Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
                இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!            E - ISSN  2454-1990
muthukamalam muthukamalam
பல்வேறு தடைகளைத் தாண்டி, பதினேழாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடனும் மனமகிழ்வுடனும் வரவேற்கிறது...

Content
உள்ளடக்கம்

பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)


சிறுகதை

வயசு போன காலத்திலே...

குறும்பலாப்பேரிப் பாண்டியன்


தொலைக் காட்சியில் மூழ்கியிருந்த நான் தற்செயலாய்த் திரும்பிய போது சுவர்க் கடிகாரம் இரவு மணி 10 என்று கட்டியம் கூறியது. "பத்து ஆகிவிட்டதா?' சற்றே பதற்றமுடன் எழுந்த நான் தொலைக்காட்சியை அணைத்தேன். படுக்கை அறைக்குள் நுழைந்தேன். இரவு விளக்கின் வெளிர் நீல வெளிச்சத்தில்,

மனைவி கட்டிலில் அமர்ந்து காத்திருந்தாள்.

அருகில் சென்று நானும் அமர்ந்தேன். "என்ன... மறந்துட்டீங்களா?'' என்றபடியே என்மேல் சாய்ந்தவள் என்னை இறுக அணைத்துக் கொண்டாள். நான் மெல்ல அவளைக் கட்டிலில் சரித்தேன். சேலையை விலக்கினேன். மேலாடையை அவசர அவசரமாகக் களைந்தேன்.

அதே வேகத்தில் கையை எட்டி நீட்டிக் கட்டிலின் அருகே இருந்த முக்காலியிலிருந்து அந்தத் தைல எண்ணெய்ப் புட்டியை எடுத்தேன்.

அதற்குள் மனைவி கவிழ்ந்து படுத்திருந்தாள். தைல புட்டியைத் திறந்து, கொஞ்சம் தைலத்தை மனைவியின் ஆடையற்ற முதுகுப் பகுதியில் ஊற்றினேன். இரு கைகளாலும் எண்ணெயைப் பரப்பி பின்னங் கழுத்து, தோள் பட்டைகள், முதுகு, இடுப்பு நெடுகிலும் சூடு பறக்கத் தேய்த்து விடத் தொடங்கினேன்.

மனைவிக்குக் கழுத்து எலும்புகள் இரண்டில் நல்ல தேய்மானம். அதனால் கடும் முதுகு வலி கைகளில் குடைச்சல். நாள்தோறும் மருந்து எண்ணெயைப் போட்டு நான் தேய்த்து விடுவதால் ஓரளவிற்கு அமைதியாகத் தூங்குகிறாள்.

இல்லாவிடில் வலியின் கொடுமையால் தூக்கமின்றி இரவெல்லாம் அரற்றிக் கொண்டே இருக்க நேரிடும்.

திடீரென முனகலான குரலில் மனைவி கேட்டாள் "என்னங்க, கதவுக்குத் தாழ்ப்பாள் போட்டுட்டீங்களா?"



இந்தத் திடீர்க் கேள்வி என்னைத் திடுக்கிடச் செய்தது. உடனே திரும்பிப் பார்த்தேன். நல்ல வேளையாகக் கதவு தாழ் போட்டுத்தான் இருந்தது. "தாழ்ப்பாள் போட்டுத்தாம்மா இருக்கு" மனைவிக்கு அறிவித்தேன்.

"பாட்டீ"ன்னு கத்திக்கிட்டுத் திடீர்னு உங்க பேத்தி உள்னே ஓடி வந்திடுவா! அதுதான் கேட்டேன்..." என்றாள் மனைவி.

அவள் பேத்தியைப் பற்றிக் குறிப்பிட்டதும் என் மனம் பின்னோக்கிச் சென்றது.

அப்போது இந்தப் படுக்கை அறை அப்பாவிற்கும் அம்மாவிற்கும் உரியதாய் இருந்தது. இப்போது மருமகளும் பேத்தியும் படுக்கும் அறைதான் எங்களுடையதாய் இருந்தது. பெரியவனுக்கு 4 வயது. சின்னவளுக்கு 2 1/2. நானும் மனைவியும் மூன்றாவது குழந்தை வேண்டாமென்று முடிவெடுத்திருந்தோமே தவிர, மூன்றாம் பாலாம் இன்பத்துப் பாலை வேண்டாம் என்று தள்ளும் நிலையில் இல்லை.

குறிப்பாய் மனைவிக்கு என் அரவணைப்பும் ஆசை முத்தங்களும் இன்னும் பிறவும் அதிகமாகவே தேவைப்பட்டன. ஆனால் நள்ளிரவில் விழித்துக் கொள்ளும் பிள்ளைககள் இடைஞ்சலாய் இருந்தார்கள்...

ஒரு நாள் பிள்ளைகளை விளையாட அனுப்பி விட்டு, மனைவி கேட்டாள் "என்னங்க! பிள்ளைகளை இனிமே அத்தை மாமா அறையிலே படுக்க வையுங்களேன்... இந்த வயசான காலத்திலே அவங்களுக்கு எதுக்குத் தனிப் படுக்கை அறை?"

