இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபதாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!
Content
உள்ளடக்கம்




சுற்றுலா
பயணத் தொடர்

மத்தியக் கிழக்கு நோக்கி ஒரு பயணம்!

வகிதா நாசர்


17. துபாய் விமான நிலையம்

“விமானப் பயணம் செய்யும் போது உங்க எழுத்தாள மூளையைக் கழட்டி வச்சிட்டு வாங்க! சாத்தியக்கூறு விதிகள் சாத்துக்குடி விதிகள் எல்லாம் பேசாதீங்க. விமானத்தில யாராவது பாம் வச்சுட்டாங்கன்னா? விமானத்தை யாரும் ஹைஜாக் பண்ணிட்டா? விமானம் விபத்துக்குள்ளாகி விட்டால்? தேவையற்ற விபரீதக் கற்பனைகள்… ஹாப்பியா ட்ராவல் பண்ணி ஹாப்பியா ஊரைச் சுற்றிப் பாருங்கோ…” பொரிந்து தள்ளினேன்.

“சரி சாத்தியக்கூறு விதிகளைப் பற்றி பேசல. இன்னொரு முக்கியமான கேள்வி…”

“கேளுங்க… செந்தில்!” என்றேன் கவுண்டமணியாய் மாறி.

“விமானங்கள்ல கிழங்கு கிழங்கா ஏர்ஹோஸ்டஸஸ் இருப்பாங்க. அவங்க அழகைப் பார்த்துக்கிட்டே விமானப்பயணம் செய்யலாம்னு சொல்வாங்க. வசந்தமாளிகைல சிவாஜிகணேசன் பறந்து கொண்டே ஒரு பாட்டு பாடுவார் நினைவிருக்கா?”

“நோ ட்ரிங்ஸ் நோ டான்ஸ் நோ ஜொள்ளு…”

அமர்ந்தபடி பார்வையைச் சுழற்றினேன்.

“யோவ் பெருசு! இதென்ன ட்ரெய்ன்னு நினைச்சியா? கம்பார்ட்மென்ட் முழுக்க ரவுண்ட் அடிக்க!”

“என்னதான் செய்ய?”

“உனக்கு முன்னால் இருக்கும் ஸ்கிரீனில் படம் பார். உணவு தருவார்கள் சாப்பிடு!”

“சிக்கன் பிரியாணி லெக் பீஸோடு வருமா?”

“ஹலால் உணவு. பன்றிக்கறி தொடர்பான அயிட்டங்கள் கிடையாது. ஊர் திரும்பியதும் சொல்லுங்கள் செம மட்டன் பிரியாணி செஞ்சு தரேன்!”

ப்ரூட் சாலட், இனிப்பு, பழச்சாறு, பிரட் ஆம்லெட் வந்தது.

சாப்பிட்டு முடித்தோம்.


மஸ்கட் காலை 9.50மணிக்கு போனது.

இறங்கி அடுத்த விமானத்திற்காகக் காத்திருந்தோம்.

அங்கு நாலு மணி நேரம் காத்திருப்பு. அங்கிருக்கும் சுங்கவரி இல்லாத கடைகளுக்குள் புகுந்தோம்.

நகை விலை இந்திய விலையை விட அதிகம்.

கூலி வேலைக்கு செல்லும் நான்கு கேரளாக்காரர்களைச் சந்தித்தோம்.

அவர்களுடன் ஆர்னிகா கதைத்தார்.

மீண்டும் நுழைவுச் சம்பிரதாயங்கள்.

அதன் பின் டபிள்யூஒய் 609 ஓமன் ஏர்வேயில் ஏறினோம்.

மதியம் 2.20 மணிக்கு வானேறினோம்.

