Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                1-6-2006 முதல் இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            ISSN  2454-1990
muthukamalam muthukamalam
உங்கள் படைப்புகளை ஒருங்குறி எழுத்துருவில் (Unicode Font)தட்டச்சு செய்து msmuthukamalam@gmail.com எனும் மின்னஞ்சலுக்கு அனுப்பி வைக்கலாம் - ஆசிரியர்.

முத்து: 13 கமலம்: 22
உள்ளடக்கம்

சமையல்

Alexa Rank


பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

இடைவெளி தூரமில்லை...!

நாங்குநேரி வாசஸ்ரீ


வேல எல்லாம் முடிச்சாச்சா. போகும் போது ஞானத்துக்கிட்ட சொல்லிட்டுப் போ. பக்கத்து வீட்டு மாமி பாக்கணும்னு சொல்லிச்சின்னு.

உங்க ரெண்டு பேருக்கும் வேற பொளப்பில்ல போ. வருசக் கணக்குல இதே பாட்டு தான்.

வேலைக்காரி சலித்துக் கொண்டே சென்றாள்.

கோமளி மாமி ஈசிச் சேரில் சாய்ந்தபடியே யோசிக்க ஆரம்பித்தாள். அவளுக்கும் ஞானத்துக்கும் தான் எத்தனை ஒற்றுமை. எண்பது வயதாகி விட்டது. இருபது வயதில் திருமணத்திற்கு பின் குடி வந்த சொந்த வீடு இது. பக்கத்து வீட்டு ஞானம் இரண்டு மாதங்களுக்குப் பின் குடி வந்தாள் போல. இரண்டு கணவர்களும் வேலைக்குச் சென்றவுடன் தினமும் வெட்டி அரட்டைதான். வீடு ஆதம்பாக்கம் பிள்ளையார் கோவில் தெருவில் இருந்ததால் கோவிலுக்குத் தினமும் போக முடிந்தது. பாவம் ஞானத்துக்குத் தான் சர்ச் ரொம்ப தூரம். வரிசையாகக் குழந்தைகள் பிறந்த பிறகு அந்த அளவு நேரம் கிடைக்காவிட்டாலும் இரவு உணவுக்குப் பின் தினமும் ஒரு மணி நேரம் வாசலில் குழந்தைகளின் அட்டகாசம் தான்.

நானும் ஞானமும் எத்தனை முறை துணி காயப் போட்டுவிட்டு மொட்டை மாடியிலேயே மதிய உணவு சாப்பிட்டிருக்கிறோம். அவளுக்கு ரோஜாப் பூ ரொம்பப் பிடிக்கும் என்பதால் வாசலிலேயே தோட்டம் போட்டிருந்தாள். எங்கள் வீட்டில் கனகாம்பரம்.

காய்கறிக்காரி, கீரைக்காரி, பூக்காரி எல்லோரும் அவள் வீட்டுக் கேட்டினுள் தான் கூடையை இறக்கி விப்பார்கள்.

இருவர் வீட்டு வாசலில் உள்ள தோட்டத்தையும் ஒரு சிறிய முள் கம்பி வேலி தான் பிரிக்கும். அதுவும் அவர்கள் வீட்டில் ஜானி (நாய்க்குட்டி) வந்த பிறகு தான். எல்லாம் இந்த சகாயம் பயலின் வேலைதான்.

மாமி மன ஓட்டத்தை வாய் விட்டுப் புலம்ப ஆரம்பித்து விட்டாள்.

அவ மூத்த பொண்ணு மேரி ரொம்ப சமத்து. எப்பப் பாத்தாலும் உஷா கூடவே விளையாடிண்டு இங்கெயே கெடையா கெடக்கும். காயத்ரிக்கு சகாயம் லெட்டர் கொடுத்துட்டான்னு கோச்சிண்டு எழுப்பின காம்பவுண்ட் சுவர் இப்போ வரைக்கும் யமனா நிக்கறது.

நம்ப வீட்டுவாசல்ல நின்னு கூப்பிட்டாக் கூட அவளுக்குக் காதும் கேக்கறதில்ல.

