வாங்க முடியவில்லையே...!
இயந்திரம் காபி தரும்,
கம்ப்யூட்டர் கல்வி தரும்,
செல்லுமிடமெல்லாம்
செல்போன் செய்தி தரும்...
விரைந்து செல்ல வாகனம் உண்டு,
பெரியவர்கள் விளையாட
மனமகிழ் மன்றங்கள் உண்டு.
உடம்பின் பாகங்கள் விற்கும்
மருத்துவமனையுமுண்டு...
பணமிருந்தால் எதுவுமிங்கே
எளிதாய்க் கிடைக்கும்.
இந்த நாட்டினிலே...
என்கிறார்கள்!
ஆனால்...
உதட்டில் மலரும் சிறு
புன்னகையையும்,
உள்ளத்தில் நிறையும்
மனமகிழ்ச்சியையும்
இந்தப் பணத்தால்
வாங்க முடியவில்லையே...!
- மணிபாரதி, அம்பாசமுத்திரம்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.