Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 14 கமலம்: 10
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

கறிவேப்பிலை மாமா

நாங்குநேரி வாசஸ்ரீ


எ 2 ப்ளாக் ல குடியிருந்த மாமி காலையில 6 மணிக்கு செத்துப் பொயிட்டாங்களாம். உங்கள பூரணி அம்மா போன் பண்ணச் சொன்னாங்க. சொசைட்டி கிரவுண்டில் கால்பந்து பயிற்சி முடிந்து வீடு திரும்பிய விக்னேஷ் சொன்ன தகவல் மனதைப் பிசைய ஆரம்பித்தது. முன்னூறு வீடுகள் கொண்ட டில்லியின் அந்த விக்டோரியா சொசைட்டியில் மொத்தம் நாங்கள் மூன்று பேர் தான் தமிழர்கள்.

மாமி நன்றாய்த் தானே இருந்தாள். போனவாரம் செவ்வாய்க்கிழமை காய்கறிச் சந்தையில் சந்தித்தது. அதுவே கடைசிச் சந்திப்பாக இருக்கும் என நம்பவே முடியவில்லை. எவ்வளவு குளிரிலும் ஸ்வெட்டர் அணிய மாட்டாள். வெறும் சால்வை தான். அரக்கப்பரக்க செய்த டிபனை விக்னேஷுக்கு எடுத்து வைத்து விட்டுப் பூரணியை அழைத்தேன்.

மாமி வீட்டிற்கு எதிர் வீட்டில் குடியிருக்கும் பூரணி, இப்போது அங்கே அழுது கொண்டிருப்பாளோ... பால்கனியிலிருந்து பார்த்தால் தெரியும் தூரம் தான் அவர்களின் வீடு. அப்படியொன்றும் அங்கே ஆள் நடமாட்டம் தெரியவில்லை. குப்பை கூட்டுபவன் சாவகாசமாக வேலை செய்து கொண்டிருந்தான். சர்தார்ஜி கார் துடைப்பவனைத் திட்டிக் கொண்டிருந்தார்.

உனக்கு தொடைக்க இந்த அழுக்குத் துணி தான் கெடச்சிதா என அவரவர் பால்கனியில் நின்றே செப்புச் சொம்பிலிருந்து தண்ணீரைக் கீழே ஊற்றிச் சூரிய நமஸ்காரம் செய்ய முயன்றதில் இரண்டாம் மாடி பாட்டியின் மீது தெரியாமல் தண்ணீர் ஊற்றியதற்காக மூன்றாம் மாடி தாத்தா மன்னிப்பு கேட்டுக்கொண்டிருந்தார்.

வெள்ளிக்கிழமை என்பதால் ஓரிரு இல்லத்தரசிகள் சிவப்புத் துணி மூடிய தாம்பாளத்தை எடுத்துக் கொண்டு கோவிலை நோக்கிச் சென்று கொண்டிருந்தனர்.

அவர்களின் பின்னால் சீக்கிரம் வா. பூந்தி கெடைக்கும் எனக் கூட்டத்தைத் திரட்டிக் கொண்டு வேலைக்காரி மினியின் மகன் லக்கி ஓடிக் கொண்டிருந்தான்.

ஆச்சர்யம் தான் இந்த பத்து வயது லக்கி பையனுக்கு மாமி எவ்வளவு செய்திருப்பாள்.

அவ செத்ததுல யாருக்குமே வருத்தம் இல்லயா... என்ன உலகம் இது? இப்போ அவனக் கூப்பிட்டுற வேண்டியதுதான்.

ஏ லக்கி எங்க ஓடற. இங்க வா. என்றவுடன், ஆன்டி எ2 தாதி செத்துட்டாங்க. நான் தோட்டக்காரன் பாபாகிட்ட எலுமிச்ச கன்னுக்குச் சொல்லிட்டேன். இப்போ நான் பூந்தி வாங்கப் போறேன். வந்து சொல்றேன். சுத்த ஹிந்தியில் சொல்லிவிட்டு ஓடிவிட்டான்.

ஒன்றும் புரியாமல் பூரணியைக் கூப்பிட்டேன்.


