அய்யனாரு அழகைப் பாரு!
சுட்டெரிக்கும் வெயிலைப் பாரு
வெட்ட வெளியின் தகிப்பைப் பாரு
வேப்ப மர நிழலைப் பாரு
வெப்பந் தணியும் உணர்ந்து பாரு.
குழந்தைகளின் ஆட்டம் பாரு
இளைஞர்கள் கூட்டம் பாரு
இளம் பெண்கள் அழகைப் பாரு
அங்கிருப்பவர்கள் அரட்டை பாரு.
பாட்டிகளின் பக்தியைப் பாரு
தாத்தாக்களின் சக்தியைப் பாரு.
பலியாட்டின் முழிப்பைப் பாரு
பூசாரியின் சிரிப்பைப் பாரு.
பொங்கல் பானை பொங்குது பாரு
பொங்கலிடுபவர் மகிழ்ச்சியைப் பாரு
வாழையிலைப் படையலைப் பாரு
வந்தவர் வயிறெல்லாம் நிரம்பியதைப் பாரு
அய்யனாரு குதிரையிலே
அமர்ந்திருக்கும் அழகைப் பாரு
அவரை நீயும் வணங்கிப் பாரு
அதிரடியாய் நம் கஷ்டம் தீரும் பாரு.
- ந. க. துறைவன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.