இணையத்தில் ஒரு இலக்கியப் படைப்பு!       இது தமிழ் ஆர்வலர்களின் இலக்கியத் துடிப்பு!!           ISSN: 2454-1990
muthukamalam muthukamalam
இருபத்தொன்றாம் ஆண்டில் பயணித்துக் கொண்டிருக்கும் முத்துக்கமலம் பன்னாட்டுத் தமிழ் மின்னிதழின் படைப்புகளைப் பார்வையிடத் தங்களை அன்புடன் வரவேற்கிறோம்...!        முத்துக்கமலம் இணைய இதழின் வளர்ச்சிக்குத் தங்களால் இயன்ற நன்கொடையினை அளித்து உதவலாம்...!!       முத்துக்கமலம் மின்னிதழுக்கு அரசியல், திரைப்படம் தவிர்த்து அனைத்து வகையான படைப்புகளும் வரவேற்கப்படுகின்றன...!!!
Content
உள்ளடக்கம்




Verse
கவிதை

வேப்ப மரத்தின் வேதனைக் கதை!

ஊரின் நடுவினி​லே உயர்ந்​தோங்கி நான் நின்​றேன்
ஊருக்கு அழ​கென்று ஊரார்கள் ​சொன்னார்கள்...
பக்கத்தூர்க் காரர்களும் எ​னைப் பார்த்துப் பார்த்து வியந்தார்கள்
ஊராரின் ​பேச்சினி​லே நான் உச்சி குளிர்ந்து விட்​டேன்...
கி​ளைபரப்பி, பூ ​கொடுத்து, காய் ​கொடுத்து, கனி ​கொடுத்து
என்​நிழ​லையும் தான் ​கொடுத்து இதயம் குளிர நான் வாழ்ந்​தேன்
என்​னைப் பார்த்தவர்கள் எல்லோரும் பக்குவமாய் வந்தமர்ந்து
பல கதைகள் பேசி நிதம் பாங்காகக் களித்திடுவர்
குளிர் நீரு​ம் பருகிடுவர் குழந்​தைகள் கும்மாளம் ​போட்டிடுவர்
வேகாத ​வெய்யிலி​லே ​வெம்பரந்த ​பொட்டலி​லே
வேர்த்து விறுவிறுத்து ​வெம்பி என்னில் ஒதுங்கிடுவர்
தங்கள் வியர்வைதனைப் போக்கிடுவர் வியந்தென்னை பார்த்து நிற்பர்

பெரியவரும் சிறியவரும் பேதமின்றி வந்திடுவார்
அருமையாய்ப் பலகதைகள் அவரங்கே பேசிடுவார்
அரசியல் முதற்​கொண்டு அடுக்க​​ளை வ​ரையங்கு
அரு​மையாய்ப் ​பேசிப்​பேசி தங்கள் ஆயாசம் ​போக்கிடுவர்
உரசல்களும் வருமங்கே பல ஊர்வம்பும் தேடிவரும்
பெருமளவில் சண்டைகளும் பின்னேரம் நடக்குமங்கே
ஊரில் திருவிழாவும் கிராம ச​பைக் கூட்டங்களும்
இனிதாக இங்​கேதான் அமர்ந்​தே ​பேசிடுவார்
நல்லதற்கும் ​கெட்டதற்கும் ஊரார் கூடி இங்கு
கூட்டம் ​போட்டுப் ​பேசிடுவர் கூடிக் க​ளித்திடுவர்

பஞ்சாயம் செய்வாரும் பலக​தைகள் பகர்​வோரும்
பாங்காக என்னிடத்தை பாசத்துடன் தேர்ந்தெடுப்பர்
வெய்யில் நேரமானாலோ விரைந்தங்கே கூட்டம்வரும்
பையவே அமர்ந்திருந்து அவர்கள் பரவசமே கொண்டுநிற்பர்
எங்கிருந்தோ பறவையெலாம் எனைநாடி ஓடிவந்து
இங்கிதமாய் இருந்தபடி சங்கீதம் பாடிநிற்கும்
குயில்கூவும் ஒருபக்கம் குரங்காடும் மறுபக்கம்
அணிலெல்லாம் அணிவகுத்து ஆடியசைந் தோடிநிற்கும்