பூரணி எப்டி இப்படி திடீர்னு ஆரம்பித்தவுடன், நிம்மி நான் சொல்றத மொதல்ல கேளு. மாமியோட பாடி ஹாஸ்பிடல்ல தான் இருக்கு. தரதுக்கு நேரம் ஆகும். நீ உன் வீட்டு வேலையெல்லாம் முடிச்சவொடனே போன் பண்ணு அப்ப போலாம். மறக்காம ஒரு செட் டிரஸ் எடுத்து டைனிங் டேபிள் மேல வச்சிரு. வந்தவுடனே குளிச்சிட்டுதான் மத்தப் பொருளத் தொட முடியும். அதுக்காகச் சொல்றேன். சரி நான் இப்போ வச்சிர்ரேன். வைத்தே விட்டாள்.

என்ன ஆச்சு எல்லாருக்கும். இருந்தாலும் செத்தாலும் அவுங்கவுங்களுக்கு தன்னோட வேல தான் முக் கியம். சன்னலடியில் உட்கார்ந்து மாமி வீட்டுத் தோட்டத்தப் பாக்க ஆரம்பிச்சேன்.

பால்கனிக்கு ஒட்டியபடி மாமி போட்டிருக்குற தோட்டத்துல கறிவேப்பிலை, மல்லிகைச் செடி, வெற்றிலை, வாழை வரைக்கும் நன்றாக தெரிஞ்சது. அதுக்குப் பின்னாலயும் மருதாணி, சோத்துக்கத்தாழை வளத்த மாதிரி ஞாபகம். மாமிக்குதான் மாமனார் மாமியார் மேல எவ்வளவு மரியாத. வருசத்துக்கு ஒரு தடவை கருவேப்பில மரத்து மூட்டுல டிரஸ் வாங்கி வச்சி மாமனார் நினைவா தோட்டக்காரனுக்கு குடுப்பாங்க. அதேபோல மல்லிகைச்செடி மாமியாராம். ஒவ்வொரு தடவையும் மல்லிகை பூக்கும் போது அதத் தொடுத்து குடுத்துட்டு, நாத்தனார் வெத்தலையையும், மாமியார் மல்லிகப் பூவையும் வச்சிக் கொடுக்கறேன். நீடூழி வாழணும்னு எனக்கும் பூரணிக்கும் குடுப்பாங்க.

அவுங்க வீட்ல செத்தவங்க எல்லாரோட நினைவாலயும் ஒவ்வொரு செடி வைப்பாங்க போல. அதத்தான் ஒருவேள லக்கி சொல்லிருப்பான். மாமி நினைவா எலுமிச்சைய வளக்கணும்னு மாமா நினைச்சிருக்கலாம். மொதல்ல ஹாஸ்பிடல் போணும். அதுக்கப்புறம் மீதியப் பாத்துக்கலாம்.

கிளம்பி பூரணி வீட்டுக்குப் போனவொடனேதான் தெரிஞ்சது, மாமி வீட்ல யாரும் இல்லன்னு. பூட்டின வீட்டு வாசல்ல மாமி போட்ட நெளிக்கோலம் பளிச்...னு.

ஹாஸ்பிடல்லேந்து மாமிய வீட்டுக்குகொண்டு வர மாட்டாங்களாம். அவங்களோட உறுப்புகள் எல்லாம் தானம் கொடுத்ததால பாடிய பேக் பண்ணி நேராச் சுடுகாட்டுக்குக் கொண்டு போயிடுவாங்க போல. நானே உன்ன கூப்பிடறதா இருந்தேன். வா சீக்கிரம் போலாம் என்றாள் பூரணி.


இருவரும் சைக்கிள் ரிக்சா எடுத்து, ஹாஸ்பிடலை அடைந்தோம். முழுவதும் மூடப்பட்ட சாக்குப் பை போன்ற உறையுனுள் மாமியின் உடல் இருப்பதாகச் சொன்னதால், அவளைக் கற்பனை செய்து கொண்டு இரண்டு சொட்டு கண்ணீர் வடித்து இறுதி மரியாதை செலுத்தினோம். பக்கத்தில் மாமியின் மகளும், கணவரும், இரண்டு நண்பர்களும் தவிர வேறு யாருமில்லை. பாவம். மாமி. முறைப்படி மந்திரங்கள் சொல்லி, கர்மம் பண்ண வேண்டாமா?

