வலிக்கிறது இதயம்!
மணலில் தொடங்கி
கணினி வரை
வளர்ந்துவிட்ட கல்வி
உனக்கு
மறுக்கப்படுகையில்
வலிக்கிறது இதயம் !
அழகிப் போட்டிகளில்
நீ ஆடைகளை
குறைக்கும் போது
வலிக்கிறது இதயம் !
சினிமாக்காரர்களின்
சில்லறைகளுக்கு
நீ சிரித்து
சீரழிக்கப்படுகையில்
வலிக்கிறது இதயம் !
பாட்டு எழுதுபவன்
பாட்டிலுடன் சேர்த்து
உன்னை கொச்சைப்படுத்துகையில்
வலிக்கிறது இதயம் !
குடும்ப வாழ்வில்
குத்து விளக்குயேற்ற
வந்த உன்னை
திரியாக்கி
தீக்குச்சிக்கு
தின்னக்குடுக்கையில்
வலிக்கிறது இதயம்!
மொத்தத்தில்
கருவறையில்
உதயமாகும் உன்னை
இறுதியில்
கல்லறைக்குள் அனுப்பிவிட்டு
பெண்ணுரிமை பற்றிப்பேசும்
மனிதர்களை நினைக்கையில்
வலிக்கிறது இதயம்!
- சுதா யேகம்மை.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.