அந்தத் தலையணை மந்திரம் சரியானது என்று எனக்கும் தோன்றவே, அப்பாவிடம் மெதுவாகப் பேச்சை எடுத்தேன். ஆனால் அப்பாவிற்கு இந்தச் செய்தியில் இவ்வளவு சினம் வரும் என்று நான் எதிர்பார்த்திருக்கவில்லை!

அப்பா சீறினார் "என்னடா பேசற நீ!? பகல் முழுக்க உங்கக் குழந்தைங்களை நாங்கதானடா பாத்துக்கறோம்... இரவு நேரத்திலயாவது நாங்க தனியா, அமைதியா இருக்க வேணாமா? ஏண்டா கணவன் மனைவிக்கிடையிலே காமத்தைத் தவிர வேறு எதுக்குமே தனிமை தேவையில்லைன்னாடா நினைச்சுக்கிட்டு இருக்கே? கணவனும் மனைவியும் தனிமையிலே பகிர்ந்துகிறதுக்கு அன்பு, நட்பு, பழைய நினைவுகள், வலி, இன்பம், துன்பம்னு எவ்வளவோ இருக்குடா! வயசு ஏற ஏறத்தான் ஒருத்தருக்கொருத்தர் அன்பா ஆதரவா இருக்கணும். அதுக்கு அவங்களுக்குத் தனிமை கட்டாயம் வேணும்...



உங்க அம்மாவுக்கும் எனக்கும் திருமணமாகி 30 ஆண்டுகள் ஓடிப்போயாச்சு. ஆனா அதுக்கும் முன்னாடியே அவளை எனக்கு 25 ஆண்டுகளா தெரியும். இதப்பத்தியெல்லாம் நீங்க யாரும் கேட்டதும் இல்லை. நாங்க சொன்னதும் இல்லை. உங்க அம்மா எனக்குத் தூரத்து உறவு. அத்தை மகள் முறை. வயலில் வேலை செஞ்சிகிட்டு இருந்த அவளோட அப்பாவும் அம்மாவும் மின்னல் தாக்கிக் கருகிப் போய்ட்டாங்க... யாருமில்லாத அனாதையா கதறித் துடிச்ச அந்தக் குழந்தையை அப்பா எங்க வீட்டுக்குக் கூட்டிக்கிட்டு வந்தார்.

"இனிமே அத்தான்தான் உனக்கு எல்லாமேன்னு" சொல்லி அவ கையை என் கையிலே பிடிச்சுக் கொடுத்தார். அன்னைக்குத் தொடங்கிச்சு எங்க நட்பு, அன்பு, காதல் எல்லாமே... அன்னையிலேர்ந்து ஒருநாள்கூட அவளை நான் பிரிஞ்சது இல்லை!

இதோ பாருடா! உங்க அண்ணனைப் படிக்க வச்சு நல்ல வேலையிலே சேத்துவிட்டு அவனுக்குன்னு ஒரு வீடும் வாங்கிக் கொடுத்தாச்சு. உன் தங்கச்சியையும் நல்லா படிக்க வச்சு நல்ல மாப்பிள்ளைகிட்ட ஒப்படைச்சாச்சு. மீந்து இருந்தவன் நீ மட்டும்தான். உன்னையும் அண்ணனைவிடப் பெரிய படிப்பு படிக்க வச்சேன்... நல்ல வேலைக்குப் போய்க்கிட்டு இருக்கே... என் காலத்துக்கப்புறம் இந்த வீடு, தோட்டம் எல்லாமே உனக்குத்தான்!

அதுவரைக்கும் காத்திருக்க முடியலைன்னா தனிக் குடித்தனம் போ. நான் குறுக்கே நிக்கமாட்டேன். இல்லைன்னா இந்த வீட்டு மாடிமேலே ரெண்டு அறை கட்டிக்கோ... இல்லைன்னா தோட்டத்திலே தனியாவே ஒரு பெரிய வீடு கட்டிக்கோ... இப்படி உனக்கு எவ்வளவோ வழிகள் இருக்கு. எனக்கும் அம்மாவுக்கும் தேவைப்படற தனிமையிலே மட்டும் குறுக்கே வராதே!"

- அப்பா நீளமாய்ப் பேசி முடிக்க, நான் வாய் மூடி அமைதியாய்த் திரும்பி வந்தேன்.

என் மனைவி முகவாய்க் கட்டையைத் தோள் பட்டையில் இடித்துக் கொண்டு முகத்தைத் தூக்கி வைத்துக் கொண்டாள்.



