? அவரை நீ ரூமுக்குக் கூட்டி வந்திருக்கணும்...! நண்பர்க்கு அறிமுகப்படுத்தியிருக்கணும்...!”

என் தவறு அப்போதுதான் எனக்கு உறைக்க ஆரம்பித்தது. 'சார்… நாளைக்கே ஊருக்குப் போய் அப்பாகிட்ட மன்னிப்பு கேட்டுட்டு… அவரைக் கையோட கூட்டிட்டு வந்து அறை நண்பர்களுக்கு அறிமுகப்படுத்தி…” பாருங்கப்பா இந்த தங்க மனசுக்காரங்களை”ன்னு பெருமையோட சொல்லப் போறேன்”

'அதென்ன நாளைக்கு...? இன்னிக்கு நைட்டே பஸ் ஏறலாமே”

என் முதலாளி சொல்ல என் உள்ளம் இந்த உலகத்தை சந்தோஷமாய்… மிகமிக சந்தோஷமாய்ப் பார்த்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p175.html


  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                     


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License