இளநீர் வெட்டி விற்பாரும் இனிப்பு செய்து விற்பாரும்
பருப்பு வ​டை, ​​பொறியுருண்​டை, குச்சி ஐசுக்காரர்களும்
இருப்பதனைப் பார்த்துவிட்டு எங்கிருந்தோ கூட்டம்வரும்
என் நிழலில் எல்லோரும் இருப்பதனைப் பார்த்தவுடன்
எனக்குள் வரும் இன்பமதை எண்ணிவிட முடியாது
ஊர்நடுவே நானிருந்தேன் ஊ​ரை அழகு ​செய்​தேன்
உதவிநின்றேன் யாவருக்கும் உதவித​னை மறந்திட்ட
யார்செய்த பொல்லாங்கோ எ​னையழிக்கத் திட்டமிட்டார்
புதுத்தலைவர் வந்தவுடன் புதுத்திட்டம் போட்டார்கள்
திட்டம்வந்த காரணத்தால் தீர்ந்துபோச்சு என்வாழ்வு!

ஊர்நடுவேநான் நின்றால் உபத்திரவம் எனச்சொல்லி
வேரோடுஎனைச் சாய்க்க விரைந்தங்கே செயற்பட்டார்
வீதியைப் பெருக்குதற்கு வில்லங்கம் நானென்று
வெட்டுவதற்குத் தீர்மானம் விரைந்தங்கே எடுத்திட்டார்
வெட்டுகின்ற செயல்பற்றி கூடிக் கூடிப் ​பேசின​ரே
எனக்காகச் சிலர் அங்​கே எதிர்த்து நின்று வாதிட்டார்
எதிரணியில் இருந்​தோ​ரோ எதற்கு இந்த மர​மென்றார்
இருகட்சி ​மோதியது இருதுண்டானது ஊ​ரெங்​கே
இருவ​ரையும் பார்த்​தெனக்கு இதயவலி வந்தது​வே
எப்படி இருந்த ஊரார் மனதில் இருள்வந்த நி​லை​யென்ன?
மரத்துப் ​போன இதயத்துடன் ஊரார் மரமாகிவிட்டன​ரே!

விவாதங்கள் நடந்தாலும் வெட்டவேணும் எனும்கட்சி
வெற்றியங்கே பெற்றதுவே வி​ரைவாக எ​னை​வெட்ட
வி​ரைந்​து முடி​வெடுக்க ​​வேத​னையில் நான் உழன்​றேன்
​வெட்கித் த​லைகுனிந்​தேன் அவர் ​வெட்டத் த​லைகுனிந்​தேன்
ஈரமில்லா இதயங்கள் இரக்கமில்லா மனிதர்கள்
என் பய​னைப் பார்த்தும் அவர்கள் பரிதாபப் படவில்​லை
பணப்பய​னை எதிர்பார்த்து பண்பாடு இழந்திட்டார்
பணத்திற்கு அடி​மையாகி எ​னை​வெட்டத் துணிந்திட்டார்

