தனி மரியாதை!
உறவினர் நண்பர்கள் வீட்டுக்குப் போகும் போது...
பூ, பழம், திண்பண்டம் வாங்கிப் போகணும்.
நோயாளியைப் பார்க்க மருத்துவமனைக்குப் போகும் போது...
பழம், சத்துணவு வாங்கிப் போகணும்.
துக்கம் விசாரிக்க இறப்பு வீட்டுக்குப் போகும் போது...
மாலை வாங்கிப் போகணும்.
நல்லதோ கெட்டதோ எங்கே போகும் போதும்...
நாம் ஏதேனும் ஒன்றை வாங்கிப் போகணும்.
மரியாதை நிமித்தமாக... நாம் செய்வதற்கு
தனி மதிப்புதான்! தனி மரியாதைதான்!
இங்கிதமான வரவேற்பு!
இங்கிதமான விசாரிப்பு!
இங்கிதமான உபசரிப்பு!
- ந. க. துறைவன், வேலூர்.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.