தவறுகள்
தவறுகள் செய்வது
மனித இயல்பு
பல நேரங்களில்
எதிர்பாராமல்
நிகழ்வதுண்டு.
சில தருணங்களில்
சூழ்நிலைகளில்
சிக்கல்களில்
பலரது முன்னிலையில்
தெரிந்தே தவறுகள்
நேர்ந்து விடுவதுண்டு.
தவறுகள்
செய்ய விரும்பாமல்
முன்னெச்சரிக்கையாயிருந்து
தவறுகள் நேர்வதைத்
தவிர்க்க நினைக்கிறார்கள்.
தவறுகள் செய்கிறவன்
தொடர்ந்து
தவறுகள் செய்பவனாகவே
இருக்கிறான்.
தவறுகள் செய்யப் போகிறவனுக்கு
தவறுகள்
செய்யாதே என்று
தவறுகள் செய்பவனே
புத்திமதி கூறினால்
அவன்
தவறுகள் செய்யாமலிருந்து
தப்பிக்க முடியுமா?
தவறுகள் செய்திடும்
கணினியின் தவறை
மனிதன் திருத்துகிறான்
மனிதன் செய்திடும்
மனிதத் தவறை
யார் திருத்துவது?
- ந.க. துறைவன், வேலூர் – 632 009.

இது முத்துக்கமலம் இணைய இதழின் படைப்பு.