இரவோடு இரவாக ஊரார் எனைவெட்டி வீழ்த்தினரே
மறுநாளே விறகாக மண்ணில் மரணித்து நான்கிடந்தேன்
​வேம்பாக இருந்ததாலா என்​னை ​வே​ரோடு சாய்த்திட்டார்?
​வேத​னையில் நான்வீழ எ​னை ​வெட்டிக் கூறிட்டார்
நிழல்கொடுத்து நின்றயெனை நினைத்துக்கூடப் பார்க்காமல்
நி​னைத்தவுடன் எ​னை​வெட்டி வீதியி​லே எறிந்திட்டார்
​கைக​ளை முறிப்ப​தைப் ​போல் என் கி​ளைக​ளை முறித்திட்டார்
கால்க​ளை உ​டைப்ப​தைப்​போல் என் அடி​யைப் பிளந்திட்டார்
எனையெடுத்து எரிப்பதற்கு ஊரார் எல்லோரும் படையெடுத்தார்
எ​தையும் விடவில்​லை எ​னை அள்ளி எரிப்பதற்கு
அ​லைஅ​லையாய் வந்திட்டார் என்னகத்தில் தீயிட்டார்
இப்படியா இருப்பார்கள் இரக்கமில்லாக் ​கொடுங்​கோலர்
மரத்துவிட்ட மனங்​கொண்​டோர் மண்​ணழிந்து ​போகு​மென்று
மனதில் சிறிதுகூட நி​னைக்கவில்​லை மண்ணாகிப் ​போய்விட்டார்
என்​னைத் தம்வீடாய்த் நி​னைத்து வாழ்ந்த உயிரினங்கள்
தனித்து வாழ இடமின்றி தறி​கெட்டுப் ​போயின​வே!

என்​னை அழித்திட்ட இரக்கமற்ற ​கொடி​யோ​ரை
நான் எண்ணிப் பார்க்கையிலே மனிதமனம் மரத்துவிட்ட
வக்கிரத்தை நினைக்கின்றேன் மனம் ​நொறுங்கிப் ​போகின்​றேன்
பால் குடித்த வீட்டுக்குப் பாதகத்​தை நி​னைக்கின்ற
பண்பு ​கெட்ட மானிட​ரே பா​தைமாறிச் ​செல்லாதீர்
இயற்​கை​யை அழித்தா​லே இவ்வுலகம் அழிந்துவிடும்
வரம் வாங்கும் சாக்கில் சாபம் வாங்கிச் ​செல்லாதீர்!
இயற்​கை​யைக் ​கெடுக்காதீர் இனமழிந்து ​போய்விடுவீர்!
இயற்​கை​யோடு இ​ணைந்து வாழ்ந்தால் இன்பமாக வாழ்ந்திடலாம்

எல்லாம் ​கொடுத்த என்​னை இருந்த இடம் ​தெரியாமல்
எடுத்தழித்து விட்டார்கள் ஊரார் எடுத்​தெரித்து விட்டார்கள்
எப்படித்தான் இருந்தாலும் நான் எல்லோர்க்கும் நிழல்கொடுத்தேன்
எனும் நினைப்பு எழும்போது என்னிதயம் மகிழ்கின்றேன்!
எல்லாரும் பயன்பட​வே என்னளவில் வாழ்ந்திட்​டேன்!
எல்லாரும் எ​னைப் பார்த்து பயனுற​வே வாழுங்கள்!
எல்லாரும் மகிழ்வீர்கள் எல்லாமும் பயனுறு​மே!

- மு​னைவர் சி.​சேதுராமன், புதுக்​கோட்​டை..




இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.

இணைய பக்க முகவரி: http://www.muthukamalam.com/verse/p1528.html


  2026
  2025
  2024
  2023
  2022
  2021
  2020
  2019
  2018
  2017


வலையொளிப் பதிவுகள்
  பெரியார் சொல்லும் திராவிடத் திருமணங்கள்

  எம்.ஜி.ஆர் நடித்த திரைப்படங்கள்

  சைனிக் பள்ளி சேர்க்கைக்கான நுழைவுத்தேர்வு

  கௌரவர்கள் யார்? யார்?

  தமிழ் ஆண்டுப் பெயர்கள்

  பிள்ளையார் சுழி வந்தது எப்படி?

  வருவது போவது, வந்தால் போகாது, போனால் வராது...?

  பண்டைய படைப் பெயர்கள்

  ஸ்ரீ அன்னை உணர்த்திய மலர்கள்

  மாணவன் எப்படி இருக்க வேண்டும்?

  மரம் என்பதன் பொருள் என்ன?

