பாம்புப் புற்றிற்கு பால் ஊற்றுவதன், முட்டை வைப்பதன் காரணம் என்னவென்று தெரியுமா?
முட்டையையும் பாலையும் பாம்பு குடிக்காது. பின்னர் எதற்குப் புற்றுக்குள் பால் ஊற்றுகிறார்கள் என்று கேட்கலாம்.
தொடக்கக் காலத்தில் மனிதனுக்குப் பாம்புகளே பெரிய பிரச்சனையாக இருந்தன.
அடர்ந்த காடுகளில் மனித நடமாட்டம் மிக மிக குறைவு. மனிதனை விடப் பாம்புகள் எண்ணிக்கை அதிகமாக இருந்தன.
ஒரு உயிரினத்தைக் கொல்லும் உரிமை இந்து சமயத்தை பின்பற்றும் மக்களுக்கு இல்லை.
அப்போது அவர்கள் அனைத்தையும் மதித்தார்கள். ஆகவே அதனைக் கொல்லாமல் அதன் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த முயன்றனர். எப்படி?
பாம்புகள் இனப்பெருக்கம் மேற்கொள்வது மிகவும் வித்தியாசமானது.
பெண் பாம்பு தான் உடலில் இருந்து ஒரு வித வாசனை திரவத்தை (பரோமோன்ஸ்) அனுப்பும். அதனை நுகரும் ஆண் பாம்பு பெண் பாம்பைத் தேடி வரும்.
பெண் பாம்பில் இருந்து வரும் வாசனையை கட்டுப்படுத்தும் வேலையைப் பால் முட்டையிலிருந்து வரும் வாசனை தடுக்கும்.
எனவே அவற்றால் இனப்பெருக்கம் செய்ய முடியாது.
இதன் முழுமையான காரணத்தைச் சொன்னால் ஒருவரும் பின்பற்ற மாட்டார்கள்.
எனவே ஒருவித பயமூட்டும் பக்தியுடன் பாம்புக்குப் பால் ஊற்றும் வழக்கத்தைத் தொடங்கி வைத்தார்கள்.