அத்து மீறிய வருகை!
ஆர்ப்பரித்த அலைகள்
அத்து மீறிய வருகைகள்
ஆயிரம் ஆயிரமாய்
புதுப்புது கால் தடங்கள்
அமைதியாய் பார்த்தபடி
அதிகாரம்
நிலன்களையும்
வளங்களையும்
எம் இனங்களையும்
சுரண்டிக் கூட
திருப்திப்படாத இவர்கள்
கேட்க யாருமில்லை என்ற தொணியில்
எம் கடல்களுக்குள் அதிகாரம்
அதிலும் அடிமையாய்
எம் இனம்!
அலையோசை தாலாட்ட
அமைதியான கிராமங்கள்
ஆயிரம் ஆயிரம் ஆண்டுகளாய்
தமிழ் மணம் வீச
இப்போது மட்டும்
திடீரென வந்தது தேவையற்ற காற்று
தீய்ந்து போவதை விரும்பாத
எம் கிராமங்கள்
தேவயற்றோர் வருகைகளால்
வேதனையோடு
அச்சத்துக்கு அத்திவாரமிட்டபடி
- கிருஷ்ணா, இலங்கை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.