  நீதி சதகம் கூறும் நீதிகள்

  மூன்று மரங்களின் விருப்பங்கள்

  மனிதன் கற்றுக் கொள்ள வேண்டிய குணங்கள்

  மனிதனுக்குக் கிடைத்த கூடுதல் ஆயுட்காலம்

  யானை - சில சுவையான தகவல்கள்

  ஒரு இரவுக்குள் நாலு கோடி பாடல்

  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?

  நான்கு வகை மனிதர்கள்

  தேனி எஸ். மாரியப்பன் சிரிப்புகள் - I

  மாபாவியோர் வாழும் மதுரை

  கிருபானந்த வாரியார் பொன்மொழிகள் - I

  தமிழ்நாட்டு மக்களுக்கு ஒன்னு வைக்க மறந்துட்டானே...?

  குபேரக் கடவுள் வழிபாட்டு முறை

  மூன்று வகை மனிதர்கள்

  உலக மகளிர் நாள் விழா - முத்துக்கமலம் உரை


முதன்மைப் படைப்பாளர்கள்

வலைப்பூவில் முத்துக்கமலம் இணைக்க...


சிரிக்க சிரிக்க
  எரிப்பதா? புதைப்பதா?
  அறிவை வைக்க மறந்துட்டானே...!
  செத்தும் செலவு வைப்பாள் காதலி!
  வீரப்பலகாரம் தெரியுமா?
  உங்களுக்கு ஒண்ணுமே இல்ல...!
  இலையுதிர் காலம் வராது!
  கண்ணதாசனின் நகைச்சுவைகள்
  குறைச்சுத்தான் எடை போடறாரு...!
  அவருக்கு ஒரு விவரமும் தெரியலடி!
  குனிஞ்ச தலை நிமிராத பொண்ணு...?
  இடத்தைக் காலி பண்ணுங்க...!
  சொறி சிரங்குக்கு ஒரு பாடல்!
  மாமியாரு பச்சைக்கிளி மாதிரி!
  மாபாவியோர் வாழும் மதுரை
  இளைய பெண்ணைக் கட்டித் தருவீங்களா?
  ஸ்ரீரங்கத்து யானைக்கு நாமம்!
  அகிலாவை அபின்னு கூப்பிடுறியே...?
  ஆறு தலையுடன் தூங்க முடியுமா?
  கவிஞரை விடக் கலைஞர்?
  பேயைப் பார்க்க ஒரு வாய்ப்பு!
  கடைசியாகக் கிடைத்த தகவல்!
  மூன்றாம் தர ஆட்சி
  பெயர்தான் கெட்டுப் போகிறது!
  தபால்காரர் வேலை!
  எலிக்கு ஊசி போட்டாச்சா?
  சவ ஊர்வலத்தில் எப்படிப் போவது?
  சம அளவு என்றால்...?
  குறள் யாருக்காக...?
  எலி திருமணம் செய்து கொண்டால்?
  யாருக்கு உங்க ஓட்டு?
  வரி செலுத்தாமல் ஏமாற்றுவது எப்படி?
  கடவுளுக்குப் புரியவில்லை...?
  முதலாளி... மூளையிருக்கா...?
  மூன்று வரங்கள்
  கழுதையுடன் கால்பந்து விளையாட்டு!
  நான் வழக்கறிஞர்
  பெண்ணின் வாழ்க்கை பந்து போன்றது
  பொழைக்கத் தெரிஞ்சவன்
  காதல்... மொழிகள்
குட்டிக்கதைகள்
  எல்லாம் நன்மைக்கே...!
  மனிதர்களது தகுதி அறிய...
  உள்ளங்கைகளில் ஏன் முடி இல்லை?
  இனிப்புப் பேச்சில் ஏமாறலாமா?
  அழுது புலம்பி என்ன பயன்?
  புகழ்ச்சிக்குப் பின்னால் வருவது...?
  கடவுளைக் காண உதவும் கண்ணாடி
