மிளிர வைப்போம்!
போதையிலா வாழ்வுதனைப்
போற்றிடுவோம்!
அதில் விழுந்த காளையரை
மீட்டிடுவோம்!
நல்ல பாதையினைக் காட்டி
அவரை மாற்றிடுவோம்!
பல பாடங்களைக் கூறி
அவரைக் காத்திடுவோம்!!
நீர்க்குமிழி வாழ்வதன்
நிரந்தர மறிந்தும்
சேர்க்கையில் கூடிய
சேற்றுப் பழக்கமதை
தீர்க்கமுடன் போராடி
தீயிடுவோம்!
அதில் தேறிவரும்
தோழர்க்குத்
தோள் கொடுப்போம்!
வேண்டாத பழக்கந்தனை
வேகத்தில் பூண்டு
பூண்டோடு கைலாய
புகழிடந் துணிவோரைக்
கண்டதுமே ஒதுங்காமல்
கவனித்திருப்போம்! அவரை
மீண்டுவந்த வைரமென
மிளிர வைப்போம்!
- முகில் தினகரன், கோவை.
இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.