அடுத்த ஒன்றேகால் மணி நேரத்தில் எங்களது விமானம் துபாய் சர்வதேச விமான நிலையத்தில் இறங்கியது. இன்டர்நேஷனல் ஏர் டிரான்ஸ்போர்ட் அஸோஸியேஷன், துபாய் சர்வதேச விமான நிலையத்துக்கு வைத்த சங்கேதப் பெயர் டிஎக்ஸ்பி (DXB), தென்ஆப்பிரிக்காவின் டப்ளின் விமானநிலையத்துக்கான சங்கேதப் பெயர் டியூபி (DUB), துபாயில் இன்னொரு விமான நிலையமும் உள்ளது. அதன் பெயர் அல் மெக்தூம் சர்வதேச விமான நிலையம். துபாய் டிஎக்ஸ்பி விமான நிலையம் உலகின் பரபரப்பான விமான நிலையங்களில் ஒன்று.

டெர்மினல் ஒன்று. விமானபடிக்கட்டுகளில் இறங்கினேன்.


“உலகின் பல பணக்காரர்களின் விளையாட்டு மைதானமான துபாய் உங்களை வரவேற்கிறது!” ஆர்னிகா கட்டியம் கூறி என்னை வரவேற்றார்.

துபாய் டிஎக்ஸ்பி விமான நிலையத்தில் மூன்று டெர்மினல்கள் இருந்தன.

டெர்மினல்1 - இண்டிகோ போன்ற விமான சேவைகளுக்கான விமானத்தளம்.

டெர்மினல் 2 – பெர்ஷியன், கல்ப் நாட்டு விமான சேவைகளுக்கான விமானத்தளம்.

டெர்மினல் 3 – எமிரேட்ஸ், குவன்டாஸ், ப்ளை துபாய், ஏர் கனடா.

துபாய் டிஎக்ஸ்பி விமானநிலையம் 15 மில்லியன் பயணிகளைக் கையாளும் திறன் கொண்டது. 5, 20, 000 சதுர மீட்டர் பரப்பளவு. 221 பரிசோதிப்பு மையங்கள். 28 தானியங்கி வாசல்கள்.

விமான நிலையத்திற்குள்- தானியங்கி பணப்பரிமாற்ற இயந்திரங்கள் கொண்ட கூண்டுகள், நாணயப் பரிமாற்ற மையங்கள், குழந்தைகள் கவனிப்பு அறைகள், பிரார்த்தனை கூடங்கள், குளியலறைகள், சுங்கவரி இல்லாத கடைகள், ஸ்பா, பரிசுப்பொருள் நினைவுப்பரிசுக் கடைகள், உணவு விடுதிகள். ஆங்காங்கே இஸ்லாமிய அதிகாரிகள் நின்றிருந்தனர்.

சிலரிடம் ஆர்னிகா, “அஸ்ஸலாமு அலைக்கும்!” என்றார்.

பதில் சொல்லாமல் அவர்கள் பார்வைகளைத் தவிர்த்தனர்.

இரண்டு விதமான அரபிகள் உண்டு என கேள்விப்பட்டிருக்கிறேன். ஒருவகை அரபிகள் இந்திய முஸ்லிம்களை தாழ்த்தப்பட்ட முஸ்லிம்களாக பார்ப்பர். இன்னொரு வகை அரபிகள் தங்களிடம் வேலை பார்க்கும் இந்திய முஸ்லிம்களிடம் டன் கணக்கில் பாசத்தைக் கொட்டுவர்.

விமான நிலையத்துக்குள் விலை இல்லாத சர்வதேச இடைவழிப் பேருந்து சேவை உண்டு.

டெர்மினல் ஒன்றும் மூன்றும் துபாய் மெட்ரோ ரயில் சிவப்பு லைனுடன் இணைக்கப்பட்டிருந்தன.

டெர்மினல் 3 விமான நிலைய ரயில் வாசல் ஏ,பி,சி யுடன் இணைக்கப்பட்டிருந்தது.

துபாயின் மெட்ரோ ரயில் சேவையைப் பற்றி பார்ப்போம்.

துபாயில் மெட்ரோ ரயில் இரண்டு வகை சேவைகளாய் பிரிக்கப்பட்டிருக்கிறது.