கொழந்தேள் எல்லாம் அவா அவா வேல கல்யாணம்னு கிளம்பி போயாச்சு. கடைசியா ஞானத்தோட ஆத்துக்காரர் ஜோசப் சார் சாவுக்குப் போனது. ஆச்சு இதோட நாலு வருஷம் ஓடிப் போச்சு.

ஞானத்துக்கு ரெண்டும் ஆபரேசன்ல பொறந்த குழந்தைகள். பிரசவத்துக்கப்பறம் அவள் ரொம்பவேக் குண்டாயிட்டா. எனக்கு என்ன குறைச்சல். நன்னா ஓடியாடி வேலை செஞ்சிண்டிருந்தவதான். இப்போ அஞ்சாறு வருசமா தான் முட்டிவலி அதிகம் ஆனதால வாசப்படியத் தாண்டப் பயமா இருக்கு.

நான் மட்டும் தனியா சமச்சுச் சாப்பிடறது கஷ்டமாத்தான் இருக்கு. என்ன பண்ணறது. உஷா கூட வெளிநாட்டுக்குப் போக மனசு ஒப்பல. காயத்ரி கூட பாம்பே போலாம்னா அவா வீடுகள்லாம் சுத்திச்சுத்தி வர மாதிரியே இருக்கு. சமயல் கட்டுலேர்ந்து இந்தப் பக்கம் நாலு எட்டு நடந்தா ஹால். ரெண்டு எட்டுல பெட் ரூம். அத ஒட்டியேக் கழிப்பறை. அதுவேக் குளிக்கிற இடமும் கூட. இந்த வீடு மாதிரி நீளமா இருந்தா தேவல.

எனக்குப் புத்தி போற வர இங்கேயே இருக்கேன். அப்புறமா உங்க வீடுகள்ல கொண்டு வச்சிக்கோங்கோன்னு சொல்லிட்டேன். பிடிவாதம்னு திட்டிட்டு மாசா மாசம் மைலாப்பூரிலேருந்து மச்சுனன் அம்பிய சாமான் கொண்டு போடச் சொல்றா.

காலம்பற எந்திரிச்ச வுடனே பண்றதுதான் வேல. ஏதோ சமச்சு நார்க் கட்டில் பக்கத்துல வச்சிடுவேன். அதுக்கப்புறம் ஈசிச்சேரும் நார்க்கட்டிலும் தான் இருப்பிடம். மாடிப்படி ஏறி மொட்டை மாடிக்குப் போனதெல்லாம் கதையாப் போன ஜென்மத்துலப் பண்ணினாப்புல இருக்கு.

பாவம் ஞானம் என்ன பண்றாளோ. வேலக்காரி சொல்ற தகவல்தான். அவளால சமைக்கவே முடியலயாம். இவளுக்குத்தான் காசு கொடுத்து சமயலுக்கு வச்சிருக்காளாம்.

வாசலில் யாரோ வருவது தெரிந்தவுடன் மெதுவாக எழுந்து பார்த்த கோமளி மாமிக்குச் சந்தோஷம். வந்திருப்பது ஞானத்தின் பெண் மேரியல்லவா.

மேரி ஆரம்பித்தாள். மாமி இப்பல்லாம் நானும் சகாயமும் போனில் பேசும்போது அம்மாவின் புலம்பல் தாங்க முடியவில்லை. ஒரே பிடிவாதம். உடம்பு முடியாமல் தனியாக ஏன் அவஸ்தை பட வேண்டும் எனக் கூப்பிட்டால் வர மறுக்கிறாள்.

மாமிக்குத்தான் என்னப் பத்தி நல்லாத் தெரியும். அவங்கக்கிட்ட கேளு சொல்லுவாங்க என்கிறாள். அவளாலும் இங்கு வர முடியாது. உங்களாலும் எங்க வீட்டுக்குப் போக முடியாது. அதனால் நானும் சகாயமும் தீர்மானித்து விட்டோம். இரண்டு வீட்டு ஹால் நடுவிலுள்ள சுவரில் கதவு போடுவது என்று.