  தகுதியில்லாதவருக்கு தந்த அடைக்கலம்
  உயரத்தில் இருந்தால் மதிப்பு கிடைக்குமா?
  ராமன் ராவணனிடம் கேட்ட அறிவுரை?
  அழியப் போவதில் ஆசை வைக்கலாமா?
  கழுதைக்குக் கிடைக்குமா வாய்ப்பு?
  எல்லாம் ஒரு கோவணத்துக்காக...!
  சிங்கத்திற்கு வாழைப்பழம்!
  வலை வீசிப் பிடித்த வேலை
  சாவிலிருந்து தப்பிக்க என்ன வழி?
  இறை வழிபாட்டிற்கு ஏற்ற வயது எது?
  கல்லெறிந்தவனுக்கு பழமா?
  சிவபெருமான் முன்பு காலை நீட்டலாமா?
  வீண் புகழ்ச்சிக்கு ஆசைப்படலாமா?
  ராமன் எப்படி ராமச்சந்திரன் ஆனார்?
  அக்காவை மணந்த ஏழை?
  சிவபெருமான் செய்த பாகப்பிரிவினை!
  இராமன் சாப்பாட்டு இராமனா?
  சொர்க்கத்திற்குள் நுழைய இலஞ்சம்
  புண்ணிய நதிகளில் நீராடினால் போதுமா?
  பயமிருப்பவன் வாழ்வில் முன்னேற முடியுமா?
  தகுதி இல்லாமல் தம்பட்டம் அடித்துக் கொள்ளலாமா?
  கழுதையின் புத்திசாலித்தனம்
  விற்ற மரத்தைத் திருப்பிக் கேட்கலாமா?
  தலைமை ஒன்றுக்கு அதிகமாக இருக்கலாமா?
  சொர்க்கமும் நரகமும் எப்படிக் கிடைக்கின்றன?
  திரிசங்கு சுவர்க்கம் என்று ஏன் சொல்கிறார்கள்?
  புத்திசாலி வாயைத் திறக்கலாமா?
  இறைவன் தப்புக் கணக்கு போடுவானா?
  ஆணவத்தால் வந்த அழிவு!
  சொர்க்கத்துக்கான நுழைவுச்சீட்டு
  சொர்க்க வாசல் திறக்குமா...?
  வழுக்கைத் தலைக்கு மருந்து
  மனைவிக்குப் பயப்படாதவர்
  சிங்கக்கறி வேண்டுமா...?
  வேட்டைநாயின் வருத்தம்
  மாமியாரைச் சாகடிக்க ஒரு மருந்து
  கோவணத்திற்காக ஓடிய சீடன்
  கடவுள் ரசித்த கதை
  புத்தர் மௌனமாக இருக்கலாமா?
  குளத்தை வெட்டினால் புண்ணியம் கிடைக்குமா?
  சிங்கத்திற்குத் தற்பெருமை வரலாமா?
  தேங்காய் சிதறுகாயான கதை
  அஷ்டாவக்கிரர் செய்த உபதேசம்
  அர்ச்சுனனுக்கு வந்த ஆணவம்
  கம்பர் வீட்டு வேலைக்காரி சொன்ன விடுகதை
  சிறப்பான ஆட்சிக்கு எவை தேவை?
  அழியும் பொருள் மேல் ஆசை கொள்ளலாமா?
  விமானத்தில் பறந்த கஞ்சன்
  நாய்களுக்கு அனுமதி இல்லை
  வடைக்கடைப் பொருளாதாரம்
ஆன்மிகம் - இந்து சமயம்
  ஆலயத்தினுள் கடைப்பிடிக்க வேண்டிய விதிகள்
  தானம் செய்வதால் வரும் பலன்கள்
  முருகனுக்கு காவடி எடுப்பது ஏன் தெரியுமா?
  பிரதோஷம் எப்படி விஷேசமானது?
  விநாயகர் சில சுவையான தகவல்கள்
  சிவராத்திரி விஷேசமானது ஏன்?
  முருகனுக்கு ஏன் இத்தனை பெயர்கள்?
  தமிழகத்திலுள்ள நவ கைலாயங்கள்
  கேரளாவின் 108 துர்க்கை கோயில்கள்
  எப்படி வந்தது தீபாவளி?