மெட்ரோ சிவப்புநிற போக்குவரத்து 67.1 கிமீ நீளமும் 31+4 நிறுத்தங்களும் கொண்டது.

மெட்ரோ சிவப்பு நிறப் போக்குவரத்து நிறுத்தங்கள் இவைதான்;

* சென்ட்ரல் பாயின்ட்

* எத்திசலாத்

* துபாய் விமான நிலைய இலவச மண்டலம்

* அல் நஹ்தா

* ஸ்டேடியம்

* அல் குயாத்

* அல் ஹெய்ல்

* அபு பக்கர் அல் சித்திக்

* சலா அல் தின்

* யூனியன்

* புர்ஜமான்

* ஏடிசிபி

* மேக்ஸ்

* உலக வர்த்தக மையம்

* எமிரேட் டவர்ஸ்

* பைனான்ஸியல் சென்டர்

* புர்ஜ் கலிபா

* பிசினஸ் பே

* அல்சபா

* உம் அல் ஷெய்ப்

* மால் ஆப் எமிரேட்ஸ்

* மாஸ்ரெக்

* துபாய் இன்டர் நெட்சிட்டி

* அல் கைய்ல்

* டிஎம்சிசி

* ஜபல் அலி

* எனர்ஜி

* யுஏஇ எக்ஸ்சேஞ்ச்

* தி கார்டன்ஸ்

* டிஸ்கவரி கார்டன்

* ஜுமேரியா கோல்ப் மையம்

* துபாய் இன்வெஸ்ட்மென்ட் பார்க்

* எக்ஸ்போசிட்டி துபாய்


இன்னொன்று மெட்ரோ பச்சை நிற போக்குவரத்து நிறுத்தங்கள். இது 20 நிறுத்தங்கள் (வெளிநிறுத்தம் 12 சுரங்கப்பாதைகள் எட்டு)

* எத்தி சலாத்

* அல் குவாசைஸ்

* ஸ்டேடியம்

* சலா அல் தின்

* யூனியன் (சிவப்பு போக்குவரத்துடன் இணையும் நிறுத்தம்)

* புர்ஜமான்

* ஷராப் டிஜி

* துபாய் ஹெல்த் கேர் சிட்டி

* கிரீக்

* துபாய் ஏர்போர்ட் ப்ரீ ஸோன்

* அல் நகதா

*அல் கொயாத்

* அபு ஹெய்ல்

* அபூபக்கர் அலி சித்திக்

* அவுத் மேத்தா

* பனியாஸ் ஸ்கொயர்

* கோல்ட் சௌக்

* அல்ராஸ்

* அல் ஜடாப்

விமான நிலையத்தை விட்டு வெளியே வந்தோம்.


ஏராளமான பாகிஸ்தானி மற்றும் பங்களாதேசி ஓட்டுனர்கள் மொய்த்தனர்.

உருதுவில் விசாரித்தனர்.

“எங்க போகனும்?”

“டெய்ராவின் அல் சப்கா தெருவில் இருக்கும் மவுன்ட் சினா ஹோட்டலுக்கு போகவேண்டும்* உடைந்த ஆங்கிலத்தில் கூறினார் ஆர்னிகா

125 திர்ஹாம் கேட்டனர்.

இன்னொரு பயணியுடன் ஷேர் பண்ணிக் கொள்ள சம்மதித்து 75 திர்ஹாம் பேசி முடித்தார்.

கார் சீறிப் பாய்ந்தது.

ஹோட்டல் வரவேற்பறையில் அமர்ந்திருந்தவர். “ஸாரி… உங்க ரூம் புக்கிங் கேன்சல் ஆயிடுச்சு… நோ ரூம்… கோ டு அதர் ஹோட்டல்* என்றார் கேரளம் கலந்த ஆங்கிலத்தில். 

(பயணிப்போம்...!)


*****


இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/tourist/serial/serial1/p17.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                    


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License