பிள்ளைகளைப் பள்ளிக்கு அழைத்துச் சென்று திரும்பக் கூட்டிக் கொண்டு வரும் அத்தையை பாதி சமையலைக் கவனித்துக் கொள்ளும் அத்தையை என் மனைவியால் பிரிய முடியாது... பிள்ளைகளுக்குக் கதைகள் சொல்லி, விளையாட்டுக் காட்டி மகிழ்விக்கும் அப்பாவை மின்சாரக் கட்டணம், தண்ணீர் வரி, வீட்டு வரி, தொலைபேசிக் கட்டணம், நியாய விலைக் கடை என்று எல்லாத் தலைவலிகளையும் சுமக்கும் அப்பாவை என்னால் பிரிய முடியாது... அது மட்டுமல்லாமல், என் மனைவியின் பேச்சைக் கேட்டு அவள் தம்பியின் தொழிலில் நிறைய முதலீடுகள் செய்திருந்தேன். எனவே கையில் வீடு கட்டுமளவிற்குப் பணம் அப்போது புழங்கவில்லை.

இந்த பலவீனங்களையெல்லாம் தெரிந்து கொண்டுதான், அப்பா குத்திக்காட்டிப் பேசியதாக என் மனைவிக்கு ஆத்திரம். அவளை அமைதிப் படுத்துவதற்குள் எனக்குப் போதும் போதுமென்று ஆகிவிட்டது. பிள்ளைகளிடம் பொய் சொல்லிவிட்டு அவளை மட்டும் அழைத்துக் கொண்டு ஏற்காடு சென்று ஒரு வாரம் தங்கி இரண்டாம் தேனிலவு கொண்டாடிவிட்டு வந்த பிறகுதான் ஒருவாறு அமைதியடைந்தாள்.

வீடு திரும்பிய எங்களுக்கு ஒரு வியப்பு காத்திருந்தது! அப்பா தோட்டத்திலே ஒரு குடிசை போட்டிருந்தார். இμண்டு மரங்களுக்கிடையே பெரிய ஊஞ்சல் அமைத்திருந்தார்.

பிள்ளைகள் இருவரும், குடிசையும் ஊஞ்சலும் தங்களுடையது என்று சொந்தம் கொண்டாடினார்கள். குடிசையில் நூலகம் அமைக்கப் போவதாகவும் நாய்க்குட்டி வளர்க்கப் போவதாகவும் தோட்டத்திலே தேன்கூடுகள் வைக்கப் போவதாகவும் அவர்கள் மகிழ்ச்சிச் கூச்சலிட்டார்கள்.

வழக்கமாய் விடுமுறை நாட்களில் வீட்டிற்குள் எங்கள் கால்களையே சுற்றிச் சுற்றி வந்தவர்கள், இப்போதெல்லாம் தாத்தா பாட்டியுடன் ஊஞ்சல், குடிசை எனத் தோட்டத்திலேயே கிடந்தார்கள். வீட்டில் நானும் மனைவியும் தனித்து விடப்பட்டோம்.



அப்பாவின் ஏற்பாடு புரிந்தது. பகலில் கிடைத்த தனிமையை நன்றாகவே பயன்படுத்திக் கொண்டோம். கொஞ்சம் கவனக் குறைவாகவும் நடந்து கொண்டோம்...விளைவாக மூன்றாவதாய் ஒரு செல்லக் குட்டியும் வந்து பிறந்தாள்!

மருத்துவமனைக்கு வந்து பேத்தியை எடுத்துக் கொஞ்சிய அப்பா என்னைப் பார்த்துக் கண் சிமிட்டினார். இரண்டு இடைஞ்சல்களையே தாங்கமுடியாத நீங்கள் இப்போது மூன்றாவது இடைஞ்சலையும் பெற்றுக் கொண்டீர்களே என்று கூறி குறும்பாய் நகைத்தார்.

மனைவி வெட்கத்தில் முகம் சிவந்தாள்.

காலம் விரைந்தோடி விட்டது! அப்பாவும் அம்மாவும் இப்போது இல்லை. அவர்கள் இடத்திற்கு நாங்கள் வந்து விட்டோம்...

வெளியே முன்னறையில் மகன் மடக்குக் கட்டிலை விரித்துப் போடும் ஓசை கேட்டது. அவன் முன்னறையில்தான் படுக்கிறான். மருமகளும் பேத்தியும் இரண்டாவது படுக்கை அறையில் படுக்கிறார்கள். இவனும் வீட்டைப் பெரிதாக்கவில்லை. மாறாக மகள் உறங்கியதும் மனைவியை முன்னறைக்குக் கடத்திக் கொண்டு வந்து விடுகிறான் நாங்கள் வெளியே வரமாட்டோம் என்ற துணிச்சலில்!

என் மனைவி என் மார்பில் சாய்ந்து உறங்கி விட்டிருந்தாள். அவள் முதுகை ஒரு கையால் வருடிய நான் இன்னொரு கையால் அவள் கூந்தலைக் கோதினேன்.

தாலாட்டுப் பாடிக் குழந்தையைத் தூங்க வைக்கும் தாய்மை உணர்வு என்னுள்ளும் மேலோங்க, மெல்லக் கண்களை மூடி நானும் துயில முயல்கிறேன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/story/shortstory/p33.html


  2022
  2021
  2020
  2019
  2018
  2017

வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


சிறப்புப் பகுதிகள்





முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா

தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                         


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License