புதிய தொடக்கம்!
இனிய இன்பம்
தேடும் பொருளில்
அல்ல…
தெளிந்த நல்லறிவில்…
கிடைத்த பொருளைக்
காட்டிலும்…
தேடிக் கிடைக்கும்
தெல்லறிவு மேலானது…!
சேர்த்த பொருள்
மானிட உடல்
மண்ணுலகத்தில்
உள்ளவரை…!
செல்வம் சேர்க்கும்…!
கிடைத்த அறிவு…
செல்வம்..!
நிலைத்த உலகம்
உள்ளவரை…!
வாதாடிச் சேர்க்கும்
இன்பொருள்… இருக்கும்
வளத்தை அழிக்க…
வாசித்துச் சேர்க்கும்;
மென்பொருள் வளமாய்
மாற்ற…
கொடுக்கக் குறையாத
செல்வமாய்...
புத்தகங்கள் இருக்க…!
கிடைத்த புத்தகத்தை
விற்றுக் கிடைக்கும்
செல்வம் நிலைக்காது
இவ்வுலகில்…
இனிய பயணத்தை
தொடங்குவோம்
குறைவிலா செல்வம்
பெற…!
- மு. சந்திரசேகர், இராஜபாளையம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.