பத்தாம் நாள், பதிமூன்றாம் நாளாவது பண்ணுவார்களோ என்னவோ. பழகியதற்காக நாமாவது மாமாவிடம் சொல்ல வேண்டும். தீர்மானித்துக் கொண்டே வீடு வந்து சேர்ந்தோம். நான் வீட்டிற்க்குக் கிளம்புமுன்பே சரியாக ஒருமணி நேரத்தில் மாமாவும், மகளும் வந்துவிடவே கேட்டுவிட வேண்டியதுதான் எனத் தீர்மானித்தோம்.

மகள் போபாலில் இருப்பதாக மாமி சொல்லி கேள்விப்பட்டிருக்கிறோம். ஐம்பது வயது இருக்கும். பார்த்தால் கல்யாணம் ஆன மாதிரி தெரியவில்லை. மெதுவாகப் பேச்சு குடுத்தவுடன் மாமா ஆரம்பித்தார். இவ்வளவு நாளும் நான் யார் கிட்டயும் பேசினதே இல்ல. இப்போ பேச வேண்டிய நேரம். நீங்கல்லாம் என்னைய மாமா னு கூப்பிடறதுல சந்தோஷம். இப்போ நான் மாமிக்கு சடங்கு செய்யணும்னு எதிர்பாப்பீங்க. ஆனா என்ன செய்யணும்னு எனக்குத் தெரியாது. நான் ஒரு அநாதை. சேலம் அநாதை இல்லத்துல தான் படிச்சி வளந்தேன். என்ன பெத்தவங்க யாரு என்ன குலம் னு எனக்குத் தெரியாது. திருச்சி கல்லூரில படிக்கும் போது அநாதையான உங்க மாமியச் சந்திச்சேன். படிச்சி ரெயில்வேல வேலைக்கு சேர்ந்தவுடனே எங்க இல்லத்தோட உதவியோட நாங்க திருமணம் செய்துக்கிட்டோம். எங்களுக்கு இனி குழந்த பிறக்க வாய்ப்பில்லன்னு டாக்டர் சொன்னவுடனே இல்லத்துக்கு தெரிவிச்சு ஒரு குழந்தைய தத்தெடுக்கணும்னு சொன்னோம். அவுங்க கேட்டுக்கிட்டதுக்கிணங்க திருநங்கையான இந்த மகதிய அவளோட இருபது வயசிலேந்து மகளா வளர்த்துக்கிட்டு வரோம். அவ போபால்ல புத்தி ஸ்வாதீனமில்லாது கைவிடப்பட்ட அநாதைகளுக்காக காப்பகம் நடத்தறா. எங்க குடும்பச் சொத்துங்கறது அது ஒண்ணுதான்.


அவ கூடவே நானும் கெளம்பி போபாலுக்கு போயிடலாம் னு நினைச்சா, மாமி வளத்து வச்ச இந்த கற்பனை கறிவேப்பிலை அப்பா, மல்லிகை அம்மா, வெத்திலை தங்கை இவங்கல்லாம் என்னய தடுக்கற மாதிரி தோணுது. தினமும் தண்ணி ஊத்தும்போது சொல்லுவா. எங்க ரெண்டு பேருல யாரு மொதல்ல செத்தாலும் உங்க கூட தோட்டத்துல செடியா நிப்போம். எங்கள திரும்பவும் அநாதையாக்கிடலாம்னு மட்டும் நெனைச்சிடாதீங்க. நான் எலுமிச்ச மரமா நிப்பேன். இவரு உங்க வாரிசு தானே. அதனால கறிவேப்பிலை மரம் தான். அதனால இந்தக் குடும்பத்துல எலுமிச்சயா மாமிய நட்டு வச்சிட்டு தினமும் அவள கவனிச்சி எப்போ நான் கருவேப்பில மரமா நிக்கப்போறேன்னு காத்துக் கிடக்கிறதுதான் என் வேலை. ரெண்டு பேரும் சிரமப்பட்டுக்காதீங்க. சாகர் ரத்னால சாப்பாட்டுக்குச் சொல்லிட்டேன். நாங்க சாப்பிட்டுக்குவோம். நாளைலேந்து சமயல்காரிய ஏற்பாடு பண்ணிடுவேன்.

போயிட்டு வாங்க. ஏதேதோ கேட்க வேண்டும் என நினைத்த இருவரும் வாயடைத்து நின்றோம்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p284.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)



வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை





வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License