உஷா காய்த்ரிக்கு இதில் சம்மதமானால் உடனே செய்து விடலாம் என்றாள்.

தேன் குடிக்கக் கசக்குமா என்ன. யார்கிட்டயும் கேக்க வேண்டாம். வேலயத் தொடங்கு. கோமளி மாமிக்குப் புத்துணர்ச்சி வந்து விட்டது.

இனிமேக் கதவத் திறந்து வச்சு படுக்கைல படுத்துண்டாவது அவா அவா வீட்லேர்ந்து பேசிண்டிருப்போம். நினைப்பே சந்தோஷத்தைத் தந்தது.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p290.html


ISSN 2454 - 1990
சிறந்த நூலாசிரியர் பரிசு

மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் ஜெ. ஜெயலலிதா அவர்களிடமிருந்து ‘தமிழ் விக்கிப்பீடியா’ எனும் நூலுக்காகத் தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறையின் சிறந்த நூலாசிரியருக்கான பரிசு மற்றும் பாராட்டுச் சான்றிதழினைப் பெறுகிறார் தேனி மு. சுப்பிரமணி (13-04-2012)






வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...



சிரிக்க சிரிக்க
எரிப்பதா? புதைப்பதா?
அறிவை வைக்க மறந்துட்டானே...!
செத்தும் செலவு வைப்பாள் காதலி!
வீரப்பலகாரம் தெரியுமா?
உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
இலையுதிர் காலம் வராது!
கண்ணதாசனின் நகைச்சுவைகள்
குறைச்சுத்தான் எடை போடறாரு...!
அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
இடத்தைக் காலி பண்ணுங்க...!
சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
மாபாவியோர் வாழும் மதுரை
இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
கவிஞரை விடக் கலைஞர்?
பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
கடைசியாகக் கிடைத்த தகவல்!
மூன்றாம் தர ஆட்சி
பெயர்தான் கெட்டுப் போகிறது!
தபால்காரர் வேலை!
எலிக்கு ஊசி போட்டாச்சா?
சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
சம அளவு என்றால்...?
குறள் யாருக்காக...?
எலி திருமணம் செய்து கொண்டால்?
யாருக்கு உங்க ஓட்டு?
வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
கடவுளுக்குப் புரியவில்லை...?
முதலாளி... மூளையிருக்கா...?
குட்டிக்கதைகள்
எல்லாம் நன்மைக்கே...!
மனிதர்களது தகுதி அறிய...
உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
அழுது புலம்பி என்ன பயன்?
புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
கடவுளைக் காண உதவும் கண்ணாடி
தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
சிங்கத்திற்கு வாழைப்பழம்!
வலை வீசிப் பிடித்த வேலை
சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
கல்லெறிந்தவனுக்கு பழமா?
சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
அக்காவை மணந்த ஏழை?
சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
இராமன் சாப்பாட்டு இராமனா?
சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
கழுதையின் புத்திசாலித்தனம்
விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
ஆணவத்தால் வந்த அழிவு!
சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
சொர்க்க வாசல் திறக்குமா...?
வழுக்கைத் தலைக்கு மருந்து
மனைவிக்குப் பயப்படாதவர்
சிங்கக்கறி வேண்டுமா...?
வேட்டைநாயின் வருத்தம்
ஆன்மிகம் - இந்து சமயம்
ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
தானம் செய்வதால் வரும் பலன்கள்
முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
பிரதோஷம் எப்படி விஷேசமானது?
விநாயகர் சில சுவையான தகவல்கள்
சிவராத்திரி விஷேசமானது ஏன்?
முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
எப்படி வந்தது தீபாவளி?
தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
அனுமனுக்கு வடை மாலை ஏன்?
திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
முருகா என்றால் என்ன கிடைக்கும்?
குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
விபூதியின் தத்துவம்
கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
இறைவன் ஆடிய நடனங்கள்
யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                      


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயர் மற்றும் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License