Welcome to Muthukamalam Tamil Web Magazine...! முத்துக்கமலம் இணைய இதழ் தங்களை அன்புடன் வரவேற்கிறது...!
எங்களைப் பற்றி | படைப்புகள் | இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு! இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!! | Font Problem |   | 
muthukamalam
முத்து: 06 கமலம்: 24
உள்ளடக்கம்
பார்வையாளர்கள்
(04-12-2008 முதல்)

Alexa Rank


Tidbits
குறுந்தகவல்

ஓரெழுத்து மொழிகள்


எழுத்துக்கள் தனித்தும் தொடர்ந்தும் பொருள் தரும் மொழியமைப்பில் முன்னதான தனிநிலையில் வருவன நெட்டுத்தேழே என்றும், குற்றெழுத்து ஐந்தும் வாராதென்றும் தொல்காப்பியர் குறிப்பிடுகின்றார். உரையாசிரியர்கள் உயிர்மெய்க்கும் இந்நூற்பாவினை விரித்துப் பொருள் கொண்டுள்ளனர்.

நன்னூலார் 48 நெடில்களும், இரு குறில்களும் சிறப்பாகவும், ஔ, அ, இ, உ, எ, கை, கௌ ஆகியவை சிறப்பில்லனவாகவும் ஓரெழுத்து ஒரு மொழியாக வரும் என்று குறிப்பிடுகிறார்.

இன்றைய வழக்காற்றில் எழுபதுக்கும் மேற்பட்ட ஓரெழுத்து மொழிகள் இருக்கக் காண்கின்றோம். அவைகளில் சில இங்கே...



அ - அயன், அரி, அரன்
ஆ - ஆன்மா, இடப ராசி
இ - சுட்டுப் பொருள், அரை எனும் அளவுப் பெயர்
ஈ - மலைமகள், அலைமகள், கலைமகள்
உ - சிவன், நான்முகன், உமை
ஊ - சிவன், திங்கள்
எ - வினாப் பொருள்
ஏ - சிவன், திருமால்
ஐ - சிவன், கொற்றவை, கடவுள்ம் குரு, அரசன், தந்தை, ஐந்து
ஒ - மயில்
ஓ - நான்முகன்
ஔ - பாம்பு (அனந்தன்)
க - திருமால், நான்முகன், காமன், இயமன், கதிரவன், கடவுள், ஆனைமுகன், அரசன், காற்று, தீ, ஆன்மா, திங்கள், கைக்கிளை, இசையின் எழுத்து
கா - கலைமகள்
கு - நிலம்
கூ - பூமி, நிலம்
கை - செங்கல் அளவு, தங்கை
கோ - கதிரவன், நிலவன், அரசன், நீர், பூமி, தகப்பன், திசை
கௌ - வாயாற் பற்று
ங - குறுணியைக் குறிக்கும் குறி
சா - பேய்
சீ - மலைமகள், கலைமகள்
சூ - வியப்பு
சே - இடபராசி
சை - இகழ்ச்சிக் குறிப்பு
சோ - உமை
சௌ - சிறுமி
ஞா - கட்டு
ஞை - இகழ்ச்சிக் குறிப்பு
த - நான்முகன், குபேரன், இருதயத்தின் உள்ளிடம்
தா - நான்முகன்
தீ - நெருப்பு, நரகம்
து - அசைத்தல்
தூ - புள்ளிறகு
தே - கடவுள்
தை - மகர ராசி
ந - மிகுதி
நா - நாக்கு
நீ - முன்னிலைச் சொல்
நு - புகழ்
நூ - யானை
நே - அன்பு, அருள்
நை - ஏவல்
நொ - துன்பம்
நோ - நோய்
நௌ - மரக்கலம்
ப - கீழ்வாயிலக்கக் குறி
பா - பாம்பு
பி - அழகு
பீ - அச்சம்
பூ - பூமி
பே - நுரை
பை - அழகு
போ - ஏவல்
ம - சிவன், நிலவன், இயமன்
மா - இலக்குமி, கலைமகள், தாய், 1/20, மரணம்
மீ - ஆகாயம்,
மூ - மூன்று, மூப்பு
மே - அன்பு
மை - மேடவிராசி
மோ - மோத்தல்
யா - கட்டுதல்
ரு - ஐந்தாவது எண்ணின் குறியீடு
வ - கால் என்னும் அளவுக் குறியீடு
வா - வருதல்
வி - ஆகாயம், காற்று
வீ - கருவுறுதல், சாவு
வே - ஏவல்
வை - வைத்தல்
வௌ - ஏவல்

- முனைவர். தமிழப்பன்.

*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tidbits/p130.html






கேள்வி என்று ஒன்று இருந்தால் அதற்கு பதில் ஒன்றும் இருக்கத்தானே செய்யும். ஆனால் சில கேள்விகளுக்குப் பதில்களே இல்லை என்று ஒரு இணையதளம் சொல்கிறது.

இந்த இணையதளத்தில் பதிலில்லாத கேள்விகள் என்று பல கேள்விகள் பட்டியலிடப்பட்டிருக்கின்றன. இந்தக் கேள்விகளுக்குப் பதில் உங்களிடமிருக்கிறதா? என்று முயற்சித்துப் பார்க்கலாமே?

வாங்க... பதில் சொல்லிவிட்டுப் போங்க... இதற்குப் பரிசு எல்லாம் கிடையாதுங்க...

     - உ. தாமரைச்செல்வி.








தேனி. எம். சுப்பிரமணி எழுதிய நூல்கள்

        
தமிழ் விக்கிப்பீடியா, தமிழ் இணையச் சிற்றிதழ்கள், சுவையான 100 இணையதளங்கள், மாணவர்களுக்கான 100 இணையதளங்கள்


<