  தசரதனுக்கு ஏன் நான்கு பிள்ளைகள்?
  ஸ்ரீ கிருஷ்ணன் பூமியில் வாழ்ந்த காலம் எவ்வளவு?
  ஆலயத்திற்குச் சென்று வழிபடுவது அவசியமா?
  அனுமனுக்கு வடை மாலை ஏன்?
  திருநீறு எங்கெல்லாம் பூசலாம்?
  விநாயகருக்கு முதல் மரியாதை ஏன்?
  கீதை சொல்லும் சொல்லக்கூடாத விசயங்கள்
  சிவபெருமானின் 64 திருக்கோலங்கள்
  முருகா என்றால் என்ன கிடைக்கும்?
  குரு சீடனை ஏற்கும் தீட்சை முறைகள்
  விபூதியின் தத்துவம்
  கோயில்களில் பாலியல் சிற்பங்கள் ஏன்?
  தீபாவளியன்று என்ன செய்ய வேண்டும்?
  கிருஷ்ணர் கண்ணை மூடிக் கொண்டது ஏன்?
  இறைவன் ஆடிய நடனங்கள்
  யாரை வணங்கலாம்? யாரை வணங்கக் கூடாது?
  செய்யக்கூடியதும் செய்யக்கூடாததும்
  கணவனைக் காக்கும் சாவித்திரி நோன்பு
  விநாயகர் வழிபாட்டுக்கான இலைகள்
  இறைவனை வழிபட்ட பிற உயிரினங்கள்
  நவராத்திரி பூஜை ஏன்?
  வேள்விகளும் பலன்களும்
  காசிக்கு சென்று எதை விட்டு வரவேண்டும்?
  பசுவும் பாம்பும் கடவுளாகுமா?
  அம்பலப்புழா பால் பாயாசம்
  துர்க்கையம்மனை ராகு காலத்தில் வழிபடுவது ஏன்?
  சிவபெருமான் அபிஷேகப் பலன்கள்
  ஈசன் உபதேசித்தத் தலங்கள்
  பரமபதம் விளையாட்டு ஏன்?
  வேள்வி மந்திரங்களும் - வேள்வியின் பலன்களும்
  பதின்மூன்று வகை சாபங்கள்
  இறை வழிபாட்டில் வில்வம், துளசி ஏன்?
  சரஸ்வதிக்கு வெள்ளைப்புடவை ஏன்?
  பிரதோஷங்களும் வழிபாட்டுப் பலன்களும்
  சண்டிகேசுவரருக்கு தனிமரியாதை ஏன்?
  உணவு வழித் தோசங்கள்
  திருமாலின் தோற்றங்களில் அழகிய தோற்றம்
  மகாலட்சுமி வசிக்கும் இடங்கள்
  பஞ்சகவ்யம் அபிசேகம் ஏன்?
  நந்தியை எத்தனை முறை வலம் வருவது?
  சிவன் சொத்து குல நாசம் – பொருள் என்ன?
  மாவிளக்கு ஏற்றுவதன் பலன்கள்
  இராமேஸ்வரத் தீர்த்தங்களும் பலன்களும்
  பட்டினத்தார் சொன்னதன் பொருள் என்ன?​
  கலியுகத்தில் என்னென்ன நடக்கும்?
  அனுமனுக்கு வடை மாலையா? ஜிலேபி மாலையா?
  தீர்க்க சுமங்கலி பவா


தேனி மு. சுப்பிரமணி எழுதிய நூல்கள்

                                                                       


இங்குள்ள படைப்புகளை வணிக நோக்கமின்றி “படைப்பாளர் பெயருடன் நன்றி: முத்துக்கமலம் இணைய இதழ்” என்று குறிப்பிட்டுப் பகிர்ந்து கொள்ளலாம்
Creative Commons License
This work is licensed under a Creative Commons Attribution-NonCommercial-ShareAlike 4.0 International License